Bigg Boss: பிக் பாஸை விட்டு வெளியே வந்த பிரவீனுக்கு குடும்பத்தினர் கொடுத்த அதிர்ச்சி.. கண்ணீரோடு சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி, இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் பெரியத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை பிக் பாஸ் வீட்டைச் சண்டை, சச்சரவுகள், மற்றும் வீண் விவாதங்களால்ச் சலிப்படையச் செய்த போட்டியாளர்களுக்கு மத்தியில், ஒரே வாரத்தில் இரண்டு பேர் வெளியேறியது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இந்தச் சீசனில் முதல் முறையாக, துஷாருடன் சேர்ந்து நடிகர் பிரவீனும் எவிக்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

ரசிகர்கள் கொந்தளிப்பு
பிரவீன் ராஜ், பிக் பாஸ் வீட்டில் தனது பங்களிப்பை சிறப்பாகவே செய்து வந்தார். நியாயமாக விளையாடினார் என்று பலரும் பாராட்டினர். இருப்பினும், வாக்குகளின் அடிப்படையில் அவர் வெளியேற்றப்பட்டார் என்று கூறப்படுவது, அவரது ரசிகர்களை தாண்டிப் பல பொதுவான பார்வையாளர்களுக்கும் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்துள்ளது. "சரியாக விளையாடிய பிரவீனை ஏன் வெளியேற்றினார்கள்?" என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மீம்ஸ்களைப் பதிவிட்டுத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
போராட்டத்தின் உச்சம்
ஏற்கனவே, பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என்று சிலர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், இந்த எதிர்பாராத வெளியேற்றம், அந்த அதிருப்தியை இன்னும் அதிகரித்திருக்கிறது. இந்த சீசனின் 'பலியாடு' பிரவீன் தான் என்றுப் பலரும் வருத்தப்படுகிறார்கள்.
வெளியே வந்ததும் கண்ணீர்
பிரவீன் ராஜ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும், நேராகத் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அவருடைய மனைவி, அவருக்குப் பாசத்துடன் ஆரத்தி எடுத்து, நெற்றியில் பொட்டிட்டு அன்புடன் வரவேற்றிருக்கிறார்.
தான் வெற்றி பெறாமல் பாதியிலேயே வெளியே வந்து விட்டோமே என்ற வருத்தத்தில், பிரவீன் ராஜ் கண்ணீருடன் கலங்கி இருந்தார். அப்போது அவருடைய குடும்பத்தினர் அவருக்கு ஆறுதல் சொல்லி, அவர் நன்றாக விளையாடினார் என்று ஊக்கப்படுத்தி, சந்தோஷத்துடன் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள்.
எமோஷனலான வீடியோ வெளியிட்ட பிரவீன்
வீட்டிற்கு வந்த பிறகு, பிரவீன் ராஜ் உடனடியாக ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதில், "தனக்கு இத்தனை நாட்களாக ஆதரவு கொடுத்ததற்கும், தன்னுடைய விளையாட்டை ரசித்து ரசிகர்கள் கொடுத்தப் பாராட்டுக்கும் ரொம்பவும் நன்றி" என்று அவர் எமோஷனலாகச் சொல்லி இருக்கிறார். எப்படியாவது தனக்குன்னு ஒரு அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசையோடு பிக் பாஸ் சென்ற பிரவீனுக்கு கிடைத்த இந்த ஏமாற்றம், உண்மையிலேயே பலரையும் வருத்தமடைய வைத்திருக்கிறது.
கலாய்க்கும் ரசிகர்கள்
பிரவீன் வெளியேறிய பிறகும், உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் ஆட்டம் அடங்கவில்லை. இந்த வாரம் வெளியேற வேண்டியவர் என்றுப் பலரும் எதிர்பார்த்த எஃப்.ஜே, தப்பிப் பிழைத்துவிட்டதால், அவர் இன்னும் கொஞ்சம் ஆட்டம் போடலாம் என்று ரசிகர்கள் கலாய்க்கிறார்கள். அவர் தொடர்ந்து போடும் வீண் சண்டைகள், பார்வையாளர்களைச் சலிப்படைய வைத்திருக்கிறது. சான்ட்ராவுக்குக் குறும்படம் போட்டுப் பாராட்டுக் கிடைத்திருப்பதால், இனி அவர் எப்படி விளையாடுகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. "எல்லாரும் சண்டை போட்டுக் காலி பண்ணிட்டுப் போக, சான்ட்ரா சைலன்ட்டா புத்திசாலித்தனமா விளையாடுறாங்க" என்றுச் சிலர் பாராட்டுகிறார்கள். உண்மையில், வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே வந்த பிறகுதான், யார் ஜெயிக்க போகிறார்கள் என்ற குழப்பம் நீங்கி, ஆட்டம் சூடுபிடித்திருக்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications