பிக் பாஸ் அருணுக்கும், முத்துக்குமரனுக்கும் இப்படி ஒரு உறவா? குடும்பத்தின் வருகையால் உடைபட்ட ரகசியம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று இருக்கிறது. அதில் குடும்பத்தினரின் வருகையால் அருண் மற்றும் முத்துக்குமரன் இருவரும் உறவினர்கள் என்று தெரிய வந்திருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கி 80 நாட்களை கடந்துவிட்ட நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரத்தில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்களின் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர்கள் இந்த வாரம் முழுக்க வந்து கொண்டே இருக்கிறார்கள்.

முதல் முதலாக தீபக் ஃபேமிலி வந்தது. அதிலிருந்து நிகழ்ச்சி களைகட்ட தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து கொண்டிருக்கின்றனர். இன்றைய எபிசோடில் காலையில் ஜெஃப்ரியின் குடும்பத்தினர் வந்தனர். அதைத் தொடர்ந்து அருண் குடும்பத்தினர் வந்தனர். அடுத்ததாக முத்துக்குமரனின் பெற்றோர் வந்தனர்.
இறுதியில் நேற்றிலிருந்து எதிர்பார்த்த ஜாக்குலின் அம்மாவும் சகோதரி, சகோதரர் உட்பட பலர் வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் எதிரும் புதிரும் ஆக அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்த முத்துக்குமரனும், அருணும் சகோதரர் என்ற உண்மை இன்று தெரிய வந்திருக்கிறது.
ஆரம்பத்தில் முத்துக்குமரன் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே மொத்த ஆண்கள் அணியினரும் கேட்டுக் கொண்டனர். பிறகு வார இறுதியில் விஜய் சேதுபதி அனைவரையும் ரோஸ்ட் செய்யும் போது எல்லாத்துக்கும் காரணம் முத்துக்குமரன் தான். முத்துக்குமரன் சொன்னதைத்தான் நாங்கள் செய்தோம் என்று அருண் உட்பட எல்லா போட்டியாளர்களும் முத்துக்குமரனை கைகாட்டி இருந்தனர்.
அப்போது விஜய் சேதுபதி மொத்தமாக எல்லாரையும் திட்டி கொண்டிருந்தார். அதற்குப் பிறகு விஷால், அருண், சத்யா போன்றோர் முத்துக்குமரனிடமிருந்து தனித்திருக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர். அப்போது முத்துக்குமரன் பேசுவதை எல்லாம் அருண் ட்ரோல் செய்து கொண்டே இருந்தார்.
அதோடு முத்துக்குமரனை "டப்பா", "டமுக்கு டப்பா" என்றெல்லாம் வசைப்பாடி வந்தார். இது இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. இது குறித்த மீம்ஸ்களும் அதிகமாகி வந்தது. இந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த அருணின் பெற்றோர் முத்துக்குமரன் எங்களுக்கு ஏற்கனவே சொந்தக்காரர் முத்துக்குமரனும், அருணும் உறவினர்கள். அதுவும் அண்ணன் தம்பி முறை என்று சொல்லி இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகுதான் எங்களுக்கு இருவரும் உறவினர் என்று தெரியவரும் என்றும் கூறி இருக்கிறார்கள். இது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில் இவர்கள் இருவரும் உறவினர்கள் தானா? அல்லது பிக் பாஸ் எதுவும் டாஸ்க் கொடுத்து இவர்கள் பேசிக் கொள்கிறார்களா? என்று தெரியவில்லை. ஆனாலும் இது பற்றிய உண்மை இன்றைய எபிசோடில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications