பிக் பாஸ் 8: அழுது ஆர்ப்பாட்டம் செய்த தர்ஷா.. விஜே விஷால் கேட்ட கேள்வி.. அப்போ இது புது ஸ்டேடர்ஜியா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் அக்டோபர் 17ஆம் தேதிக்கான ப்ரோமோக்களில் தர்ஷா குப்தா அழுது கொண்டிருக்கும் காட்சிகள் தான் காணப்படுகிறது. அதற்கு காரணம் தான் செய்த சமையல் நல்லா இல்லை என்று எல்லோரும் குறை சொல்கிறார்கள் என்று தர்ஷா அழுது கொண்டிருந்த நிலையில் தர்ஷாவிடம் விஜே விஷால் சில கேள்விகளை கேட்டு இருக்கிறார்.
ஐயோ போதுமடா சாமி என்று சொல்லும் அளவிற்கு தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுகளும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து இந்த நிகழ்ச்சி பற்றியே இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது. ஆனால் போட்டியாளர்களின் செய்கைகளை விடவும் தொகுப்பாளராக வரும் விஜய் சேதுபதி தான் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

இந்த சீசனில் அதிகமான இளம் போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அதிலும் மக்களுக்கு நன்கு பரீட்சையமான சின்னத்திரை பிரபலங்கள்தான் என்பதால் இந்த நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும் என்று பார்த்தால் எதற்கெடுத்தாலும் சண்டையிலும், வாக்குவாதத்திலும் தான் ஈடுபடுகிறார்கள். நீ பெரிய ஆளா? உனக்கு தான் முக்கியத்துவமா? போட்டு பார்ப்போமா என்று பேசுவது போலவே இவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள்.
எப்படியாவது ப்ரோமோவில் நாம் இடம் பிடித்து விட வேண்டும் என்பதில் எல்லா போட்டியாளர்களும் கவனமாக இருக்கும் நிலையில் இன்றைய ப்ரோமோக்களில் தர்ஷா குப்தா அழுதே இடம் பிடித்து விட்டார். நேற்று அவர் செய்த செயலுக்கு வெடித்த பிரச்சனை தான் இன்று அவர் அழுகைக்கு காரணமாக இருந்தது. நேற்று நான் சமைக்கிறேன் என்று பொறுப்பெடுத்து சமைத்துக் கொண்டு இருந்த தர்ஷா குத்தா சட்னியில் அளவுக்கதிகமாக குழம்பு பொடியை தட்டி விட்டார்.

நாம் வீட்டில் குழம்பு வைத்தால் ஸ்பூன் வைத்து பொடிகளை எடுத்து குழம்பில் போடுவோம் அல்லது ஒரு மூடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தட்டி போடுவோம். ஆனால் தர்ஷா திறந்து அப்படியே தட்டுகிறேன் என்று முழுமையாக தட்ட பொடி அதிகமாகிவிட்டது. சரி பொடி அதிகமாக குழம்புக்குள் விழுந்துவிட்டால் அதை என்ன செய்யலாம்...? ஒரு கரண்டியை வைத்து அதிகமாக விழுந்த பொடியை அப்படியே எடுத்திருக்கலாம்.
அல்லது அந்த குழம்பு வேண்டாம் என்று வைத்துவிட்டு வேறு ஏதாவது சமைத்து இருக்கலாம். சட்னிக்குள் குழம்பு பொடி அதிகமாக விழுந்ததும் அதில் தண்ணியை ஊத்தி கரைத்து விட்டு நான் இனி என்ன பண்ண என்று யோசித்து கொண்டு இருக்கிறார். இதை பார்க்கும் ரசிகர்களே கலாய்ப்பார்கள். ஆனால் இதைத்தான் சாப்பிட வேண்டும் என்று இக்கட்டான சூழ்நிலையில் இருப்பவர்கள் கிண்டல் செய்யாமல் இருப்பார்களா?
நேற்று இந்த சாப்பாடை சாப்பிட்டு எல்லாருக்கும் கண்ணில் இருந்தும் மூக்கிலிருந்து தண்ணீர் ஊற்றியது. சாப்பிட முடியாமல் ஆண்கள் எல்லோரும் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் தர்ஷாவை யாரும் திட்டவில்லை. கிண்டல் செய்திருந்தனர் அதற்காக இன்று தர்ஷா அழுது இருக்கிறார். நான் ஏற்கனவே இன்னொரு ப்ரோக்ராம் அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து இருக்கிறேன்.

என்னுடைய சமையல் நல்லா இல்ல என்று இவர்கள் கிண்டல் செய்வதால் பார்க்கும் மக்கள் நான் அந்த சமையல் நிகழ்ச்சியில் ஏமாற்றிக் கொண்டிருந்தேன் என்று நினைப்பார்களே என்று ஃபீல் பண்ணி அழுது கொண்டு இருந்தார். இதற்கு தர்ஷாவின் ரசிகர்கள் எங்க தலைவியை யாருடா அழ வைக்கிறது என்று பொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரத்தில் பார்த்த ரசிகர்கள் தர்ஷா செய்த அலட்சியத்தால் தான் ஆண்கள் எல்லோரும் சாப்பிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறி வருகிறார்கள். இதற்கு மத்தியில் மூன்றாவதாக வெளியான ப்ரோமோவில் அழுது கொண்டிருந்த தர்ஷாவிற்கு பிஜே விஷால் அட்வைஸ் செய்கிறார்.
பசங்க உன்னை உரிமையா கலாய்க்கிறார்கள் என்றால் நீ அவங்களோட கேங்குல ஒருத்தங்களா இருக்கிறதால தான். உண்மையை சொல்லு நாங்க எல்லாரும் உன்ன கலாய்க்கும் போது நீயும் சிரிச்சுட்டு தானே இருந்த... என்று கேட்க, அதற்கு தர்ஷா ஆமாம் என்று சொல்கிறார். பிறகு அங்க பாத்ரூமில் வைத்து நீ அழும்போது உன்னிடம் யார் கேட்டார் என்று கேட்க, அதற்கு தர்ஷா தர்ஷிகா தான் கேட்டா என்று சொல்கிறார்.
அதற்கு விஷால் இங்க நடக்கிறதை எல்லாம் பார்த்தா பொண்ணுங்க எல்லாரும் சேர்ந்து கேம் விளையாடறாங்க. நீ இங்க இருந்து அங்க போனா கூட நீ இனி தனி ஆளாகத்தான் இருக்கணும். இதை மனதில் வச்சிக்க என்று அட்வைஸ் கொடுக்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications