பிக் பாஸ் 8: சுனிதா சொன்ன வார்த்தை.. கதறி அழுத ஜாக்குலின்! தொடங்கியாச்சு பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் அக்டோபர் எட்டாம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜாக்குலின் மற்றும் சுனிதா இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.
ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி பிரமாண்டமாக கடந்த அக்டோபர் ஆறாம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இல்லாத வகையில் நிகழ்ச்சி தொடங்கிய முதல் 24 மணி நேரத்திற்குள் சாச்சிதா வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து இந்த வாரத்தில் எலிமினேஷன் செய்வதற்காக ஆறு போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் இன்றைய எபிசோடின் முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் இன்று பிக் பாஸ் ஒரு புது டாஸ்க் கொடுத்திருக்கிறார். அதாவது இந்த சீசனில் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் போட்டி போடுகிறார்கள்.
அதில் ஆண்கள் தரப்பில் இருந்து ஒரு போட்டியாளர் ஆண்கள் சார்பாக விளையாடுவதற்கு பெண்கள் வீட்டிற்கும், பெண்கள் தரப்பில் இருந்து அவர்கள் சார்பாக விளையாட ஒரு பெண் போட்டியாளர் ஆண்கள் வீட்டிற்கும் செல்ல வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து ஆண்கள் தரப்பில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் தரப்பில் போட்டியாளர்களுக்குள் இன்னும் ஒற்றுமை வரவில்லை.
பெண் போட்டியாளர்களுக்குள் அடிக்கடி கருத்து மோதல்கள் வந்து கொண்டிருக்கிறது. இன்று வெளியான ப்ரோமோவில் கூட பெண்கள் தரப்பில் இருந்து ஜாக்குலின் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று வி.ஜே விஷால் சொல்ல எல்லோரும் அதை ஆமோதிக்கிறார்கள். ஆனால் பெண்களுக்குள் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது ஜாக்குலின் எனக்கு தெரிஞ்சு எல்லாரும் என்னை அனுப்ப மாட்டீங்கன்னு தெரியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு காரணமும் ஜாக்குலின் சொல்கிறார். அதாவது முதல் நாள் நீங்கள் எல்லாரும் எடுத்த முடிவுக்கு உடன் படாமல் நான் பெட்டில் படுத்திருந்ததால் நீங்கள் என்னை அனுப்ப மாட்டீங்க என்று ஜாக்குலின் சொல்ல அதற்கு சுனிதா நீங்க பெட்ல படுங்க இல்ல சோபாவில் படுங்க அது நமக்கு பிரச்சனையே கிடையாது. ஆனால் இந்த டீமுக்கு நீங்க எங்க சார்பா போறது நல்லது கிடையாது என்று சொல்ல, இதை சற்றும் எதிர்பார்க்காத ஜாக்குலின் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே ஜாக்குலின் தன்னை பிரியங்காவாக நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் இப்போது இவர் அழுது கொண்டிருப்பதை பார்க்கும்போது இவர் கடந்த சீசனில் அர்ச்சனா முதல் நாள் தன்னை எல்லோரும் ஒதுக்குகிறார்கள் என்று அழுது கொண்டிருப்பது போல இவரும் செண்டிமெண்டாக ரசிகர்களின் மனதை கவர பார்க்கிறாரா? என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.












Click it and Unblock the Notifications