பிக் பாஸ்: ராணவ்க்கு ஆதரவாக விஜய் சேதுபதி நறுக்குன்னு கேட்ட கேள்வி! மாட்டிக்கிட்ட சௌந்தர்யா, அன்ஷிதா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் டிசம்பர் 21வது தேதிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ராணவ் கையில் அடிபட்ட விஷயம் குறித்து விஜய் சேதுபதி விசாரித்திருக்கிறார். அப்போது ராணவ் வலியில் துடித்த போது சிரித்தவர்கள் குறித்து கேள்வி கேட்டது ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டு பெறுகிறது.
இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோ ரசிகர்களை அடடா என்று சொல்ல வைத்திருக்கிறது. காரணம் இந்த வாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல சம்பவங்கள் நடைபெற்றது. அதில் பெரிய சம்பவமே ராணவ் கை உடைந்தது தான். ராணவ் கை உடைந்த வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போது கூட அவரோடு விளையாட்டிய சௌந்தர்யா, ஜெஃப்ரி, அன்ஷிதா போன்றோர் அவன் நடிக்கிறார் என்று ஏளனம் செய்தனர்.

இது இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. ராணவ் தந்தை கராத்தே சந்துரு கூட தன்னுடைய மகன் நிலமை குறித்து வருத்தமாக பேசி இருந்தார். ஒருத்தன் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போது எப்படி இவர்களால் சிரிக்க முடிகிறது? அதுவும் நடிக்கிறான் என்று சொல்கிறார்கள். இது எவ்வளவு வேதனையான விஷயம். ஆனால் இதை பிக்பாஸ் தரப்பினரும், விஜய் சேதுபதியும் கேள்வி கேட்க வேண்டும் என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
அதுபோல அதிகமான ரசிகர்களும் இதையே வலியுறுத்தி வந்தனர். இதனாலேயே வாக்குகளின் அடிப்படையில் கடைசி இரண்டு இடத்திற்கு மேலே இருந்த ராணவ் நேற்று வாக்குகளின் முடிவுகளில் இரண்டாவது இடத்தில் இருந்தார். இது இவருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் அமோகமான வரவேற்பை காட்டுகிறது.
இந்த நிலையில் இன்று விஜய் சேதுபதி இது குறித்து விசாரிப்பாரா? என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. சிலர் கண்டிப்பாக இது பற்றி விஜய் சேதுபதி பேசியே ஆக வேண்டும் என்றும் கூறி வந்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ராணவ்க்கு ஆதரவாக விஜய் சேதுபதி செம்மையாக பேசியிருக்கிறார்.
அதாவது ராணவிடம் நீங்க வலியில் துடிக்கும்போது நடிக்கிற என்று சொன்னாங்களா அவங்க எல்லாம் யாரு ராணவ் என்று கேட்க, அதற்கு அன்ஷிதா, சௌந்தர்யா, விஜே விஷால் என எல்லோரும் எழுந்து இருக்கிறார்கள். அப்போது சௌந்தர்யா தான் தெரிய வேண்டும் என்பதற்காக ராணவ் நிறைய பண்ணுவான்.. இப்போ அதனால இப்படி பண்ணி கல்லை எரிஞ்சிடலாம்னு இப்படி பண்ணுனான் என்று நினைத்தேன் என்று சொல்கிறார்.
அதற்கு விஜய் சேதுபதி, உண்மையில் அவனுக்கு அடிபட்டு இருந்தால் பரவாயில்லை இல்லாட்டி கேவலமா நடிக்கிறான்னு சொன்னீங்களே அது எப்படி என்று கேட்க, அதற்கு அன்ஷிதா ராணவுக்கு எப்போதும் ஃப்ராங் பண்ணுற பழக்கம் இருக்கு. அதனால இப்படி நடிச்சுட்டு பிறகு கல்லை எடுத்துட்டு ஓடிவிடுவான் என்று சொன்னேன் என்று சமாளிக்க, அதற்கு விஜய் சேதுபதி பேசணும் என்பதற்காக என்ன வேணாலும் பேசலாமா?
தேவதை இப்படியெல்லாம் பண்ணக்கூடாது என்று சொன்னீங்களே இப்போ அந்த தேவதை எங்க போச்சு என்று கேட்கிறார். அதோடு ஜெப்ரிக்குனா எல்லாரும் வந்து இருப்பாங்க, ராணவுக்குனா சந்தேகப்படுறாங்க என்று கேட்டு இருக்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications