பிக் பாஸில் முத்துக்குமரன் அம்மா சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை! அப்பா செய்த செயல்! உணர்வுபூர்வமான சம்பவம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் டிசம்பர் 26 ஆம் தேதிக்கான எபிசோடின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் இந்த வாரத்தில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது. அதில் முத்துக்குமரனின் அப்பாவும் அம்மாவும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பார்த்ததுபடியே இந்த வாரம் முழுக்க ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களின் பெற்றோரும் வரும்போது பல உணர்வுபூர்வமான சம்பவங்கள் நடைபெறுகிறது. சிலர் தங்களுடைய மனதில் இருக்கும் கோபத்தை கொட்டுவதையும் பார்க்க முடிகிறது.

ஆனால் ஒரு சில போட்டியாளர்களின் உறவினர்கள் வரும்போது ஒரு புதுவிதமான எனர்ஜி பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்படுகிறது. அதுபோல இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் போட்டியாளர்கள் எல்லோருமே எல்லோருடைய குடும்பத்தினரும் வரவேண்டும் என்று ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள். இது வித்தியாசமாக இருக்கிறது.
எந்த போட்டியாளரும் அடுத்த போட்டியாளரின் குடும்பத்தினர் வர வேண்டாம், அவருடைய குடும்பத்தினர் இப்படி பேசியது தவறு என்று தன்னுடைய கோபத்தை காட்டியதையும் பார்க்க முடியவில்லை. அதுபோல உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் சிலருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்ற போட்டியாளர்களையும் மோட்டிவேஷன் செய்து பேசி இருக்கிறார்கள்.
அதுபோல முதல் முதலாக தீபக் குடும்பத்தினர் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிகாலையில் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தினரும் வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் அருண், முத்துக்குமரன், ஜாக்குலின் போன்றோர் குடும்பத்தினர் தான் வர வேண்டியது இருக்கிறது.
இன்று அதிகாலையிலேயே ஜெஃப்ரி குடும்பத்தினர் வந்துவிட்டனர். அதை தொடர்ந்து முத்துக்குமாரர் குடும்பத்தினர் வந்த ப்ரோமோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் முத்துக்குமரனை மட்டும் பிக் பாஸ் ஃபிரீஸ் ஆக இருக்க சொல்கிறார். அப்படி சொன்னதுமே எல்லோருக்கும் அவருடைய குடும்பத்தினர் தான் வரப்போகிறார்கள் என்று புரிந்து விட்டது.
மெயின் கேட் வழியாக வராமல் பிக் பாஸ் வீட்டிற்குள்ளே இருந்து முத்துக்குமரன் அப்பாவும் அம்மாவும் உள்ளே வருகிறார்கள். அதுபோல அவர்களைப் பார்த்ததும் முத்துக்குமரனுக்கு கண்களில் நீர் வருகிறது. ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் இங்கே அழக்கூடாது ஏற்கனவே நிறைய அழுதாச்சு போதும்மா என்று அம்மாவிடம் சொல்கிறார்.
அப்போது அவருடைய அப்பா நீ அழாத.. அழுதா புள்ள அழுதுருவான் என்று சொன்னது பார்ப்பவரை நெகிழ்ச்சி அடைய செய்தது. அதுபோல ஒரு இடத்தில் முத்துக்குமரனின் அம்மா பரம்பரையிலேயே யாருக்கும் கிடைக்காத விஷயம் உனக்கு கிடைச்சிருக்கு என்று சந்தோசமாக சொல்கிறார். இதில் நடுத்தர வர்க்கத்தில் உள்ள பலருடைய ஏக்கம் தெரிகிறது.
முத்துக்குமரன் ஆரம்பத்தில் இருந்தே எல்லா இடத்திலும் தான் நடுத்தர வர்க்கத்தில் இருந்து வந்திருக்கிறேன். என்னைப்போல் மேலே வர வேண்டும் என்று நடுத்தர வர்க்கத்தில் போராடிக் கொண்டிருப்பவர்களின் பிரதிநிதியாக தான் நான் வந்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருப்பார்.
அதுபோல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும் அதை நிறைவேறும் போது அவ்வளவு பெரிய ஆனந்தம் கிடைக்கும். எங்க குடும்பத்திலையோ அல்லது எங்க பரம்பரையிலோ யாரும் படிக்காத படிப்பை நான் படித்துவிட்டேன், எங்க பரம்பரையிலே நான்தான் சொந்த வீடு வாங்கியது, எங்க பரம்பரையில் நான் தான் கார் வாங்கியது என்று பலர் சொல்வதை கேட்டு இருப்போம்.
அதுபோல இன்று முத்துக்குமரனின் அம்மாவும் முத்துக்குமரன் குறித்து பெருமைப்பட்டது அழகான தருணமாக இருந்தது. அதுபோல முத்துக்குமரனின் பெற்றோரை உள்ளிருக்கும் போட்டியாளர்களும் சிறப்பாக கவனித்திருக்கிறார்கள். இந்த க்யூட்டான ப்ரோமோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications