பிக் பாஸுக்குள் நீங்கள் செய்தது இதுதான்! நல்லது, கெட்டதை அம்பலப்படுத்திய வீடியோ.. கதறி அழுத பிரபலம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் ஜனவரி 17ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பிக் பாஸ் வீட்டிற்குள் இறுதி கட்டத்திற்கு தேர்வான போட்டியாளர்களின் பயண வீடியோ காட்டப்பட்டிருக்கிறது. அதை பார்த்ததும் போட்டியாளர்கள் கதறி அழுத்திருக்கிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடத்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது நாளை மறுநாளுடன் முடிவடைய இருக்கிறது. இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் எந்த நிகழ்ச்சியில் ரயான், முத்துக்குமரன், பவித்ரா, விஜே விஷால் மற்றும் சௌந்தர்யா என 5 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களும் பிறகு ஆறு போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தனர். ஆக மொத்தம் 24 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 5 போட்டியாளர்கள் மட்டும்தான் இன்னும் இருக்கிறார்கள். இப்படியான நிலையில் நேற்று நடந்த சம்பவம் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
இந்த வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க் தொடங்கப்பட்டது. அதில் இதுவரைக்கும் இல்லாத வகையில் புதுமையாக பணப்பெட்டி டாஸ்க் தொடக்கப்பட்டது. இதில் பணப்பெட்டியை எடுக்கும் போட்டியாளர்கள் இந்த சீசனில் தொடரலாம் ஆனால் குறிப்பிட்ட டைமுக்குள் பிக் பாஸ் வீட்டிற்குள் பணப்பெட்டியோடு வரும் போட்டியாளர்களுக்கு மட்டும்தான் அந்த பணம் சேரும். அதே நேரத்தில் அவர்களால் நிகழ்ச்சியில் தொடர முடியும்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் டாஸ்கை கம்ப்ளீட் செய்யாத போட்டியாளர்களால் நிகழ்ச்சியில் தொடர முடியாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் முத்துக்குமரன், பவித்ரா, ரயான் மற்றும் விஜே விஷால் போன்றோர் டாஸ்கை கம்ப்ளீட் செய்திருந்தனர். அதுபோல சௌந்தர்யா டாஸ்கை தொடங்கி இருந்தாலும் பணப்பெட்டியை எடுக்காமலே குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்குள் வந்து விட்டார். அதனால் அவரும் டாஸ்க் தொடர்ந்தார்.
ஆனால் ஜாக்குலின் 8 லட்சம் பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் வந்துவிடலாம் என்று முயற்சி செய்தார். ஆனால் இரண்டு நொடியில் அவர் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டுவிட்டார். அதனால் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது அதிகமான ரசிகர்களை ஃபீல் பண்ண வைத்தது. இவரும் எப்படியும் டாப் 3 இடங்களுக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வெளியேற்றம் இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது.
இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் உள்ளே இருக்கும் ஐந்து போட்டியாளர்களின் பயண வீடியோ காட்டப்பட்டிருக்கிறது. அதில் போட்டியாளர்கள் செய்த நல்ல செயல் மற்றும் சண்டை சச்சரவுகள் அதில் காட்டப்பட்டு இருக்கிறது. அதை பார்த்து எல்லா போட்டியாளர்களும் உணர்வு பூர்வமாக கண்கலங்கி அழுது இருக்கிறார்கள்.
முத்துக்குமரன் நான் செய்த சாதனையே இதுதான் என்று நினைப்பேன், இதுபோல ஒரு வீடியோ எனக்கு இந்த வியப்பை இனி தராது என்று உருக்கமாக பேசி இருக்கிறார். அதுபோல விஜே விஷால் என்னை பற்றி எத்தனையோ பேர் என்ன வேணாலும் சொல்லலாம் ஆனால் இந்த வீடியோ எனக்கு போதும் என்று சொல்கிறார்.
அடுத்ததாக சௌந்தர்யா எனக்கு இந்த வீடியோ வெற்றி கிடைத்ததற்கு சமமாக கருதுகிறேன் என்று சொல்கிறார். இப்படியான எல்லா போட்டியாளர்களும் எமோஷனலாக பேசியிருக்கிறார்கள். இதனால் இன்றைய எபிசோடில் சண்டை இல்லாமல் நெகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications