பிக் பாஸ் 8: நேற்று ஆண்கள் செய்த தரமான சம்பவம்.. பாராட்ட வைத்த அன்ஷிதா செயல்.. இதுதான் சிறப்பு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நேற்றைய தினம் ஆண்கள் அணியினர் அன்ஷிதாவிற்கு சாப்பாடு கொடுக்காமல் சாப்பிட தொடங்கிவிட்டனர். ஆனால் அன்ஷிதா வந்து பாவமாக கேட்டபோது அவர்கள் செய்த செயல் பலருடைய பாராட்டைப் பெற்று வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில நேரங்களில் சில சுவாரசியமான சம்பவங்களும் நடக்கிறது. அந்த மாதிரி தான் நேற்று போட்டியாளர்கள் செய்த செயல் பாராட்ட தக்கதாக இருந்தது. அதாவது நேற்று 36 ஆவது நாள் நடந்து கொண்டிருந்தது. இந்த வாரத்தில் பெண்கள் தரப்பில் இருந்து ஆண்கள் வீட்டிற்குள் அன்ஷிதா தான் அனுப்பப்பட்டார்.

இதுவரைக்கும் ஆண்கள் வீட்டிற்குள் சாப்பிடுவதற்கு முன்பு எல்லோருக்கும் சரிசமமாக உணவு பொருட்களை எடுத்து வைத்து விட்டு சாப்பிடுவது தான் வழக்கம். ஆனால் நேற்று அன்ஷிதா ஆண்கள் அணிக்கு சென்றதை மறந்து எல்லா ஆண்களும் சாப்பிட்ட தொடங்கிவிட்டனர். அப்போது பெண்கள் அணியினரோடு பேசிக்கொண்டிருந்த அன்ஷிதா, பாருங்களேன் நான் சாப்பாடு கேட்ட போது இப்போதான் உலை வச்சிருக்கோம் இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்னு சொன்னாங்க அதுக்குள்ள சாப்பாடு ரெடி ஆயிட்டா? என்று சாப்பிடுவதற்காக அவர்களோடு வர அதற்குள் ஆண்கள் எல்லோரும் சாப்பிட தொடங்கி விட்டனர்.
அவர்களை நோக்கி அன்ஷிதா வந்ததை பார்த்ததும் தீபக் முதலில் அன்ஷிதா வராங்க என்று சொல்ல, அதற்கு பிறகு தான் முத்துக்குமரனுக்கு அன்ஷிதா இருப்பதே நினைவு வந்திருக்கிறது. உடனே தன்னுடைய தட்டில் இருந்த பொரியலை ஒரு பவுலில் போட்டு அதை அன்ஷிதாவிடம் கொடுத்து இது உனக்காக எடுத்து வைத்தது தான் என்று சமாளிக்கிறார்.
அதற்கு அன்ஷிதா நீ சாப்பாட்டில் வைத்த பொரியலை எடுத்து வச்சிருக்க என்பது எனக்கு தெரியுது. உண்மையை சொன்னா கூட நான் ஏற்றுக்கொள்வேன் ஆனால் என்கிட்ட பொய் சொல்லாதீங்க என்று சொல்கிறார். ஆனாலும் ஆண்கள் இதை எப்படியாவது சமாளித்து விடலாம் என்று மீண்டும் மீண்டும் பொய் சொல்லிக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் அன்ஷிதா கோபமாகி எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று கிளம்புகிறார்.
அதோடு நான் இன்று சாப்பிட்டால் நீங்க நாளைக்கு என்னை மறந்திடுவீங்க. நான் சாப்பிடலைன்னா தானே உங்க அணியில் நானும் இருக்கிறேன் என்று சாப்பாடை எடுத்து வைப்பீங்க என்று போராட்டத்தை தொடங்க அதற்கு ஆண்கள் மொத்த பேரும் தங்கள் தரப்பு தப்பை புரிந்து கொண்டு அன்ஷிதாவிடம் கெஞ்ச போயிருந்தனர்.
மன்னிப்பு கேட்பதற்காக மொத்த ஆண்களும் வந்ததும் அதுவரைக்கும் சாப்பிடவே மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்த அன்ஷிதாவும் மனம் இறங்கி விட்டார். இது நேற்று நடந்த நிகழ்வுகளில் ஹைலைட்டாக தான் பார்க்கப்படுகிறது. அதுபோல பெண்கள் அணியில் இருந்து அன்ஷிதா தான் ஆண்கள் அணிக்கு சென்றதும் எனக்கு அந்த ஓரத்தில் பெட்டுக்கு இடம் தந்துருங்க என்று சொல்லி இருந்தார்.
அதோடு இன்னொரு வார்த்தையும் சொல்லி இருந்தார். அதாவது என்னுடைய பெட்டில் யார் வேணும் என்றாலும் என்னோடு படுத்துக்கொள்ளலாம் எனக்கும் ஒரு அண்ணன் இருக்கிறாங்க. அண்ணனோடு நான் இருப்பது போன்று தான் உங்களோடு நான் இருக்கிறேன் என்று சொல்லி இருந்தார்.
இது தன்னோடு இருப்பவர்கள் மீது தனக்கு இருக்கும் நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். இத்தனை நாட்களாக இந்த நிகழ்ச்சியில் இருக்கும் நிலையில் கூட இருப்பவர்கள் பற்றி நம்பிக்கையாக அவர் பேசியதும் பாராட்டப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications