எல்லாரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.. இதை நான் எதிர்பார்க்கல! ரவீந்தர் வெளியிட்ட முதல் வீடியோ
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நேற்று ரவீந்தர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார். அதற்கு பிறகு அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சொல்லாமல் போய் விட்டேன் என்று பலர் கேள்வி கேட்கிறாங்க. ஆனால் சொல்லாததற்கே இப்படி செஞ்சிட்டீங்களே! என்று ரவீந்தர் அதில் பேசியிருக்கிறார். அதை பற்றி பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி மற்ற சீசன்களை போல இல்லை என்று சொல்லும் அளவிற்கு தொகுப்பாளராக விஜய் சேதுபதி பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ரவீந்தர் முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

ரவீந்தரால் பிசிகல் டாஸ்க்கில் ஈடுபட முடியாது என்பதால் இவர் வெளியேறினால் தான் இந்த சீசனில் இன்னும் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என்று பலர் கூறி வந்தாலும் இந்த நிகழ்ச்சியை பற்றி இரண்டாவது சீசனில் இருந்து ஏழாவது சீசன் வரைக்கும் ரிவ்யூ செய்து நிகழ்ச்சியை அலசி ஆராய்ந்து எடுத்திருக்கிறார். இதனால் இந்த நிகழ்ச்சியில் எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? யாரை எப்படி ட்விஸ்ட் செய்யலாம் என்று எல்லா விதங்களும் இவர் கற்று தேர்ந்திருப்பதால் இந்த நிகழ்ச்சியில் இவர் இருந்தால் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது பலருடைய கருத்து.
கடந்த வாரத்தில் பிராங்க் செய்து அவர் பேசியது பெரிய அளவில் பரபரப்பு ஏற்படுத்தியது அதில் உண்மை நிலைமை தெரியாத பலர் அவருக்கு வாக்குகளை குறைத்து விட்டனர். அதன் காரணமாகவே ரவீந்தர் வெளியேறி இருந்தார். ஆனால் ரவீந்திர் தரப்பில் எந்த தப்பும் இல்லை அவர் பிராங்க் செய்வதற்கு முன்பே எலிமினேஷனில் நாம மூன்று பேர் இருக்கிறோம் அதற்காகத்தான் பிராங்க் செய்யப் போகிறோம் என்று பேசியது பற்றி உள்ளிருக்கும் போட்டியாளர்கள் வெளியே சொல்லாமல் அவர் மீது குற்றம் சுமத்தி இருக்கிறார்கள் என்பது விஜய் சேதுபதி மூலமாக அம்பலமாக இருந்தது.
பிக் பாஸ் 8: கொஞ்சம் இடம் கொடுத்தா ஓவரா போறான்! ஜெஃப்ரி பற்றிய குற்றச்சாட்டு! சாச்சிகாவுக்கு பிரச்சனை
ஆனாலும் வெளியே செல்வதற்கு முன்பு விஜய் சேதுபதி ரவீந்தர் மீது தப்பில்லை என்பதை நிரூபித்து வெளியே அனுப்பி இருக்கிறார். ஆனால் ரவீந்தர் வெளியே செல்வதற்கு முன்பு போட்டியாளர்களிடம் முகத்துக்கு நேராகவே அவர்கள் பற்றி ரிவ்யூ செய்தது அவர்களை கலவரப்படுத்தி இருந்தார். இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் வெளியே வந்த ரவீந்தர் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

அதில் எல்லோருக்கும் வணக்கம். இந்த ஒரு வார காலமாக மக்கள் எனக்கு தந்த ஆதரவு எனக்கு ரொம்பவே பெரிசு. ரசிகர்கள் இவ்வளவு ஆதரவு தருவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஒரு வாரத்தில் ஏகப்பட்ட மெசேஜ், கால் வந்திருக்கிறது. அதை பார்க்கும்போது நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன். முதலில் நான் உங்க எல்லாருக்கும் ஒரு பெரிய தேங்க்ஸ் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு உங்கள் எல்லோரிடமும் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.
என்ன சார் இப்படி சொல்லாம கொள்ளாம பண்ணிட்டீங்க என்று நிறைய பேர் கேட்கிறீங்க. நான் இப்படி சொல்லாம பண்ணுனதுக்கே நீங்க இப்படி செஞ்சீங்கன்னா நான் சொல்லிட்டு செஞ்சேனா நிறைய செய்வீங்க போல இருக்கு. ஆனாலும் அவ்வளவு லவ்ஸ் எனக்கு தெரிவிக்கிறாங்க எல்லாருக்கும் நன்றி என்றும் அந்த வீடியோவில் ரவீந்தர் தெரிவித்திருக்கிறார். இதற்கு பலரும் அவரைப் பாராட்டி கருத்து தெ
ரிவித்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications