Bigg Boss : என்னை பாடி ஷேமிங் பண்ணுறாங்க! டார்கெட் செய்றாங்க! கண்ணீருடன் புலம்பிய திவாகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ் தமிழ் சீசன் 9' நிகழ்ச்சி, முதல் இரண்டு நாட்களிலேயே சண்டைகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், 'வாட்டர்மெலன் ஸ்டார்' டாக்டர் திவாகர் தான்!

வீட்டுக்குள் வந்ததில் இருந்து, "நான் நடிப்பு அரக்கன்," "நான் தான் பெரிய படிப்பாளி" என்று இவர் கொடுத்து வந்த ஓவர் பில்டப் மற்றும் தற்பெருமைகளால், சக போட்டியாளர்களான பிரவீன், ஹம்ருதீன், ரம்யா ஜோ, எஃப்.ஜே. போன்றோர் கடுப்பாகி, இவரை டார்கெட் செய்யத் தொடங்கினர்.

Bigg Boss Bigg Boss tamil Vijay Sethupathi vijay tv

என்னை டார்கெட் பண்ணுறாங்க

சக போட்டியாளர்களின் தொடர் விமர்சனங்களால், இப்போது திவாகர் தனது ஸ்டைலை மாற்றிக்கொண்டு புலம்பல் மோடை ஆன் செய்துள்ளார். சமீபத்திய ப்ரோமோ மற்றும் வீடியோக்களில் அவர் அழுதுகொண்டே பேசியிருப்பதுதான் இப்போதைய ஹாட் டாபிக்.

திவாகர் பேசும்போது, "தப்பு பண்ணவங்கள விட்டுட்டு ஏன் தான் எல்லாரும் என்னையே டார்கெட் பண்ணுறாங்க. தப்பு பண்ணவங்க கிட்ட போய் என்னைய சாரி கேட்க சொல்லுறாங்க. நான் அவாய்ட் பண்ணாலும், அவங்க முகம் தெரியணும்னு வேணும்னே என்ன அட்டாக் பண்ணுறாங்க. என் பேச்சு சுத்தமான டிராமா இல்ல. என் கேள்வி கேள்வி இல்ல. என்னை கேலி பண்றாங்க. என்னை தனியாக்க பாக்குறாங்க, பாடி ஷேமிங் பண்றாங்க. எஃப்.ஜே., கெமி, கம்ருதீன் BEHAVIOUR எல்லாம் ரொம்ப WORST ஆக இருக்கு" என்று கண்கலங்கப் பேசியுள்ளார்.

அதாவது, "எல்லாரும் என்னைத் தனியாகப் பிரித்து உடல்ரீதியாகக் கேலி செய்கிறார்கள் (Body Shaming)" என்றும், "என் நடிப்பு டிராமா இல்லை" என்றும் இவர் அழுதிருக்கிறார். இவரது இந்தப் புலம்பல், மற்ற போட்டியாளர்களின் நடவடிக்கையால் உண்டானதா, அல்லது சிம்பதி தேடும் புதிய உத்தியா என்றுதான் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

அதேபோல அவர் கலந்து கொண்டு யூடியூப் பேட்டிகளில் கூட தன்னை எல்லோரும் டார்கெட் செய்து அசிங்கப்படுத்துறாங்க என்று அவர் வெளியே வந்து பேசியது போல இப்போதும் பிக் பாஸ்க்கு கேமரா முன்பு இவர் பேசியது விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

திவாகர் Vs அர்ச்சனா- அசீம்

பிக் பாஸ் வரலாற்றைப் பார்த்தால், ஆரம்பத்தில் அனைத்து போட்டியாளர்களும் எதிர்த்து நிற்கும்போதும், அதைத் தைரியமாக சமாளித்து, தன் பேச்சில் நியாயம் இருப்பதாக வாதிட்டு மக்கள் மனதில் இடம்பிடித்த போட்டியாளர்கள் உண்டு. உதாரணமாக, முந்தைய சீசன்களில் அர்ச்சனா, அசீம் போன்றோர் இப்படி போட்டியாளர்களைத் தனியே எதிர்கொண்டு, தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றதால், அவர்களுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்தது.

இதேபோல, டாக்டர் திவாகரும் தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு தைரியமாக பதிலளித்து, நியாயத்தை நிலைநாட்டியிருந்தால், அவர் ஒரு போராளியாக உயர்ந்து மக்கள் மத்தியில் மதிப்பு அதிகரித்திருக்கலாம்.

ஆனால், திவாகர் இப்போது 'புலம்பல்' மற்றும் 'பாடி ஷேமிங்' குற்றச்சாட்டு என்ற ரூட்டை எடுத்திருக்கிறார். இதனால், ஒருபுறம், இவர் பாதிக்கப்பட்டவராக பார்க்கப்பட்டு, சிம்பதி ஓட்டுகள் மூலம் மதிப்பு உயர வாய்ப்பு இருக்கிறது. மறுபுறம், இவரது தொடர்ச்சியான 'நான் தான் பெரிய ஆளு' என்கிற தற்பெருமைகளால், இது வெறும் கண்ணீர்த் துடைப்பு நாடகம் என்று மக்கள் கருதி, இவருடைய மதிப்புக் குறையவும் வாய்ப்பிருக்கிறது.

திவாகரின் இந்த அதிரடித் திருப்பம், ஷோவின் டிஆர்பி-க்கு நன்றாகவே உதவும். ஆனால், இந்த ஆட்டம் இவரைப் பைனல்ஸ் வரை கொண்டு செல்லுமா அல்லது ஆரம்பத்திலேயே இவரது 'புலம்பல் நாடகம்' அம்பலமாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+