Bigg Boss Tamil 9: பிக் பாஸ்க்குள் நடக்கிறது இதுதாங்க! லவ் கன்டன்ட், ரகசியத்தை உடைத்த அப்சரா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 17 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இரண்டாவது வாரமே வெளியேறிய போட்டியாளர் அப்சரா சிஜே அளித்திருக்கும் பேட்டி, இந்த சீசனில் நடக்கும் 'லவ் டிராமா'க்களைத் தோலுரித்துக் காட்டி, ரசிகர்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறது! "உள்ளே நடப்பது கேமா, இல்லை கலர்ஃபுல் லவ் மேளா'வா?" என்று கேட்கத் தோன்றுகிறது அப்சராவின் பேட்டி.

போட்டியாளர்களுடன் பிக் பாஸ்
இந்த சீசனை வழக்கம் போல் நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். விக்கல்ஸ் விக்ரம், அரோரா, கனி திரு, வி.ஜே. பார்வதி, ஆதிரை, வினோத் பாபு, துஷார், நந்தினி, சுபிக்ஷா, எஃப்.ஜே. (ஃப்ரெட்ரிக் ஜான்சன்), சபரி நந்தன், வியானா, அப்சரா சிஜே, திவாகர், கலையரசன், ரம்யா ஜோ, பிரவீன்ராஜ் தேவசகாயம், மற்றும் பிரவீன் காந்தி உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.
அவுட்டாகி போனவர்கள்
மூன்றே நாளில் நந்தினி திடீரென வெளியேற்றப்பட்டார். முதல் வார எவிக்ஷனில் பிரவீன் காந்தி வெளியேற, இரண்டாவது வாரத்தில் அப்சரா சிஜே வெளியேறிவிட்டார்.
அப்சரா சிஜே பேட்டி
மாடலிங் துறையில் இருந்து வந்த அப்சரா, பிக் பாஸ் அனுபவம் குறித்து பேசியதுதான் இப்போது கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. "இரண்டாவது வாரமே நான் வெளியே வந்து விட்டேன். சின்ன வருத்தம் இருக்கு. ஏழு வருஷமாக மாடலிங் பண்றேன். அடுத்த ஸ்டெப் போகத்தான் வந்தேன். நான் ஆட்டத்தைத் தொடங்கின அப்பவே எலிமினேட் ஆகி வந்துவிட்டேன்" என்று கூறிச் சிரித்திருக்கிறார்.
"நான் பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருக்கிற முதல் மீனவ பொண்ணு. அதனால நான் ஜெயிக்கணும்னு சுபிக்ஷா முதல் நாளில் சொன்னாங்க. எனக்குத் தப்புன்னு தோனிய விஷயங்களை அப்பவே எதிர்த்துப் பேசினேன். மக்கள் 24 மணி நேர எபிசோடு பார்த்திருக்க மாட்டார்கள். அதனால்தான் என்னை வெளியே வர வைத்திருப்பார்கள்" என்று மக்கள் மீது பழியைப் போட்டிருக்கிறார் அப்சரா.
லவ் பாண்டிங் தான் கேம்
வீட்டுக்குள் நடக்கும் 'லவ் ட்ராமா' குறித்து அப்சரா ஓப்பனாகப் பேசியதுதான் இந்த சீசனின் கலகலப்பான விமர்சனமாக மாறியுள்ளது. "நான் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது மற்றப் போட்டியாளர்கள் என்னை ஒதுக்கி வைத்து விட்டார்கள். நானும் வியானாவும் 'ஸ்வீட்' என்று சொல்லியே எங்களைச் சீரியஸ் டிஸ்கஷனுக்கு கூப்பிடவே இல்லை."
"லவ் விஷயத்தைப் பொறுத்த வகையில் எதுவும் சொல்ல முடியாது. யார் எப்படி நடந்துப்பாங்கனு தெரியாது. ஆனால், உள்ள அது நடக்குது. 'ஃப்ரெண்ட்ஷிப், லவ்வுன்னு எமோஷனல் பாண்டிங் வந்துட்டாலே கேம் போய்விடும்!'" என்று எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்.
சுபிக்ஷா & வியானா:
"முதல் வாரத்தில் சுபிக்ஷா ரொம்ப நல்லா விளையாடியிருந்தார்கள். ஆனால், வியானா கூடச் சேர்ந்த பிறகு தான் அவர் டவுன் ஆகி விட்டார்." "ஆதிரை, துஷார், அரோரா, இவங்களும் அதே கதைதான். கேப்டன்சி தொடங்கிப் பல விஷயத்தில் துஷார் முதல் வாரத்திலேயே கோட்டை விட்டுட்டார். அவருடைய கவனம் முழுவதுமே அரோராகிட்ட தான் இருந்தது. அரோரா இருக்கும் இடத்தில்தான் துஷார் இருப்பான்."
"திவாகர், பொண்ணுங்க கிட்ட போய் 'லவ் பண்றியா, கல்யாணம் பண்ணியான்னு கேட்கிறது' என்று ஏதாவது அவர் பண்ணிக்கிட்டே தான் இருப்பார். இந்த சீசனில் வந்த 20 பேரில் மூன்றே வாரத்தில் மூன்று பேர் அவுட், மற்றவர்கள் 'லவ் டிராப்'புக்குள்ளே அவுட். மொத்தத்தில், இந்த சீசன் 'பிக் பாஸ்'ஸா, இல்லை 'பிக் லவ்'வா என்று சமூக வலைதளங்கள் கலாய்த்துத் தள்ளுகின்றன!












Click it and Unblock the Notifications