Bigg Boss 8 finale- வில் கோபப்பட்டு திட்டிய விஷால் அப்பா! விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை.. செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் டாப் 3 போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் விஜே விஷால் மேடையில் நிற்கும் போது அவருடைய அப்பா கோபப்பட்டு திட்டி இருக்கிறார்.
ரசிகர்கள் எதிர்பார்த்தபடி பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் கிராண்ட் ஃபினாலே இன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் டாப் 3 போட்டியாளர்களில் முத்துக்குமரன், சௌந்தர்யா மற்றும் விஜே விஷால் மூன்று பேரும் இடம் பிடித்திருக்கிறார்கள். மூன்று பேரையும் விஜய் சேதுபதி மேடைக்கு அழைத்தபோது விஜே விஷாலிடம் அவருடைய அப்பா உரிமையாக கோபப்பட்டு இருக்கிறார்.

மேடைக்கு வந்த விஜே விஷால் தன்னுடைய குடும்பத்தினரை கவனிக்காமல் தன்னுடைய முன்னாள் போட்டியாளர்கள் எதிரே அமர்ந்திருக்கும் போது அவர்களைப் பார்த்து கை அசைத்து அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கீழே பார்வையாளர்கள் வரிசையில் இருந்த விஜே விஷாலின் அப்பா உன்னுடைய அப்பா, அம்மா நாங்க இவ்வளவு நேரம் உனக்காக காத்திருக்கிறோம். ஆனால் நீ எங்களைத் தேடவே இல்ல.
இந்த பக்கம் கூட உன் முகம் தெரியல. இத்தனை நாளும் உன் கூடவே இருந்தவர்களோடு தான் வெளியே வந்த பிறகு கூட பேசிக்கிட்டு இருக்கிற.. என்று கோபப்படுகிறார். அதற்கு விஜய் சேதுபதி நல்லா கேளுங்க சார். நான் உங்களை இந்த நிகழ்ச்சியில் தான் பார்த்தேன். நான் கூட இங்கே வந்த பிறகு பேசினேன். உங்க மகன் உங்க கிட்ட பேசவே இல்லை என்று சொல்கிறார்.
அதற்கு விஜே விஷால், அப்பா ஐ லவ் யூ.. என்று சமாளிக்க பார்க்கிறார். அதற்கு அவருடைய அப்பா உன்னுடைய லவ் யூ வை நான் நம்ப மாட்டேன். 27 வருஷமா இப்படித்தான் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறா என்று சொன்னதும் விஜய் சேதுபதி கவனிச்சீங்களா? விஷால் உடைய லவ் யூவை அவருடைய அப்பாவே நம்ப மாட்டாராம் என்று சொன்னதும் அன்ஷிதாவை கேமரா ஃபோக்கஸ் செய்கிறது.
அதற்கு விஜே விஷால் நான் இத்தனை நாளா அவங்க கூட இருந்தேன்.. அதனாலதான் என்று சொல்ல வந்ததும் அதற்கு அவருடைய அப்பா, உனக்காக நாங்க டிவி முன்னாடியே இருந்தோமடா என்று கேட்கிறார். பிறகு விஜே விஷால் உடைய அப்பா நானும் என்னுடைய மகனும் சில மாதங்களாக பேசாமல் இருந்தோம்.
பிக் பாஸ்க்கு வருவதற்கு மூன்று மாதத்திற்கு முன்னாடியே வீட்டை விட்டு கிளம்பி போயிட்டான். அதற்கு பிறகு அவன் தனியா தான் இருந்தான் என்னுடைய மனைவியிடம் மட்டும் தான் பேசுவான் என்கிட்ட பேசவே மாட்டான். பிறகு பிக்பாஸுக்கு போறேன் என்றதும் தான் என்னிடம் வந்து சொல்ல வந்தான்.
நான் போயிட்டு வா என்று சொன்னேன். ஆனால் அவன் எப்படி எல்லாம் நான் இருக்க வேண்டும் என்று நினைத்தானோ இப்போ அப்படி மாறிவிட்டேன். என்னுடைய மகனுக்காக நான் இனி அவன் எதிர்பார்த்த அப்பாவா இருப்பேன் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார். அப்போது அன்ஷிதா மற்றும் தர்ஷிகாவை கேமரா போக்கஸ் செய்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications