பிக் பாஸ் 8: கண்ணீரோடு வெளியேறிய சிவகுமார்.. வெறும் 28 நாட்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் 6-வது போட்டியாளராக வெளியேறிய சிவகுமார் 28 நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த நிலையில் இவருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8-வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் அறிமுகமானார்கள். அதில் 14 போட்டியாளர்கள் விஜய் டிவி பிரபலங்கள்தான். நிகழ்ச்சி தொடங்கிய சில வாரங்கள் சுவாரசியமாகவும், சண்டைகள் நிறைந்ததாகவும் இருந்தது.

television bigg boss tamil 8 bigg boss 8 8

ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவர்கள் கண்டெண்டுக்காகவே அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வது பார்க்கும் ரசிகர்களை கடுப்படைய செய்திருந்தது. இதனால் ஆறு வைல்ட் கார்டு போட்டியாளர்கள் அறிமுகம் செய்தனர். அவர்கள் வந்த பிறகு நிகழ்ச்சி வேற லெவலில் மாறும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பெரிய அளவில் வித்தியாசம் இல்லாமல் தான் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் முதல் வாரத்திலேயே ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி என்ற ஐந்து போட்டியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். இதில் ஆறாவது போட்டியாளராக நேற்று சிவக்குமார் வெளியேற்றப்பட்டார்.

வைல்ட் கார்டில் வந்த மூன்று போட்டியாளர்கள் அடுத்தடுத்து வெளியேற்றம் அடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த வாரத்தில் வாக்குகள் அடிப்படையில் சாச்சனா எலிமினேட் ஆகுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிக் பாஸ் வைத்த டாஸ்க்கில் மிகப்பெரிய திருப்பமாக சிவகுமார் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

television bigg boss tamil 8 bigg boss 8 8

வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த சிவகுமார் பிக்பாஸ் வீட்டில் 28 நாட்கள் இருந்து இருக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது செய்து மக்கள் மத்தியில் தெரிய வேண்டும் என்று அவர் பல முயற்சிகள் எடுத்தார். ஆனால் அது பெரிய அளவில் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் இவர் வாங்கிய சம்பள விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதில் சிவகுமாருக்கு ஒரு நாளைக்கு 15,000 சம்பளமாக வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி 28 நாட்கள் சிவகுமாருக்கு சுமார் 4.2 லட்சம் சம்பளமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பள பணம் முழுமையாக அவர்கள் கைக்கு கிடைக்காது. இதில் ஜிஎஸ்டி எல்லாம் பிடித்தம் போக இன்னும் ஒரு சில வாரங்கள் கழித்து தான் சிவகுமாருக்கு பணம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+