பிக் பாஸ் 8: உங்களை பற்றி தெரியும்! மேடையில் தீபக்கிடம் சேதுபதி கேட்ட கேள்வி.. இப்படி பேசிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 6) தொடங்கி இருக்கிறது. இதில் ஐந்தாவது போட்டியாளராக நடிகர் மற்றும் தொகுப்பாளரான தீபக் களமிறங்கி இருக்கிறார். அவரிடம் விஜய் சேதுபதி உங்களை எனக்கு ஏற்கனவே தெரியும் நீங்கள் தான் என்னுடைய ரோல் மாடல் என்று பேசி இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. அதில் நாம் ஏற்கனவே சொன்ன மாதிரியே போட்டியாளர்கள் பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஐந்தாவது போட்டியாளராக தீபக் கலந்து கொண்டிருக்கிறார். தீபக்கை தொகுப்பாளராக இருக்கும் விஜய் சேதுபதி வரவேற்று இருக்கிறார்.

television bigg boss tamil 8 bigg boss 8

தீபக்கை பார்த்ததும் விஜய் சேதுபதி சார் நான் உங்களுடைய பெரிய ஃபேன். நீங்களே இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் வணக்கம் சொல்லுங்கள் என்று சொல்ல, தீபக் இந்த அனைவருக்கும் வணக்கம். இது பிக் பாஸ் 8 ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்று வரவேற்று பேசி இருக்கிறார். பிறகும் விஜய் சேதுபதி என்னோட ரோல் மாடல் நீங்கதான் நீங்களும் டிடி யும் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை நான் பார்த்து இருக்கிறேன்.

ஜோடி நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்ள முயற்சி செய்தேன். என்று பக்கத்து வீட்டுக்காரர்களை பலவருடம் கழித்து பார்க்கும் போது எப்படி நலம் விசாரித்து பேசிக்கொள்வார்களோ அதுபோல விஜய் சேதுபதியும் தீபக்கும் மேடையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு பிறகு தீபக்கின் சுயவிபர வீடியோ வெளியாகிறது. அதில் தான் தொகுப்பாளராக வந்தது, பிறகு நடிகராக மாறியது ஆரம்பத்தில் நடிகராகும் போது படங்கள் வெற்றி பெற்றது, பிறகு சில படங்கள் தோல்வி அடைந்தது அதனால் பட்ட வேதனை குறித்து பேசி இருக்கிறார்.

அதற்கு பிறகு தீபக்கிடம் விஜய் சேதுபதி சில கேள்விகளை கேட்டிருக்கிறார். அதில் நான் சின்னத்திரையில் அறிமுகமாகும் போதே நீங்கள் டாப்பில் இருந்தீர்கள். அதற்கு பிறகு எந்த சூழ்நிலையில் நீங்கள் நடிக்க தொடங்க வேண்டும் என்று முயற்சி செய்தீங்க. எதனால் சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று முடிவெடுத்தீங்க? என்று கேள்வி கேட்ட, அதற்கு தீபக் நான் தொகுப்பாளராக இருக்கும்போது ஐந்து வருடங்களுக்குப் பிறகு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

வந்த வாய்ப்பை விடாமல் நடித்தேன். அப்போது அது எனக்கான பாதையாக இருந்தது. உடனே அதிலிருந்து பயணம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு வந்தது. அதிலும் நான் களம் இறங்கினேன். ஆனால் அங்கு இருக்கும் சூழ்நிலைகளை சரியாக எனக்கு கையாள தெரியாமல் சில இடங்களில் சறுக்கி விட்டேன். பிறகு மீண்டும் பழைய இடத்திற்கு திரும்பிவிட்டேன் என்று தீபக் கூறியிருக்கிறார்.

அதற்கு விஜய் சேதுபதி நான் உங்களை பல வருடங்களாக பார்த்திருக்கிறேன். நீங்கள் அப்போது இருந்த மாதிரியே இப்போதும் இருக்கிறீர்கள். ஆனால் இப்போது கூட ஒரு நடிகை பிக்பாஸ் வீட்டிற்குள் போனாங்க. அவங்க பீல்டுக்கு வந்து கொஞ்சம் நாள் தான் ஆகிறது ஆனால் அவர்களுக்கு மில்லியன் கணக்கில் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இவர்களோடு கம்பேர் பண்ணும் போது நீங்க என்ன பீல் பண்ணுறீங்க என்று விஜய் சேதுபதி கேட்கிறார்.

அதற்கு தீபக் இப்போது உள்ள சூழ்நிலையில் எல்லோரும் சமம் என்கிற மனநிலையில் தான் இருக்கிறேன். அதுபடி தான் நானும் என்னுடைய பயணத்தை கொண்டு போய்க் கொண்டிருக்கிறேன். நான் இவர்கள் இப்படி இருக்கிறார்களே அவர்கள் இப்படி இருக்கிறார்களே என்று நினைத்தது கிடையாது.

பொதுவாக சினிமாவாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி நான் அடுத்தவர்கள் சொல்வது போல தான் செய்து கொண்டிருக்கிறோம். அந்த முகத்திரையை கிழித்து நான் இப்படித்தான் என்பதை காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் நான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகிறேன் என்று தீபக் கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+