உங்களுக்காக நான் கேட்கிறேன் மஞ்சரி! இந்த சின்ன விஷயத்துக்காக இப்படி பண்ணனுமா? விஜய் சேதுபதி கேள்வி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் டிசம்பர் 21ஆம் தேதி, சனிக்கிழமை எபிசோட்டில் மஞ்சரி தனக்காக யாரும் கேள்வி கேட்கவில்லை என்று வருத்தப்பட்டதற்கு விஜய் சேதுபதி ஆறுதல் கூறி இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெற்றது. அதிலும் டாஸ்க் விளையாடும் போது ராணவிற்கு அடிபட்டது பெரிய அளவில் பேசப்பட்டது. அதுபோல டாஸ்க்கில் மஞ்சரி மற்றும் ராணவ்வை சில போட்டியாளர்கள் ஒதுக்கி வைப்பதையும் பார்க்க முடிந்தது.

இந்த வாரத்தில் நடைபெற்ற கல் சேர்த்து வைக்கும் டாஸ்க்கில் மஞ்சரி மற்றும் ராணவ் இருவரும் ஒரே அணியாக தான் சேர்ந்து விளையாடினார்கள். இவர்கள் வைல்ட் கார்ட் போட்டியாளராக இந்த நிகழ்ச்சியில் அறிமுகமான பிறகு இவர்கள் இருவரையும் சில போட்டியாளர்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இவர்கள் என்ன சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளாமலே பேசுகிறார்கள். இந்த வாரத்தில் நடந்த டாஸ்ஸ்கில் கூட அன்ஷிதா மற்றும் ஜாக்லின் இடையே பிரச்சனை நடந்த போது அன்ஷிதா மஞ்சரி மற்றும் ஜாக்லின் நடிப்பதாக பேசி இருக்கிறார். இது குறித்து இன்று சனிக்கிழமை எபிசோடில் விஜய் சேதுபதி கேள்வி கேட்டிருக்கிறார்.
மஞ்சரியிடம் பேசுவதற்கு முன்பு மஞ்சரி உங்களுக்காக யாரும் கேள்வி கேட்கலைன்னு கஷ்டப்படாதீங்க. உங்களுக்காக நான் கேள்வி கேட்கிறேன் என்று ஆறுதல் சொல்லி இருக்கிறார். அதோடு அன்ஷிதாவிடம் சிலரை பார்த்ததும் நீங்க நடிக்கிறாங்க என்று சொன்னிங்களே அது எந்த அடிப்படையில்? எல்லோரும் இந்த வீட்டில் தன்னை நல்லவங்களா காட்டுகிறதுக்காக தானே நடிக்கிறாங்க.

அப்போ இன்னொரு போட்டியாளரை பார்த்து நீ நடிக்கிற என்று சொல்வது சரியா என்று கேட்டிருந்தார். அதோடு மஞ்சரியின் விளையாட்டு இந்த வாரத்தில் சிறப்பாக இருந்ததை குறிப்பிட்டு பாராட்டவும் செய்து இருந்தார். உங்களிடம் எனக்கு எதுவும் சொல்வதற்கு இல்லை நீங்கள் உங்களுடைய விளையாட்டை சிறப்பாக செய்கிறீர்கள் இதுபோலவே போய்க்கொண்டிருங்கள்.
இந்த வீட்டிற்குள் நம்முடைய பேச்சை யாரும் கேட்கவில்லை என்றாலும் சொல்ல வேண்டிய இடத்தில் தைரியமாக உங்களுடைய கருத்தை நீங்க சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். அது பாராட்ட வேண்டியது என்று விஜய் சேதுபதி கூறி இருக்கிறார். அதோடு ராணவ் பற்றிய விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது விஷால் ராணவிற்கும் நடந்த விஷயம் ஜெஃப்ரிக்கு நடந்திருந்தால் ராணவ் தான் இந்த வீட்டின் வில்லனாக மாறியிருப்பான் என்று சொன்னதை விஜய் சேதுபதி கேட்கிறார்.
அடுத்ததாக அதற்கு மஞ்சரி ஜெஃப்ரி இந்த வீட்டின் செல்ல பிள்ளை சார் ஆனால் ராணவ் அப்படி கிடையாது என்று மக்களின் கருத்தையும் போட்டு உடைக்கிறார். இதை விஜய் சேதுபதி பாராட்டி மஞ்சரி தான் கரெக்டா சொன்னாங்க. இதுதான் விஷயம் இந்த சின்ன விஷயத்திற்காக இப்படி பண்ணனுமா... ஜெஃப்ரிக்கு இங்கே அனுதாபமும் அவன் மீது சாப்ட் கார்னர் இருக்கிறது எல்லோருக்கும் ஆனால் ராணவை ஏன் எல்லோருக்கும் பிடிக்கவில்லை என்றும் விஜய் சேதுபதி கேள்வி கேட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications