பிக் பாஸில் லேடீஸ் பாத்ரூமை எட்டி பார்த்த ஆண் போட்டியாளர்! எச்சரித்த ஜாக்குலின்! கட்டம் கட்டுறாங்களே
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நேற்று ஆண் போட்டியாளர்களில் ஒருவர் தங்கள் பாத்ரூமை எட்டிப் பார்த்ததாக ஜாக்குலின் குற்றம் சாட்டி இருக்கிறார். இதற்கு விஜய் சேதுபதி என்ன முடிவு சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக்க பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியையும், சர்ச்சைகளையும் பிரித்து பார்க்க முடியாது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து சர்ச்சைகள் அதிகரித்து விடுவது வழக்கம்தான். ஒவ்வொரு சீசனிலும் இது தொடர்ந்து வந்தாலும் தற்போதைய பிக் பாஸ் தமிழ் எட்டாவது சீசனிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளும் பரபரப்பு ஏற்பட்டு கொண்டு இருக்கிறது.

பிக் பாஸ் வீட்டிற்குள் ஆண்கள் பெண்கள் பாகுபாடு இல்லை என்று இதுவரைக்கும் சொல்லி வந்த நிலையில் இந்த முறை ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் போட்டி போடும் வகையில் வீட்டை இரண்டாக பிரித்து இருக்கிறார்கள். இதனாலையே ஆண்களா பெண்களா என்ற ஆதிக்க மனப்பான்மை பலருடைய மனதில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது.
ஆண்கள் பெண்களுக்கு டாஸ்க் என்கிற பெயரில் அவர்களை டார்ச்சர் செய்து வருகிறார்கள். பெண்கள் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று நடந்த சம்பவம் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அதாவது நேற்று ஆண்கள் அணியினர் பெண்கள் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்திற்கு வரவேண்டும் என்றால் எங்களிடம் அனுமதி வாங்கி தான் வரவேண்டும் என்று சொல்லி இருந்தனர்.
அப்போது ஒரு முறை ஆண் போட்டியாளர்கள் எல்லோரும் பெட்ரூமில் பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ஜாக்லின் கிச்சன் செல்ல, அங்கு யாரும் இல்லாததால் அனுமதி கேட்காமலேயே உள்ளே நுழைந்து விட்டார். இது நேற்று பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தியது. அதோடு விதியை மீறி பாத்திரம் கழுவும் லிக்யூடை திருடி சென்று லேடீஸ் பாத்ரூமில் உள்ள வாஷ்பேஷன் அருகே மறைத்து வைத்திருக்கிறார்.
இதை கண்டுபிடித்த ஆண் அணியினர் அவரிடம் இருந்து அதை திரும்ப பெறுவதற்காக அதை எடுத்துவர சொல்லி இருந்தனர். ஆனாலும் ஜாக்குலின் அதிலும் முழுமையாக அவர்களிடம் கொடுக்காமல் பாதியை ஒரு கப்பில் ஊற்றி வைத்துவிட்டு மீதி உள்ளதை மட்டும் கொடுத்திருக்கிறார். ஜாக்குலின் இந்த செயலை ஜெஃப்ரி எட்டி பார்த்திருக்கிறார்.
அதை கவனித்த ஜாக்லின் நீ ஏன் எங்க பாத்ரூமை எட்டி பாக்குற? ரொம்ப தப்பா இருக்கு என்று எச்சரித்து இருக்கிறார். இதுதான் இப்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. நிகழ்ச்சியில் சிறு பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஜாக்குலின் திருட்டு வேலை செய்தாலும் அதை ஜெஃப்ரி பார்த்ததற்கு எங்க பாத்ரூமில் நீ ஏன் எட்டி பாக்குற என்று அவர் மீது குற்றம் சாட்டுவது போல ஜாக்லின் பேசியிருப்பது குறித்து பலரும் இது போன்று பேசுவது தவறு என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அதோடு நேற்று நடந்த நாமினேஷனில் கூட ஜெஃப்ரிக்கு கொஞ்சம் இடம் கொடுத்தால் அவன் ரொம்ப தப்பா நடந்துக்கிறான் என்று சௌந்தர்யா நாமினேஷன் செய்திருந்தார். ஆரம்பத்தில் ஜெஃப்ரி பெண் போட்டியாளர்களிடம் தான் அதிகமாக பேசிக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு விஜய் சேதுபதி கடந்த வாரத்தில் ஜெஃப்ரியை கிண்டல் செய்ததை தொடர்ந்து பெண் போட்டியாளர்கள் அவரிடம் இருந்து விலக தொடங்கி இருக்கின்றனர்.
ஆனால் ஜெஃப்ரி மீது பெண்கள் வைக்கும் குற்றசாட்டு உண்மையானதா? அல்லது ஜெஃப்ரியை ஓரம் கட்டுவதற்காக இவர்கள் இந்த மாதிரி குற்றச்சாட்டு வைக்கிறார்களா? என்ற விவாதம் எழுந்து வருகிறது. கடந்த சீசனில் பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு முத்திரையை குத்தி வெளியேற்றப்படது போல இந்த சீசனில் ஜெஃப்ரி மீது பெண்கள் குற்றச்சாட்டுகளை வைத்து வெளியே அனுப்புவதற்கு ஆக இப்படி நடந்து கொள்கிறார்களா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகிறது. இது குறித்து இந்த வாரத்தில் விஜய் சேதுபதி இந்த விவாகரத்தில் தலையிடுவாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications