பிக் பாஸ் 8: கார்டை காட்டி அசிங்கப்படுத்திய விஜய் சேதுபதி.. இன்றே வெளியே அனுப்பப்படும் போட்டியாளர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் டிசம்பர் 14வது தேதிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இன்று எவிக்ஷன் இருப்பதாக விஜய் சேதுபதி அறிவித்திருக்கிறார். அதைக் கேட்டு உள்ளிருக்கும் போட்டியாளர்கள் எல்லோரும் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். யார் வெளியேறப் போகிறார்கள் என்று பார்க்கலாம்.
அடடா என்று சொல்ற மாதிரிதான் நின்று வெளியான இரண்டாவது ப்ரோமோ இருக்கிறது. இன்று சனிக்கிழமை எபிசோடு தீப்பிடிக்க போகிறது என்று தான் சொல்ல வேண்டும். பிக் பாஸ் 8வது சீசன் தொடங்கிய ஆரம்பத்தில் இரண்டு வாரம் பெரிய அளவில் எதிர்பார்ப்போடு இருந்தது. அதற்கு பிறகு நிகழ்ச்சி பற்றி பெரிய அளவில் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த வாரத்தில் விஜய் சேதுபதியின் ரோஸ்ட் வித்தியாசமாக இருந்ததால் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியிருந்தது.

அதுபோல இந்த வாரம் விஜய் சேதுபதி என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இன்று செம என்டர்டைன்மென்ட் காத்திருக்கிறது. இன்று சூட்டிங் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலிருந்து தான் இப்போது ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கிறது. வழக்கமாக சனிக்கிழமை எபிசோடு சூட்டிங் சனிக்கிழமை காலையில் தான் நடக்கும்.
இப்போது (மாலை 4 மணி) வரைக்கும் இன்றைய எபிசோட்டின் சூட்டிங் முடிவடையவில்லை. ஆனால் அதற்குரிய ப்ரோமோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே கடந்த வாரத்தில் இரண்டு எவிக்ஷன் வைத்தது போல இந்த வாரமும் இரண்டு எவிக்ஷன் இருக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்து இருந்தாலும் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
வாக்குகளின் அடிப்படையில் சத்யா தான் கடைசி இடத்தில் இருக்கிறார். ஆனால் அவரை இன்று பிக் பாஸ் டீம் வெளியேற்ற முடிவு செய்து இருக்கிறார்கள். ஆரம்பத்திலிருந்து சத்யா ப்ரீஸ் டாஸ்க் வரைக்கும் தாக்குபிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
காரணம் அவர் தன்னுடைய மகன் மீது வைத்திருக்கும் பாசம், மனைவி மீது வைத்திருக்கும் காதல் குறித்து அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார். அதனால் ப்ரீஸ் டாஸ்க்கில் டிஆர்பி அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் அவரை வைக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் சில வாரங்களாக சத்யாவிடம் இருந்து பெரிய அளவில் கண்டன்ட் கிடைக்கவில்லை.
இதனாலேயே இவரை வெளியே அனுப்ப முடிவெடுத்து விட்டார்கள் போல. அதிலும் சில இடங்களில் சத்யா நான் இப்படித்தான்.. என்னால் இதுதான் முடியும்.. நான் என்னால் முடிந்த அளவிற்கு கண்டன்ட் கொடுக்கிறேன் என்று வெளிப்படையாகவே பேசுகிறார். அதோடு மக்கள் என்னை இப்போது கூட வெளியே அனுப்பி விட்டால் நான் சந்தோஷமாக போய் விடுவேன், ஏனென்றால் நான் எந்த இடத்திலும் என்னை மாற்றிக் கொள்ளவில்லை என்று பெருமையாக பேசி கொள்கிறார்.

இதை வைத்துதான் இன்று ரோஸ்ட் செய்து விஜய் சேதுபதி வெளியே அனுப்பப் போகிறார் என்று உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கு இதுவரைக்கும் தெரிந்திருக்காது. இன்று வெளியான ப்ரோமோவின் ஆரம்பத்திலேயே விஜய் சேதுபதி, இந்த வாரம் ஆரம்பிக்கிற போதே அதிரடியாக ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்.
நான் ஒரு பாஸ் கொண்டு வந்து இருக்கிறேன் அந்தப் பாஸில் இருந்து ஆரம்பிக்கலாம். இது என்னோட பாஸ் கிடையாது. மக்கள் கொடுத்த பாஸ். எவிக்ஷனோடு தான் இந்த வாரம் தொடங்க போகிறது என்று சொல்கிறார். மக்கள் கிட்ட நண்பர் ஒருவர் எனக்கு இந்த வீட்டோட அனுபவம் எல்லாம் போதும் என்று சொல்லி இருக்கிறார், அவருக்கு மக்கள் இந்த பாஸ் கொடுத்து இருக்காங்க என்று எவிக்ஷன் கார்டை தூக்கி காட்டுகிறார்.
இதை பார்த்து உள்ளிருக்கும் போட்டியாளர்கள் எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ப்ரோமோவிலேயே கடுமையாக முகத்தோடு விஜய் சேதுபதி இருக்கும் நிலையில் சத்யா மேடைக்கு வரும்போது கண்டிப்பாக விஜய் சேதுபதி ரோஸ்ட் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications