பிக் பாஸ் 9 ஃபினாலே மேடையில் திவ்யா கணேஷ் சொன்ன அந்த வார்த்தை.. வலி இவ்ளோ இருக்கா? சாதிச்சுட்டாங்க
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 கிராண்ட் ஃபினாலே நடைபெற்று வரும் நிலையில், வெற்றியாளர் யார் என்பதை விட சில போட்டியாளர்கள் பேசிய உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகள்தான் அதிகமாக ரசிகர்களின் மனதை தொட்டிருக்கிறது. அந்த வரிசையில், இறுதிச்சுற்றுக்கு தேர்வான நான்கு போட்டியாளர்களிடம் "உங்கள் மனதிற்குள் இதுவரை சொல்லாமல் வைத்திருந்ததை இப்போது வெளிப்படையாக சொல்லுங்கள்" என்று பிக் பாஸ் கேட்ட போது, திவ்யா கணேஷ் பேசிய அந்த சில நிமிடங்கள்... உண்மையிலேயே பிக் பாஸ் நினைவில் நிற்கும் தருணமாக மாறிவிட்டது.
"திவ்யா கணேஷ் பேச ஆரம்பிச்சதும் இது டயலாக் இல்ல... நடிப்பு இல்ல... முழுக்க முழுக்க உண்மைன்னு புரிஞ்சிடுச்சு." இதுவரை திவ்யா கணேஷ் மீது இருந்த விமர்சனங்களுக்கு கொடுத்த பதிலடி தான் அந்த பேச்சு. "நான் எப்போதுமே என் மனசுல பட்டதை மறைக்காமல் பேசிடுவேன்... அதுதான் எனக்கு பிரச்சனையும் கொடுத்திருக்கு" என்று அவர் சொன்ன அந்த ஒரு வரி, அவருடைய வாழ்க்கை அனுபவங்களையே சுருக்கமாக சொல்லிவிட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு திவ்யா பேசிய கருத்துகள் பெரிய சர்ச்சையாக மாறி, அவருக்கு சின்னத்திரையில் நடிக்க முடியாத அளவுக்கு தடைகள் வந்தது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான். "அப்போ நான் தாங்கிக்கிட்ட வலி, அந்த பயம்... அதெல்லாம் இன்னும் என்னோட உள்ளே இருக்கு" என்று அவர் சொன்னபோது, அந்த மேடையில் இருந்த அமைதி அதற்கான சாட்சி.
பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த முதல் சில நாட்கள் பற்றி பேசும்போது, திவ்யா குரல் உடைந்தது.
"இந்த நிகழ்ச்சிக்கு வந்ததே தப்போ? அம்மா, அப்பா, நண்பர்கள் சொன்ன மாதிரியே நடந்து விட்டதா?" என்று அவர் மனதிற்குள் எழுந்த சந்தேகங்களை வெளிப்படையாக சொன்னார். இதுவரை பிக் பாஸ் வீட்டுக்குள் பலரும் அழுதிருக்கிறார்கள். ஆனால் இது 'விளையாட்டு தோல்வி'க்கான அழுகை அல்ல... 'வாழ்க்கை பயம்' காரணமான அழுகை.
"வெளியுலகத்தில் எனக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால், நான் அவர்களிடமிருந்து விலகி விடுவேன். ஆனால் இந்த வீட்டுக்குள் அது முடியாது. தினமும் அதே மனிதர்களை பார்க்க வேண்டும், பேச வேண்டும். எப்படி பேசுவது, எவ்வளவு பேசுவது என தெரியாமல் நான் தவித்தேன்" என்ற திவ்யாவின் வார்த்தைகள், பலருக்கும் தங்களையே நினைவுபடுத்தியது.
"பிக் பாஸ் வீட்டுல இருக்கிறது டாஸ்க் மட்டும் இல்ல... அது உங்க கேரக்டரை தினமும் சோதிக்கிற ஒரு மனசு ஜெயில்." ஆனால் அந்த ஜெயிலுக்குள் இருந்து திவ்யா மெதுவாக வெளியே வந்திருக்கிறார். "இப்போ நான் மாறிட்டேன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் இதையெல்லாம் கடந்து செல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது" என்று அழுதபடியே அவர் சொன்ன அந்த கடைசி வரி, அவருடைய வளர்ச்சியைக் காட்டியது.
பிக் பாஸ் சீசன் 9 முழுவதும் சர்ச்சைகள், சண்டைகள், ரெட் கார்டு, ரீ-என்ட்ரி என பல விஷயங்களுக்காக பேசப்பட்டது. ஆனால் ஃபினாலேவில் திவ்யா கணேஷ் பேசிய இந்த உரையாடல், "பிக் பாஸ் இன்னும் ஒரு மனித மனசுக்குள்ள போகும் நிகழ்ச்சி" என்பதை மீண்டும் நினைவூட்டியது.
ஒரு வார்த்தையில் சொல்லணும்னா, "திவ்யா கணேஷ் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்து, தான் யார் என்பதை காட்டிவிட்டார் அதிலும் கார் டாஸ்க்கில் தன்னை அசிங்கப்படுத்திய சான்ட்ராவுக்காக பார்வதி மற்றும் கம்ருதீனிடம் இவர் கெத்தாக சண்டை போட்டது பெரிதாக பேசப்பட்டது. அதுவே இவர் இன்று பினாலே மேடையில் வந்து நிற்க காரணமாகவும் அமைந்திருக்கிறது. இந்த சீசனில் நான்கு பேர் பினாலேவில் வந்திருந்தாலும் அதிகமான சப்போர்ட் திவ்யாவிற்கு தான் இருக்கிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications