அழுதாலும், சாதனை செய்து எவிக்ஷனான ஜாக்குலின்.. பிக் பாஸ் கொடுத்த விலை மதிப்பில்லா பரிசு.. நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் நேற்று ஜாக்குலின் எலிமினேட் ஆன நிலையில் அவருக்கு பிக் பாஸ் யாரும் எதிர்பார்க்காத பரிசு ஒன்றை கொடுத்து இருக்கிறார். ஏற்கனவே இதே பரிசு மஞ்சரி கேட்டபோது அவருக்கு கொடுக்க மறுத்த பிக்பாஸ் இப்போது ஜாக்குலின்க்கு மட்டும் கொடுத்திருப்பது பாராட்டப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜாக்குலின், சௌந்தர்யா, முத்துக்குமாரன், பவித்ரா, விஷால், ரயான் ஆகிய ஆறு பேர் பினாலேவிற்கு சென்றிருந்தனர். இவர்களில் ஒருவர் தான் டைட்டில் ஜெயிக்கப் போகிறார் என்று எல்லாராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று நடந்த டாஸ்க்கில் யாரும் எதிர் பார்க்காத வகையில் ஜாக்குலின் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

bigg boss tamil bigg boss tamil 8 8

இந்த வாரம் முழுக்கவே பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு அறைக்குள் இருக்கும் பணப்பெட்டியை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்துக் கொண்டு வர வேண்டும்.சரியான நேரத்திற்குள் பெட்டியை கொண்டு வரும் போட்டியாளர்களுக்கு அந்த பணமும் வழங்கப்பட்டு அவர் காப்பாற்றப்படுவார். அதே வேலையில் பணப்பெட்டியை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்துவர முடியாவிட்டால் அந்த போட்டியாளர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதில் முதல் ஆளாக முத்துக்குமரன் துணிச்சலாக களமிறங்கி வைத்திருந்தார். அவர் ஐம்பதாயிரத்திற்கான பணப்பட்டியை எடுத்து வந்தார் அதை தொடர்ந்து இரண்டு லட்சத்திற்கான பணப்பெட்டியை ரயான் மற்றும் பவித்ரா எடுத்துக்கொண்டு வந்தனர். பின்னர் 5 லட்சத்திற்கான பணப்பெட்டி வைக்கப்பட்டது. அப்போது சௌந்தர்யா ஓடி சென்றாலும் பக்கத்தில் போய் பெட்டியை எடுக்காமல் திரும்பி வந்து விட்டார்.

அடுத்ததாக விஷால் விறு விறுவென ஓடி சென்று ஐந்து லட்சத்திற்கான பெட்டியை தூக்கிக்கொண்டு வந்தார். கடைசியாக 8 லட்சத்திற்கான பணப்பெட்டி வைக்கப்பட்டது. அப்போது ஜாக்குலின் 35 வினாடிகளில் 80 மீட்டர் தொலைவில் இருக்கும் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு உள்ளே வரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த சவாலை ஏற்று ஓடிய ஜாக்குலின் ஏற்றுக்கொண்டு உள்ளே வந்தாலும் அவர் இரண்டு வினாடிகள் கால தாமதமாகிவிட்டது என்று அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவதாக பிக் பாஸ் அறிவித்தார். ஏற்கனவே அவர் இந்த டாஸ்கில் கலந்து கொள்ளும்போது கதறி அழுது கொண்டிருந்தார்.

அப்போது பிக் பாஸ் எதற்காக என்று கேட்டபோது என்னால் இந்த வீட்டிற்குள் மீண்டும் வராமல் போய்விடுமோ என்று எனக்கு பயமாய் இருக்கிறது பிக்பாஸ் என்று சொல்லியிருந்தார். அதற்கு எல்லா போட்டியாளர்களும், பிக் பாஸும் ஆறுதல் கூறி தான் அவரை இந்த டாஸ்கில் கலந்து கொள்ள வைத்தனர்.

ஆனால் அவர் நினைத்தது போலவே எவிக்ஷன் ஆகிவிட்டது. உள்ளிருந்த எல்லா போட்டியாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாகி இருந்தது. ஜாக்குலின் எவிக்ஷன் என்று அறிவித்ததும் கதறி அழுதார். அதுபோல ஒவ்வொரு போட்டியாளரும் எலுமினேட் ஆகும்போது அவர்களுக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட டம்மி டிரோபி உடைக்க வேண்டும், ஆனால் ஜாக்குலின் எலிமினேட் ஆகும்போது அந்த டிராபியை உடைக்க வேண்டாம் என்று பிக் பாஸ் அவருக்கு அதனை பரிசாக வழங்கி நெகிழ்ச்சி அடைய வைத்தார்.

ஏற்கனவே இதுபோல மஞ்சரி வெளியே செல்லும்போது நான் இந்த டிராபியை உடைக்காமல் என்னுடைய மகனுக்காக கொண்டு போகிறேன் என்று கேட்டபோது கூட பிக்பாஸ் அவருக்கு கொடுக்கவில்லை. ஆனால் கடைசி வாரத்தில் பெரும் சாதனை செய்து வெளியேறிய ஜாக்குலின்க்கு அந்த சிறப்பு பரிசு பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார்.

இந்த சீசனில் 15 நாமினேஷன் நடைபெற்றது 15 நாமினேஷனிலும் ஜாக்குலின் இடம் பிடித்திருந்தார். இது பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் இத்தனை முறை நாமினேட்டான போட்டியாளர் எவரும் இல்லை. அது மட்டும் அல்லாமல் எல்லா முறையும் கடைசி வரை இவரை மக்கள் காப்பாற்றி வந்தனர். அதுபோல இந்த சீசனில் ஒரு முறை கூட கேப்டன் பதவியை ஏற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிய ஜாக்லினுக்கு அவரே எதிர்பார்க்காத பரிசை பிக் பாஸ் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+