பிக் பாஸில் ராணவுக்கு இவ்வளவு சம்பளமா? அடேங்கப்பா விஜய் டிவிக்கு தாராள மனசு தான்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக வந்து 90 வது நாளில் எவிக்ஷனான ராணவிற்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் இருந்தனர். அதைத் தொடர்ந்து சில வாரங்கள் கழித்து ஆறு வைல்டு கார்டு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ராணவ், மஞ்சரி, ரியா, வர்ஷினி, ரயான், சிவ குமார் கலந்து கொண்டனர்.

இவர்களில் ஏற்கனவே ரியா, வர்ஷினி, சிவகுமார் மூன்று பேரும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் ராணவ் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இந்த சீசனில் எப்படியாவது டைட்டில் ஜெயித்து விட வேண்டும் என்று ராணவ் கடும் போராட்டம் போராடி இருந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு விளையாடும் போது கீழே விழுந்ததால் கையில் தசை முறிவு ஏற்பட்டு இருந்தது. தற்போது தான் அது சரியாகி இருக்கிறது. ஆனால் இந்த நேரத்தில் அவர் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் எதையாவது செய்ய வேண்டும் தான், இந்த நிகழ்ச்சியில் தெரியவேண்டும் என்று முயற்சி எடுக்கும் ராணவை உள்ளிருக்கும் எல்லா போட்டியாளர்களும் சேர்ந்து கொண்டு அவரை ஒதுக்கி வைத்தனர்.
ஆனாலும் எல்லா இடத்திலும் போட்டி போட்டு முன்னேற வேண்டும் என்று ராணவ் ஏதாவது செய்து கொண்டே இருந்தார். ஆனால் அவர் வெளியேற்றப்பட்டு விட்டாரே இது அன்ஃபேர் எவிக்ஷன் என்றும் சிலர் கூறி வருகிறார்கள். இதற்கிடையில் பிக் பாஸ் வீட்டிற்குள் ராணவ் 69 நாட்கள் இருந்ததற்கு அவருக்கு எவ்வளவு சம்பளம் கிடைத்தது என்ற தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே ராணவ் ஒரு திரைப்படத்தில் நடித்துவிட்டு ஹீரோவாக வேண்டும், மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் உள்ளே நுழைந்த நிலையில் இவருக்கு ஒரு நாளைக்கு 20,000 முதல் 22,000 வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த மொத்த நாட்களுக்கும் 12 முதல் 15 லட்சம் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் லேட்டா வந்தாலும் வெயிட்டான சம்பளத்தோடு ராணவ் வெளியேறி இருக்கிறார். இன்னும் இரண்டு வாரங்கள் இவர் உள்ளே இருந்திருந்தால் டைட்டில் பணத்தை விடவும் இவருக்கு சம்பளம் அதிகமாக கிடைத்திருக்கும்.












Click it and Unblock the Notifications