பிக் பாஸ் 8இல் இன்று சம்பவம் இருக்கு.. “மஞ்சள் கார்டு” இந்த போட்டியாளருக்கா? மாஸ் காட்டும் சேதுபதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடில் விஜே விஷாலுக்கு மஞ்சள் கார்டு கொடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இணையத்தில் அதிகமானோர் விஜே விஷாலுக்கு எதிராக கருத்துக்கள் வெளியிட்டு வரும் நிலையில் பிக் பாஸ் தரப்பினர் இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

அதாவது கடந்த வாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெற்றது. பல அதிர்ச்சிகரமான சம்பவங்களும் நடைபெற்றது. அதாவது இதுவரைக்கும் விஜே விஷால் பல இடங்களில் கலகலப்பாக நிகழ்ச்சியை கொண்டு போய்க் கொண்டிருந்தார்.

television bigg boss tamil 8 bigg boss 8

அடிக்கடி போட்டியாளர்களுடன் டான்ஸ் ஆடுவது, பாட்டு பாடுவது, கிண்டல் செய்வது என்று இவர் இயல்பாக இருந்தார். ஆனால் கடந்த வாரத்தில் சௌந்தர்யாவிடம் அவர் நடந்து கொண்ட விதம்தான் முகம் சுளிக்கும் வகையில் இருந்தது. அதாவது ஆண் போட்டியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது விஷால் சௌந்தர்யா பற்றி பல குற்றச்சாட்டுகளை சொல்லி இருந்தார்.

சௌந்தர்யா எப்போதும் என்னை உரசி கொண்டிருக்கிறார். இடிக்கிற மாதிரியே பக்கத்தில் வருகிறார். தீபக் அண்ணா முட்டியில் கைவைத்து முகத்துக்கு முகம் பக்கத்தில் வைத்துக் கொண்டு நிற்கிறார். ரஞ்சித் அண்ணாவை கேட்காமலேயே தொட்டு பேசுகிறார் இதெல்லாம் பாக்குறதுக்கே ஒரு மாதிரி இருக்கிறது. எதற்காக சௌந்தர்யா இவ்வளவு பண்றாங்கன்னு தெரியல என்று பேசி இருந்தார்.

அவர் பேசும்போது பக்கத்தில் இருந்த ஆண் போட்டியாளர்கள் யாரும் எதுவும் சொல்லவில்லை. இது அதிகமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதாவது சௌந்தர்யா தொட்டு பேசுவது தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நேரடியாக சொல்லிவிடலாம் ஆனால் அவர் இல்லாத இடத்தில் எதற்காக அவர் குறித்து தவறாக பேச வேண்டும் என்று விஜே விஷாலுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

அதேபோல காலையில் சௌந்தர்யா பற்றி ஆண்களோடு அவ்வளவு தப்பு தப்பாக பேசிய விஷால் மாலையில் சௌந்தர்யா தனியாக நின்று கொண்டிருக்கும்போது அவர் பக்கத்தில் சென்று இடிப்பது போன்று நிற்கிறார். அதுபோல சௌந்தர்யா தனியாக டான்ஸ் ஆடினாலும் இவர்தான் கூட சேர்ந்து ஆடுகிறார். சௌந்தர்யாவை முகத்துக்கு பக்கத்தில் போய் முகத்தை பார்க்கிறார்.

இதையெல்லாம் பார்த்து விஷாலை ரசிகர்கள் கமெண்டில் திட்டி வருகிறார்கள். அதுபோல சில தினங்களுக்கு முன்பு இன்னொரு சம்பவமும் நடைபெற்றது. அதாவது டிக் டிக் என்ற விளையாட்டை சில போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு கலர் சொன்னதும் எல்லோரும் அந்த கலரை போய் தொட வேண்டும்.

விளையாட்டில் பிங்க் கலர் என்று சொன்னதும் தீபக் அணிந்திருந்த சட்டையில் பிங்க் கலர் இருந்ததால் சௌந்தர்யா ஓடி சென்று தீபக்கை தொட்டு இருக்கிறார். இதனால் தீபக் கோபமாக திட்டி இருந்தார். உங்களுக்கு மேனர்ஸ் இல்லையா? என்னிடம் பெர்மிஷன் வாங்காம என் மீது நீங்க எப்படி கை வைக்கலாம்? நீங்க கை வைக்கிறது எனக்கு கம்ஃபர்டபுலா இல்ல. எனக்கு வயிறு வலிக்கிறது என்று ஒரு கோபப்பட்டு திட்டி இருந்தார்.

அதற்கு சௌந்தர்யா மன்னிப்பு கேட்டிருந்தார். நான் விளையாட்டுக்காக வந்து வைத்தேன். அதுவும் எல்லாரும் ஒன்றாய் இருக்கோம்.. அண்ணன் தம்பி போல தானே பழகிக் கொண்டிருக்கிறோம் என்ற உரிமையில் வைத்து விட்டேன். நான் வைத்தது உங்களுக்கு வலிக்கிறது என்றால் என்னை மன்னித்து விடுங்கள் என்று சொன்ன பிறகும் தொடர்ச்சியாக தீபக் திட்டி இருந்தார்.

இதற்கு காரணம் கூட சௌந்தர்யா குறித்து தவறான ஒரு பிம்பத்தை விஜே விஷால் பரப்பியது தான் என்று இணையத்தில் அதிகமானோர் தொடர்ச்சியாக வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். இதனால் விஜே விஷால் தவறான ஒரு பின்பத்தை பிக் பாஸ் வீட்டிற்குள் உருவாக்குகிறார், இதுபோல இனி நடக்கக்கூடாது என்று அவருக்கு இன்றைய எபிசோடில் மஞ்சள் கார்டு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே விஜய் சேதுபதி உள்ளிருக்கும் போட்டியாளர்களிடம் தப்பு என்றால் முகத்துக்கு நேராக பேசி விடுகிறார். இந்த முறை விஜே விஷாலுக்கு இவர் பனிஷ்மென்ட் கொடுத்தால் வேற லெவலில் அவர் மீது மதிப்பு கூடும் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+