எனக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை வந்துச்சு! அதுவும் எப்ப தெரியுமா? பிக் பாஸில் எமோஷனலான சௌந்தர்யா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் சௌந்தர்யா தனக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்து பேசி இருக்கிறார். இதற்கு சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்து தெரிவித்து பாராட்டி வருகிறார்கள்.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் ஒட்டுமொத்த தமிழர்களை உலுக்கி இருக்கும் நிலையில் தனக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை ஏற்பட்டது என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் சௌந்தர்யா பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் வந்தனர். இதில் அதிகமான போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர்.
இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறது. இந்த வாரத்தில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் போட்டியாளர்களின் நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பல போட்டியாளர்களின் உறவினர்கள் வரும்போது பல நிகழ்ச்சியான சம்பவங்களும் நடைபெறுகிறது.
அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து சௌந்தர்யாவிற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். சௌந்தர்யா மாடலிங் மூலமாக சினிமா வாய்ப்புக்கு முயற்சி செய்திருந்த நிலையில் ஒரு சில வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார். அதுபோல முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான விஷ்ணுவின் நெருங்கிய தோழிதான்.
விஷ்ணு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது அவருக்கு வீடியோ காலில் சௌந்தர்யா அட்வைஸ் கொடுத்திருப்பார். ஆனால் அவர் இந்த சீசனில் கலந்து கொள்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து இவர் செய்யும் சில செயல்கள் ரசிகர்களை கோபப்படுத்தினாலும் அதிகமான செயல்கள் க்யூட்டாக இருக்கிறது என்று ரசிகர்கள் பாராட்டி வருவதையும் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் நேற்று சௌந்தர்யா சக போட்டியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது தனக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்து பேசி இருக்கிறார். அதாவது ஒரு திரைப்படத்திற்காக தனக்கு வாய்ப்பு வந்த போது அதற்கான ஆடிஷனில் கலந்து கொண்டிருக்கிறார்.
அப்போது அங்கிருந்த ஒரு நபர் தான் ஹீரோ போல நடிக்கிறேன் என்று தன்னிடம் தவறான முறையில் தொட்டு நடித்ததாகவும் அதனால் தனக்கு கோபம் வந்துவிட்டதால் எனக்கு இந்த வாய்ப்பு வேண்டாம் என்று நான் வந்து விட்டேன் என்று பேசியிருக்கிறார்.இது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் சினிமா மற்றும் சீரியலில் அதிகமாக அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை இருப்பதாக பல நடிகைகள் கூறி இருக்கிறார்கள். அந்த வரிசையில் சௌந்தர்யாவும் தனக்கு ஏற்பட்ட மோசமான சம்பவத்தை தைரியமாக பேசி இருப்பது பாராட்டப்பட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications