பிக் பாஸ் 8 டைட்டிலை தட்டி தூக்கிய முத்துக்குமரன்? மொத்த பரிசு தொகை இவ்வளவு தானா? கடைசியில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நாளை (ஜனவரி 19ஆம் தேதி) நடைபெற இருக்கிறது. அதில் இந்த சீசனில் டைட்டில் வின்னராக யார் ஜெயித்தார் என்று அறிவிக்கப்படும். ஆனால் அதற்கு முன்பு இன்று சூட்டிங் நடைபெற்ற நிலையில் அதில் முத்துக்குமரன் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவருக்கு இந்த சீசனில் கிடைத்த பரிசு தொகை விபரமும் வெளியாகியிருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து நிகழ்ச்சி பற்றிய பேச்சு இணையத்தில் அதிகமாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக இறங்கி இருக்கிறார். இவருடைய தனி ஸ்டைல் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

bigg boss tamil television bigg boss tamil 8 8

அதேபோல இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 24 போட்டியாளர்கள் (வைல்டு கார்ட் போட்டியாளர்களையும் சேர்த்து) கலந்து கொண்டனர். கடைசி வாரத்தில் ஆறு போட்டியாளர்கள் மட்டுமே இருந்தனர். இதில் பணப்பெட்டி டாஸ்க்கில் 2 நொடி தாமதத்தால் ஜாக்குலின் அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

ஜாக்குலின் வெளியேறிய பிறகு முத்துக்குமரன், விஷால், சௌந்தர்யா, பவித்ரா மற்றும் ரயான் என 5 போட்டியாளர்கள் மட்டும் எஞ்சி இருக்கின்றனர். ஏற்கனவே எவிக்ஷனாகி வெளியே போன போட்டியாளர்கள் கடந்த இரண்டு வாரங்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ என்ட்ரி கொடுத்து பைனலுக்கு தேர்வான போட்டியாளர்களின் மனதை குழப்பி அவர்களை பாடாய் படுத்தி எடுத்து வந்தனர்.

ஆனாலும் நாங்கள் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் என்று 8 போட்டியாளர்கள் மட்டும் தவித்து வந்தனர். ஆனால் கடந்த வாரத்தில் தீபக் மற்றும் அருண் அதிரடியாக வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தீபக் இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருடைய வெளியேற்றம் அவரை விடவும் அவருடைய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

தீபக் வெளியேறிய பிறகு இந்த சீசனில் முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னராக வருவார் என்பது பலருடைய பேச்சாக இருந்தது. தற்போது அவர்தான் டைட்டில் வெற்றி கோப்பையை பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. நாளை கிராண்ட் பினாலே ஆறு மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கு இன்று சூட்டிங் நடைபெற்று இருக்கிறது.

bigg boss tamil television bigg boss tamil 8 8

அதில் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது. அது போல அவர் வாங்கிய பரிசுத்தொகை விவரங்களும் வெளியாகி இருக்கிறது. பொதுவாக பிக் பாஸ் வின்னர்களுக்கு 50 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும். ஆனால் இந்த முறை பரிசு பெட்டியில் எடுக்கப்படும் பணம் அந்த 50 லட்சத்திலிருந்து குறைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

அதில் முத்துக்குமரன் ஐம்பதாயிரம் முதலில் எடுத்தார். அவரை தொடர்ந்து விஷால் 5 லட்சமும், ரயான் மற்றும் பவித்ரா தலா இரண்டு லட்சங்கள் எடுத்திருந்தனர். இதனால் 9 லட்சத்து 50 ஆயிரம் போக 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முத்துக்குமரனுக்கு சேரும். அதோடு அவர் பணப்பெட்டியில் எடுத்த ஐம்பது ஆயிரமும் சேர்த்து அவருக்கு 41 லட்சம் மொத்த தொகையாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதில் டேக்ஸ் எல்லாம் போக மீதமுள்ள தொகை தான் முத்துக்குமரனுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+