பிக் பாஸ் 8 : அடுத்த வெளியேற்றம் இவங்கதான்..! பிக் பாஸ் கொளுத்தி போட்ட புது சரவெடி.. சிக்கிய 3 பேர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் அக்டோபர் 10 ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் இந்த வாரம் எலிமினேஷனில் இருக்கும் போட்டியாளர்களில் யார் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று போட்டியாளர்களிடம் பிக் பாஸ் கருத்து கேட்டிருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக முதல் 24 மணி நேரத்திற்குள் ஒரு எலிமினேஷன் வைத்திருக்கிறார்கள். அதை தொடர்ந்து முதல் வாரத்திலும் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப் போகிறார் என்று அதற்கான நாமினேஷன் நடைபெற்றிருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் மக்கள் மனதில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று போட்டி போட்டு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் ஆண் போட்டியாளர்கள் பிராங்க் செய்து மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விட்டால் நமக்கு ஓட்டு கன்ஃபார்ம் என்று பக்காவாக பிளான் போட்டு நேற்று இரண்டு ப்ரோமோகளில் சண்டை காட்சிகள் இடம் பெறும் வகையில் பிராங்க் பண்ணி இருந்தார்கள். ஆனால் கடைசியில் இந்த ப்ராங்கால் பிரச்சனைகளும் வெடித்திருக்கிறது.
ஏற்கனவே 24 மணி நேரத்திற்குள் சாச்சிகா வெளியேற்றப்பட்டது தவறு என்று இணையத்தில் பலரும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷனில் ஆறு போட்டியாளர்களின் பெயர் இருக்கிறது. அதில் இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்று வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் நினைக்கிறார்கள் என்று பிக் பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்து இருக்கிறார். அதில் எல்லா போட்டியாளர்களும் தங்களுடைய கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
முதலில் பேசிய விஜே விஷால் கேர்ள்ஸ் செட்டில் இருந்து ஒருத்தங்க போவாங்க என்று தான் நான் நினைக்கிறேன் என்று சொல்கிறார். அதை தொடர்ந்து தர்ஷா குப்தா ரவீந்தர் போவார் என்று தான் எனக்கு தோன்றுகிறது என்று சொல்கிறார்.
அதற்கு காரணம் அவர் கேமை ட்விஸ்ட் பண்ணுகிறார் என்று எனக்கு தோன்றுகிறது என்று அவர் சொல்லி இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து தீபக் பேசுகையில் ஜாக்குலின் போவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது காரணம் அவங்க ஒன் மேன் ஷோவா இருக்க ட்ரை பண்றாங்க என்று கூறி இருக்கிறார். அவரை தொடர்ந்து வந்த சத்யா பேசுகையில் சௌந்தர்யா சவுண்டே இல்லாம இருப்பதால் அவங்க போவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார். அடுத்ததாக அன்ஷிதா சௌந்தர்யா வெளியே போவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார்.
இவர்களை தொடர்ந்து வீட்டின் தலைவராக இருக்கும் தர்ஷிகா ரஞ்சித் வெளியே போவதற்கு வாய்ப்பு இருக்கிறது அவர் சேப்பா விளையாடுகிறார் என்று சொல்கிறார். அடுத்ததாக வந்த சுனிதாவும் ரஞ்சித் பெயரை சொல்லி இருக்கிறார். இதனால் அதிக வாக்குகள் பெற்ற வரிசையில் ரஞ்சித், சௌந்தர்யா மற்றும் ரவீந்தர் பெயர் இருக்கிறது.
இவர்கள் மூவரில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. நேற்று நடந்த பிராங்க் சண்டைக்கு பிறகு ரவீந்திரருடைய பெயர் தான் வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் இருக்கிறது. ஆனாலும் கடைசி நேரத்தில் இந்த நிகழ்ச்சிகள் என்ன வேணாலும் மாற்றம் நிகழலாம் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications