Bigg Boss 9: தர்பீஸ் திவாகரை வச்சு செய்த கானா வினோத்! பிக் பாஸ் ரசிகர்களின் வேண்டுகோள் இதுதான்!
சென்னை : 'பிக் பாஸ் 9 சீசன் இப்போ ஒருவிதமான சீரியல் போல ஓடிட்டு இருக்கு! 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகரையும், வி.ஜே. பார்வதியையும் திட்டுறதுக்காகவே பலர் பிக் பாஸ் பார்க்குறாங்களாம்! இவங்களை வெளியே அனுப்பினாதான் ஷோ நல்லா இருக்கும்னு நெட்டிசன்கள் புலம்பிக்கிட்டு இருக்க, பிக் பாஸ் என்ன பண்றாருன்னா... இவங்களை வச்சே ப்ரோமோவா போட்டுத் தள்ளுறாரு! இன்றைய 3-வது ப்ரோமோவுல நடந்த அலப்பறையைப் பாருங்க!

பசியில் வாடும் திவாகர்
'பிக் பாஸ்' வீட்டுக்குள்ள திவாகர் வந்ததே சாப்பிடுறதுக்காகத்தான் போல! அதை அவரே ஆரம்பத்துல சொல்லி இருக்கிறாரு. எப்படின்னா ஒரு இடத்தில் நான் இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது ஒருத்தங்க என்கிட்ட சொல்லி அனுப்பினாங்க, உள்ளே முட்டை பப்ஸ் தருவாங்க டைமுக்கு காபி தருவாங்கன்னு எல்லாம் சொன்னாங்க ஆனா இங்கே ஒவ்வொரு நாள் கழிக்கிறதும் ஒரு யுகம் போல இருக்கு என்று புலம்பிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று அவர் சாப்பிடுறதையே கலாய்க்கிற மாதிரி கானா வினோத் ஒரு பாட்டப் பாடி, அவரை வச்சுச் செஞ்சுட்டாரு! கவலைப்படாதே சகோதரா பாடலை TUNEல, கானா வினோத், கம்ருதீன், அமித் பார்கவ் எல்லாரும் சேர்ந்து, "கவலைப்படாதே எக்ஸ் மன்னா... உனக்கு முட்டை தோசை காத்திருக்கு, உப்புமாவும் காத்திருக்கு, கவலைப்படாதே எக்ஸ் மன்னா!"ன்னுப் பாடிட்டாங்க!
அப்புறம், "முட்டை பஃப்ஸுக்கு ஆசைப்பட்டு வந்துட்டியே பிக் பாஸு... வந்ததில் இருந்து பார்க்குறோம், நீ ஒரு டமாஸு!"ன்னுப் பாடினார். வினோத். ஆனா, இதைக் கேட்டுச் சண்டைக்குப் போகாம திவாகர் அமைதியா கிளம்பிப் போனதுதான் ஆச்சரியம்.
ஆர்மியின் கொந்தளிப்பு
ஆனா கானா வினோத் இப்படி பாடுனது 'தர்பீஸ் ஆர்மி' ஆட்களுக்கு இந்தக் பாட்டு சுத்தமாப் பிடிக்கலை!. "ஒரு மனுஷன் பசிக்குச் சாப்பிடுறதை இப்படி பாட்டு பாடி கலாய்க்கிறது ரொம்ப மோசமான செயல்! இதற்காகவே விஜய் சேதுபதி, கானா வினோத்தை நல்லாக் கண்டிக்கணும்!"ன்னு சொல்லி FEEL பண்ணிக்கிட்டு இருக்காங்க. (அட விடுங்கப்பா, பிக் பாஸ் வீட்டுல இதெல்லாம் சகஜம்!)
திவாகர் வெளியேற்றம்
'பிக் பாஸ்' என்ன பண்ணாலும், திவாகர் இந்த வார தலைப்பு சண்டைக்கு வர மாட்டாரு போல. முதல் ப்ரோமோவுல, திவாகரோட ராஜா பதவி பறிக்கப்பட்டு, வி.ஜே. பார்வதியை ராணியாக்கினாங்க!. ரெண்டாவது ப்ரோமோவுல, திவாகர் மன்னிப்பு கேட்கணும்னு பார்வதி ஆர்டர் போட்டாங்க. அதைக் கேட்டு டென்ஷன் ஆன திவாகர், "இந்த ஆட்டத்துக்கு நான் வரல!"ன்னு சொல்லிட்டு வெளியேறினார்!
பிக் பாஸ் பார்வையாளர்கள் இப்போ கடுமையா சலிச்சு போயிட்டாங்க!. "ஐயயோ பிக் பாஸ்! திவாகரைப் போட்டியாளராக்கி ஷோவோட தரமே போச்சு! இதுல அந்த ஆளுக்கு ஓவர் பில்டப் கொடுத்துக் கொடுத்தே மொத்தமா ஊத்திக்கிச்சு!"ன்னு புலம்புறாங்க. "ஒயில்டு கார்டுல வந்த பிரஜின், சாண்ட்ரா, திவ்யா எல்லாரும் ஒரு குரூப்பாச் சேர்ந்துட்டுப் பெருசா ஒன்னும் செய்யலை. பேசாமப் புதுசா ஒரு WILD CARD ஆளை கூட்டிட்டு வாங்க!"ன்னு பிக் பாஸ் கிட்டக் கேட்குறாங்க!
அதுல ஒரு செம ஐடியா என்னன்னா... "முடிந்தால் வனிதாவை உள்ளே கூட்டிட்டு வாங்க பிக் பாஸ்! அவர் தான் இந்த மிச்சர் பார்ட்டிக்கு எல்லாம் சரியான ஆள்! வந்து நாலு டோஸ் விட்டார்ன்னா, ஆளாளுக்குத் தெரிச்சு ஓடுவாங்க!"ன்னுச் சொல்றாங்க!. இந்த சீசனை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க பாஸ்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications