பிக் பாஸ் Freeze taskல் வீட்டிற்கு வந்த தீபக் மனைவி கேட்ட கேள்வியால் அதிர்ச்சியில் அருண்! செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் இன்று ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. அதில் தீபத்தின் மனைவி மற்றும் மகன் வந்திருக்கின்றனர். அவர்கள் அருணிடம் தீபக் பற்றி பேசியது குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. இன்னும் சில நாட்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இறுதி கட்டத்தை இந்த நிகழ்ச்சி எட்டி இருக்கும் நேரத்தில் எல்லோரும் எதிர்பார்த்திருந்த பிரீஸ் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது.

பிக் பாஸ் வீட்டிற்கு இப்போது குறைவான போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பத்தினர் வரும்போது அவர்களுடைய உணர்வுகள் என்ன மாதிரி இருக்கும் என்று ஒவ்வொரு சீசனிலும் மக்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். அந்த வகையில் இன்று தொடங்கிய ஃப்ரீஸ் டாஸ்க் முதல் போட்டியாளராக தீபத்தின் குடும்பத்தினர் தான் வந்திருக்கின்றனர்.
காலையிலேயே ஸ்டோர் ரூம் வழியாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற தீபக்கின் மனைவியும் மகனும் நேராக பெட்ரூம் அருகே சென்று தீபக்கின் அருகில் படுத்துக்கொண்டனர். பின்னர் தீபக் கண் விழித்து பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார். அதை தொடர்ந்து தீபக் மனைவி பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றிய தனது பார்வையை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து லிவிங் ஏரியாவில் தீபக் மனைவிக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் எந்த போட்டியாளரின் கருத்தில் உங்களுக்கு முரண்பாடு இருக்கிறது என்பதை தெரிவிக்குமாறு கூறினார்கள். அப்போது சிறிது நேரம் யோசித்த தீபக் மனைவி அருண் பிரசாத் என்று கூறினார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீபக் உடன் சண்டையிட்டு வெளியே சென்று சத்யாவிடம் சொன்ன வார்த்தை தன்னை மிகவும் காயப்படுத்தியதாக கூறினார்.

அதாவது தீபக்குடனான சண்டைக்கு பிறகு கார்டன் ஏரியாவுக்கு சென்று சத்யாவிடம் பேசும்போது நான் இப்போ ட்ரெண்டில் இருக்கிற ஹீரோ, என்கிட்டயே இவர் இப்படி நடந்துக்கிறாரே.. அப்போ அவர் ட்ரெண்டிங்கில் இருக்கும்போது அவருடைய அசிஸ்டன்ட் கிட்ட எப்படி நடந்து இருப்பார்? என்று பேசி இருக்கிறார். அது தன்னை மிகவும் காயப்படுத்தியதாக தீபக் மனைவி கேட்டார்.
அதோடு உங்களுக்கு அவர் பற்றி பர்சனலா என்றும் தெரியாது. அவர் யாரையும் அப்படி தவறாக நடத்தி நீங்கள் பார்த்ததில்லை. நீங்கள் யூகித்து சொன்ன ஒரு விஷயம்தான் அது. எனக்கு அது அவருடைய கேரக்டரை கொச்சைப்படுத்தும் ஒரு செயலாக தான் தெரிந்தது என அவர் சொன்னதை கேட்டு அருண் அதிர்ச்சியில் உறைந்து போனார். இதனால் இன்றைய எபிசோடில் செம சம்பவம் இருக்கிறது என்று மட்டும் தெரிகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications