பிக் பாஸ் 8: சாச்சனாவை காப்பாற்ற சிவகுமார் வெளியேற்றமா? சுஜா வருணி போட்ட போஸ்ட்.. குவியும் கருத்து
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நேற்று சிவக்குமார் வெளியேற்றப்பட்டார். ஆனால் சிவகுமார் வெளியேற்றம் அன்ஃபேர் எவிக்ஷன் என்று சிவக்குமாரின் மனைவி நடிகை சுஜா வருணி போஸ்ட் போட்டு இருக்கிறார். இதற்கு இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தாரக மந்திரம். அதுபோலத்தான் சில வாரங்களில் எதிர்பாராத பல சம்பவங்கள் நடைபெற்று விடுகிறது. நேற்று கூட யாரும் எதிர்பார்க்காத வகையில் சிவக்குமார் வெளியேற்றப்பட்டு இருந்தார். ஆனால் கடந்த வாரத்தில் வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் சாச்சனா தான் இருந்தார்.

ஆனால் சிவகுமார் வெளியேற்றப்பட்டது அன்ஃபேர் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதை சிவகுமாரின் மனைவி சுஜாவருணியும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டிருந்தாலும் நிகழ்ச்சி தொடங்கிய சில வாரங்களிலேயே 6 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் அறிமுகம் ஆனார்கள். ஆனால் தற்போது மூன்று வாரங்களாக தொடர்ந்து அடுத்தடுத்து வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் கடந்த வாரத்தில் அன் அபிஷியல் வோட்டிங் லிஸ்டில் சாச்சனாவின் பெயர் இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிவகுமார் வெளியேற்றப்பட்டார். இதனால் அதிகமான ரசிகர்கள் விஜய் சேதுபதி தன்னுடைய மகளாக நடித்த சாச்சனாவைகாப்பாற்றுவதற்காக சிவகுமாரை வெளியேற்றம் செய்து விட்டார் என்று கூறி வருகிறார்கள்.
விஜய் சேதுபதியை கிண்டல் செய்து அதிகமான மீம்ஸ்களும் பரவி வருகிறது. இதை சுஜா வருணி தன்னுடைய instagram ஸ்டோரியில் பகிர்ந்திருக்கும் நிலையில் அது சரி என்று சிலர் சொல்கிறார்கள். ஒரு சிலர் அன் அபிஷியல் வோட்டிங் லிஸ்டில் இருப்பவை உறுதியான தகவல் கிடையாது. கடைசி நேரத்தில் வாக்குகளில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தான் இப்படி நடந்திருக்கும் என்று கூறி வருகிறார்கள்.
எது எப்படியோ இந்த சீசன் தொடங்கும் போது அதிகமான பாசிட்டிவ் இருந்தது. ஆனால் தொடங்கிய இரண்டு வாரங்களில் விஜய் சேதுபதி மீது அதிகமான விமர்சனங்கள் தொடங்கிவிட்டது. நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தவர்களை அவர்களுடைய தரப்பு நியாயத்தை சொல்ல விடாமல் விஜய் சேதுபதி பேசுகிறார் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.
இதற்கு பதில் சொல்லும் வகையில் நேற்றைய எபிசோடில் பார்வையாளர்களில் இருந்த ஒரு பெண் விஜய் சேதுபதியை பாராட்டி இருந்தார். அப்போது அவர் பேசும்போது வெளியே விஜய் சேதுபதி போட்டியாளர்களை பேசவிடாமல் செய்கிறார் என்று சொல்லுறாங்க.. ஆனா உள்ளே வந்து பார்க்கும்போது தான் நீங்க படுற கஷ்டம் தெரிகிறது என்று சொல்லியிருந்தார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications