பிக் பாஸில் யாரும் எதிர்பார்க்காத unfair எவிக்ஷன்.. டைட்டில் வின்னர்னு நினைத்தால் இப்படியா ஆகணும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் 14வது வாரத்தில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தீபக் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி 95 நாட்களை கடந்துவிட்ட நிகழ்வில் அடுத்த வாரத்தோடு முடிவுக்கு வர இருக்கிறது. கடைசி கட்டத்தில் இந்த நிகழ்ச்சி நெருங்கி இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் 8 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

bigg boss tamil 8 bigg boss 8 8

அதுபோல ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இருந்து எவிக்ஷனாகி வெளியே சென்ற 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார்கள். இவர்களில் இருவர் உள்ளே இருக்கும் போட்டியாளர்களை ரீப்ளேஸ் செய்ய போவதாகவும் கூறப்பட்டிருக்கிறது. இது இந்த நிகழ்ச்சியை சுவாரசியமாக்குவதற்காக வித்தியாசமாக எடுக்கப்பட்ட முயற்சியாக தெரிகிறது.

ஆனாலும் நிஜத்தில் அதுபோலத்தான் நடக்கப் போகிறதா? அல்லது எல்லா சீசனையும் போல ரீ என்ட்ரி கொடுத்த போட்டியாளர்கள் இந்த வாரத்தோடு வெளியேற்றப்பட போகிறார்களா என்று எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது. அதே நேரத்தில் இந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சி 14 வது வாரத்தில் அடி எடுத்து வைத்திருக்கும் நிலையில் எல்லா சீசனையும் போலவும் இந்த சீசனிலும் ஒரு அன்பேர் எவிக்சன் இருக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்ததுதான்.

ஆனால் இன்று வெளியான தகவல்தான் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்து உழைப்பை போட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் உள்ளிருக்கும் போட்டியாளர்களின் பாராட்டையும் பெற்று வந்த தீபக் இன்று வெளியேற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த வாரத்திலும் கடந்த வாரத்தைப் போல இரண்டு எவிக்ஷன் நடைபெற போவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே 8 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியே அனுப்பப்பட்டு விட்டால் மொத்தம் ஆறு போட்டியாளர்கள் தான் இருப்பார்கள்.

பைனலுக்கு முன்பு மிட் நைட் எவிக்ஷன் நடைபெறும் போது அதில் ஒருவர் வெளியேற்றப்படுவார். ஆக மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் மட்டும் அப்படியே பைனலுக்கு போவதற்காக வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த சீசனில் பணப்பெட்டி டாஸ்க் நடைபெறுமா? இல்லையா? என்பதும் கேள்வி குறிதான். இதற்கு முந்தைய சீசனன்களில் கடைசி வாரத்திற்கு முந்தைய வாரமே பணப்பெட்டி டாஸ்க் நடந்துவிடும்.

bigg boss tamil 8 bigg boss 8 8

ஆனால் இந்த சீசனில் இந்த முறை பணப்பெட்டி டாஸ்க் வைக்கவில்லை. ஆனால் பணப்பெட்டி எப்போது வைப்பார்கள் என்ற எதிர்பார்ப்போடு உள்ளே போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் இத சீசனில் தீபக் அல்லது முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னராக வருவார்கள் என்று எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது.

ஏற்கனவே முத்துக்குமரன் சில இடங்களில் பிக் பாஸ் மட்டுமல்லாமல் விஜய் சேதுபதியிடமும் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார். அவர் ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சி இருந்தாலும் சில நேரங்களில் சொதப்பி விடுகிறார். ஆனால் தீபக் எல்லா இடங்களிலும் சரியாக கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் தான் டைட்டில் வின்னர் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டு வருகிறது.

இப்படியான நிலையில் இன்று வெளியான தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கடைசி வாரத்தில் இந்த நிகழ்ச்சி பற்றிய பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு முடிவெடுத்திருக்கிறார்களா? என்பது தான் பலருடைய கேள்வி. ஆனால் என்ன நடக்கப்போகிறது என்று இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+