முத்துக்குமரனுக்கு காலம் தந்த மாற்றம்.. அன்று சிறை வாசலில்.. இன்று புறக்கணித்த நடிகரை தோற்கடிப்பு!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்வான முத்துக்குமரன் இரண்டு வருடங்களுக்கு முன்பு சிறை வாசலில் நடிகர் ஒருவரை பேட்டி எடுக்க காத்திருந்திருக்கிறார். ஆனால் இப்போது அதே நடிகரை பிக் பாஸ் வீட்டிற்குள் தோற்கடித்து முத்துக்குமரன் வெற்றி பெற்றிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே அதிசயம் என்று சொல்லும் வகையில் 8வது சீசன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. இதுவரைக்கும் நடந்த சீசன்களில் அன்ஃபேர் வின்னர் என்று இணையத்தில் அதிகமான பேச்சு நடந்து கொண்டிருக்கும். ஆனால் தற்போதைய எட்டாவது சீசனில் முத்துக்குமரன் வெற்றி பெற்றது மன நிறைவாகவே ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

ஆரம்பத்தில் ஏழ்மையான சூழ்நிலையில் இருந்து சினிமாவில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று காலடி எடுத்து வைத்த முத்துக்குமரன் வாய்ப்புக்காக பல இடங்களில் கஷ்டப்பட்டு தொகுப்பாளராக அறிமுகமாகி, பிறகு விஜய் டிவியில் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
அதற்கு பிறகு தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் முதல் நாளே விஜய் சேதுபதியின் பாராட்டை பெற்றிருந்தார். அதற்கு பிறகு சில இடங்களில் அவர் சறுக்கலை சந்தித்து இருந்தாலும் கடைசியில் அவர் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெற்றுவிட்டார். ஆனால் இதே முத்துக்குமரன் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு பேட்டிக்காக சிறை வாசலில் பகல் முழுக்க காத்திருந்த கதை பலருக்கும் தெரிந்திருக்காது.
முத்துக்குமரன் தனியார் youtube சேனலில் தொகுப்பாளராக இருந்தபோது நடிகர் ஒருவரை பேட்டி எடுக்க சிறை வாசலில் காத்திருந்திருக்கிறார். ஆனால் முத்துக்குமரன் பேட்டி எடுக்க காத்திருந்த நடிகர்தான் பிக் பாஸ் வீட்டில் முத்துக்குமரனுக்கு போட்டியாகவும் இருந்திருக்கிறார். ஆனால் தன்னை அலட்சியப்படுத்திய நடிகரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் முத்துக்குமரன் வெற்றி பெற்றிருக்கிறார். இது பலருக்கும் தெரிந்திருக்காது.
அது வேறு யாருமில்லை நடிகர் அர்னவ் தான். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகர் அர்னவின் மனைவி திவ்யா ஸ்ரீதர் கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக அர்னவ் கைது செய்யப்பட்டு இருந்தார். அப்போது தனியார் யூடியூப் சேனல் சார்பாக முத்துக்குமரன் அர்னவின் மனைவி திவ்யா ஸ்ரீதரை பேட்டி எடுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அடுத்த வாரத்திலேயே அர்னவ் ரிலீஸ் செய்யப்பட்டதால் அவரை பேட்டி எடுப்பதற்காக பல youtube சேனல்காரர்கள் ஜெயில் வாசலில் காத்திருந்திருக்கிறார்கள். அதில் முத்துக்குமரனும் ஒருவர்.

ஆனால் அப்போது அர்னவ் சரியாக பதில் கொடுக்காமல் அங்கிருந்து போய் விட்டாராம். அதற்குப் பிறகு இரண்டு வருடம் கழித்து அதே அர்னவ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முத்துக்குமரனோடு சக போட்டியாளராக வந்திருக்கிறார். ஆனால் அர்னவையும் தாண்டி முத்துக்குமரன் வெற்றி பெற்றிருக்கிறார். இதுதான் காலம் செய்த மாற்றம் என்று சொல்வது போல.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications