இப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கல.. இதை சொல்லியே ஆகணும்! ஜாக்குலின் வெளியிட்ட முதல் வீடியோ
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஜாக்குலின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எவிக்ஷன் செய்யப்பட்ட பிறகு முதல் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் தனக்கு வாக்கு செலுத்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
கடந்த அக்டோபர் மாதத்தில் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சி பற்றி கடந்த 100 நாட்களாக இணையத்தில் பேச்சு அதிகமாக இருந்தது. ஆனாலும் நேற்று நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு இந்த நிகழ்ச்சி பற்றி தான் ரசிகர்கள் அதிகமாக விவாதித்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்ற போது ஜாக்குலின் அதிரடியாக வெளியேற்றப்பட்டது எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்தது ஜாக்குலின் டாப் 3 போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். இது விஜய் டிவி செய்த நாடகம் என்றெல்லாம் விமர்சித்து வந்தனர்.
அதுபோல நேற்று கிராண்ட் பினாலே மேடையில் ஜாக்குலினுக்காக பயண வீடியோ போடப்பட்ட போது அங்கிருந்து பார்வையாளர்கள் ஆர்ப்பரித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர். அதுபோல இணையத்திலும் அதிகமான ஆதரவு ஜாக்குலினுக்கு இருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜாக்குலின் முதல் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அதில் மக்கள் எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. நான் வெளியே வந்த பிறகு இவ்வளவு லவ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கல. நிஜமா மக்கள் இவ்வளவு லவ் கொடுப்பதற்கு நான் என்ன பண்ணுனேன் என்று எனக்கு தெரியல. முகம் தெரியாத பலர் எனக்காக அழுததை நான் பார்த்தேன். அது எனக்கு வருத்தத்தை கொடுத்து இருக்கிறது.
இதற்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. உங்க லவ்வையும் சப்போர்ட்டையும் கண்டிப்பா நான் பத்திரமா சேர்த்து வச்சுக்குவேன். தேங்க்யூ சோ மச் மக்களே. நான் பினாலே முடிஞ்சு பிறகு உங்க எல்லாரிடமும் பேசணும். முகம் தெரியாத பலர் எனக்காக பீல் பண்ணுனீங்க. உங்களுடைய கேள்விகளுக்கு நான் லைவில் பதில் சொல்கிறேன். என்னுடைய அன்பை நான் உங்களிடம் சொல்லியே ஆகணும். சீக்கிரமா பேசுறேன் என்று அந்த வீடியோவில் ஜாக்குலின் பேசியிருக்கிறார்.

இதுவரைக்கும் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரும் செய்யாத சாதனையை ஜாக்குலின் செய்திருந்தார். அதாவது இந்த சீசனில் 15 எவிக்ஷன் நடைபெற்றது. அந்த 15 எவிக்ஷனிலும் ஜாக்குலின் பெயர் இடம் பெற்றுள்ளது. அவரை 15 முறையும் மக்கள் காப்பாற்றி இருந்தனர். ஆனால் பணப்பெட்டி டாஸ்க்கில் தான் இரண்டு நொடி தாமதத்தால் அவர் எவிட் செய்யப்பட்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications