Bigg Boss: பிக் பாஸ் அரங்கத்துக்குள் நடந்த சம்பவம்! போடப்பட்ட குறும்படம்! அதிரடியாக வெளியேற்றப்பட்ட 2 பேர்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி, சண்டைகள், சச்சரவுகள் என சூடுபிடித்திருக்கும் நிலையில், வார இறுதி எபிசோடுக்கான சூட்டிங்கில் யாரும் எதிர்பார்க்காத அதிரடி சம்பவங்கள் நடந்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இந்த முறை ஒரே வாரத்தில் இரண்டுப் போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்பட்டதாகவும், ஒருவர் எதிர்பாராத விதமாக வெளியேற்றப்பட்டதாகவும் அரங்கத்தில் இருந்தவர்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இரட்டை கதறல்
இந்தச் சீசன் தொடங்கியதிலிருந்தே பரபரப்பாக இருக்கும் நிலையில், நிகழ்ச்சியின் விறுவிறுப்பை கூட்டுவதற்காக இந்த வாரம் இரண்டு எலிமினேஷன்கள் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வாக்குகளின் அடிப்படையில் எஃப்.ஜே மற்றும் துஷார் ஆகியோர்தான் குறைவான வாக்குகள் பெற்றிருந்ததாக கூறப்பட்டது. இதனால் எஃப்.ஜே வெளியேறலாம் என்றுப் பலரும் எதிர்பார்த்தனர்.
அதிர்ச்சி முடிவு
ஆனால், அனைவரின் எதிர்பார்ப்பையும் தவிடுபொடியாக்கி, துஷாருடன், பிரவீன் கடைசி நேரத்தில் வெளியேற்றப்பட்டு இருக்கிறாராம்! இது குறித்து அரங்கத்தில் இருந்தவர்களுக்குக் கூட முதலில் தெரியவில்லையாம். கடைசி நேரத்தில் தான் அவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. பிரவீன் இந்த நிகழ்ச்சியில் சிறப்பாகத்தான் விளையாடிக் கொண்டு வந்தார். ஆனால், அவர் எதற்காக வெளியேற்றப்பட்டார் என்பது யாருக்கும் தெரியாதப் புதிராக இருக்கிறது. "ஒவ்வொரு சீசனிலும் இப்படித்தான் நன்றாக விளையாடுபவர்கள் பலியாடு ஆக்கப்படுவார்கள், இந்தச் சீசனில் பிரவீன் பலியாடு ஆக்கப்பட்டு இருக்கிறார்" என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
சான்ட்ராவிற்கு குறும்படம்
எவிக்ஷன் ஒருபக்கம் பரபரப்பாக இருக்க, மறுபக்கம் ஒரு பாசிட்டிவான விஷயமும் நடந்திருக்கிறது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த 'குறும்படம்' இந்த வாரம் காட்டப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதி, இந்த சீசன் மற்றும் முந்தைய சீசன் என பல வாரங்களாகக் குறும்படம் போடுவதைத் தவிர்த்து வந்தார். இந்த வாரம், சான்ட்ராவிற்குத்தான் குறும்படம் போடப்பட்டிருந்ததாம்.
சான்ட்ராவுக்கு பிக் பாஸ் கொடுத்தச் 'சீக்ரெட் டாஸ்க்' பற்றியும், அந்த டாஸ்க்கில் அவர் எப்படி சிறப்பாக விளையாடினார் என்பது பற்றியும்தான் அந்தக் குறும்படத்தில் காட்டப்பட்டிருக்கிறதாம். சான்ட்ராவின் புத்திசாலித்தனமான விளையாட்டை விஜய் சேதுபதி வெகுவாகப் பாராட்டியதாக நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

வைல்ட் கார்ட்ஸால் சூடுபிடித்த ஆட்டம்
ஆரம்பத்தில் வெறும் சண்டைகள் மட்டுமே இருந்த பிக் பாஸ் வீடு, வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே நுழைந்த பிறகுதான் உண்மையிலேயே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த சீசனில், துஷாரின் தலைவர் பதவிப் பறிப்பு, மற்றும் போட்டியாளர்களின் வீண் சண்டையால் பிக் பாஸே மனமுடைந்து மன்னிப்புக் கேட்டது போன்ற சம்பவங்கள் நிகழ்ச்சிக்கு ஒருவித பரபரப்பைக் கொடுத்தன.
தற்போது பிரவீன் போன்ற போட்டியாளர்களும் வெளியேற்றப்பட்டதால், இனி வரும் நாட்களில் எஞ்சியிருக்கும் போட்டியாளர்களிடையே போட்டி மேலும் கடுமையாகி, ஆட்டம் இன்னும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications