பிக் பாஸ்க்குள்ள நான் சண்டை போடாத காரணமே இதுதான்! வெளிப்படையாக பேசிய ரஞ்சித்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த ரஞ்சித் கடந்த வாரத்தில் எவிக்ஷன் ஆகி இருந்தார். அவர் தற்போது பிக் பாஸ் ஃபன் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, தான் எதற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் சண்டை போடவில்லை என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கிடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து 6 வைல்டு கார்டு போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். ஆக மொத்தம் இந்த நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் போட்டி போட்டனர். அதில் 12 போட்டியாளர்கள் எவிக்ஷன் ஆகி வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

இன்னும் 12 போட்டியாளர்கள் மட்டும் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றார்கள். அதில் கடந்த வாரத்தில் நடிகர் ரஞ்சித் எவிக்ஷன் ஆனார். கிட்டத்தட்ட 77 நாட்களுக்கு மேலாக ரஞ்சித் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தார். இது இவருக்கு செய்த பெரிய சாதனை என்று தான் சொல்ல வேண்டும்.
காரணம் இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக வயதுள்ள போட்டியாளர்கள் தான் முதலில் வெளியேற்றப்படுவார்கள் ஆனால் இந்த சீசனில் அதிக வயதுடைய ரஞ்சித் அதிக நாட்கள் இருந்திருக்கிறார். அவருக்கு பிறகு வந்த பல போட்டியாளர்கள் அடுத்தடுத்து வெளியேறியதை பார்க்க முடிந்தது. ஆனாலும் ரஞ்சித் உள்ளே நடித்துக் கொண்டிருந்தார், அவருடைய உண்மையான குணத்தை காட்டவில்லை என்ற பல விமர்சனங்கள் எழுந்து வந்தது.
ஆனால் நான் வெளியேயும் இப்படித்தான் இருப்பேன், உள்ளேயும் இப்படித்தான் இருப்பேன் என்று பல இடங்களில் ரஞ்சித் கூறிக் கொண்டிருந்தார். அதுபோல கடந்த வாரத்தில் ரஞ்சித் வெளியேறும் போது சில சுவாரசியமான சம்பவங்களும் நடைபெற்றது. அதாவது அவருடைய மனைவியான நடிகை பிரியா ராமன் அவருக்காக அந்த செட்டுக்கு வந்து இருந்தார்.
ப்ரியா ராமனை பார்த்ததும் ரஞ்சித் கொடுத்த ரியாக்ஷன் பிறகு பிரியா ராமன் மற்றும் ரஞ்சித் இருவரும் கண்களால் பேசியது பலருடைய மனதை கவர்ந்தது. எத்தனை வயதானாலும் தங்களுக்குள் இருக்கும் காதல் மாறாது என்று இவர்கள் இருவரும் வெளிப்படுத்தியது பலருடைய பாராட்டையும் பெற்று வருகிறது.
இப்படியான நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ரஞ்சித் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அன்லிமிடெட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் நடிகர் சபரி நான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அவர் ரஞ்சித்திடம் அண்ணன் நீங்க பிக் பாஸ் வீட்டிற்குள் எப்படி நடிச்சிட்டு இருந்தீங்க? ஜெனரலா மக்கள் எல்லாரும் இப்படித்தான் சொல்லுவாங்க என்று கேட்கிறார்.
அதற்கு கோபமான ரஞ்சித் அது அவங்க சொல்லுவாங்க அதுக்கு நான் என்ன பண்ண முடியும் என்று கேட்கிறார். அதற்கு சபரி இவ்வளவு கோபத்தை ஏன் உள்ள படலன்னு தான் நான் கேட்கிறேன் என்று சொல்ல, ஏன் நான் இன்னும் கத்தி பேசுவேன், இதைவிட சண்டையும் பிடிப்பேன்.. கேம் விளையாடுவது ஓகேங்க, பைத்தியக்காரன் மாதிரி சண்டை போட்டு சட்டையை கிழிச்சிட்டு ஆ..ஓ..ன்னு கத்திக்கிட்டு இருக்கணுமா? என்று கேட்கிறார்.
அதற்கு சபரி நீங்க அந்த மாதிரி கூட எதுவும் பண்ணலையே என்று கேட்கிறார். அதற்கு பல லட்சம் பேர் இந்த நிகழ்ச்சியை பார்க்குறாங்க, பல லட்சம் குழந்தைகள் பார்க்குறாங்க, பல படிக்கிற பசங்க பார்க்குறாங்க. அவங்க முன்னாடி நான் என்னை பைத்தியக்காரன் மாதிரி காட்டிக்க நான் விரும்பல என்று பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications