Bigg Boss: பிக் பாஸில் யாரும் எதிர்பார்க்காத எவிக்ஷன்! டப் போட்டியாளருக்கு இந்த நிலைமை? லீக்கான சாட் பொய்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பம் முதலே கலவரங்கள், அழுகைகள், சண்டைகள் என பல விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், இந்த வாரம் யாரும் சற்றும் எதிர்பார்க்காத ஒரு எலிமினேஷன் நடந்திருக்கிறது. டஃப் போட்டியாளராக எதிர்பார்க்கப்பட்ட நபர், திடீரென பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

லீக் சார்ட்டை உடைத்த பிக் பாஸ்
இந்த நிகழ்ச்சிக்கு வெளியே, ஒவ்வொரு வாரமும் யாரெல்லாம் வெளியேற போகிறார்கள், ஃபைனல் மேடையில் யாருக்கு வெற்றி என்பது போன்ற ஒரு 'லீக்' சார்ட் வெளியாகி, அது பெரும்பாலும் உண்மை போலவே இருந்து வந்தது. கடந்த வாரம்கூட அந்த லிஸ்டில் இருப்பது போலவே கலையரசன் வெளியேற்றப்பட்டார். அந்த வரிசையில் பார்த்தால், இந்த வாரம் எஃப்.ஜே. வெளியேறுவதாக கூறப்பட்டிருந்தது. எஃப்.ஜே-வின் வீண் சண்டை சச்சரவுகள் பார்ப்பவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியதால், அவர் வெளியேறுவதே நல்லது என்று பலர் எதிர்பார்த்தனர். அவர் வெளியேறினால், அந்த சார்ட் உண்மை என்று நிரூபிக்கப்படும் என்றும் ரசிகர்கள் காத்திருந்தனர்.
அதிர்ச்சி
ஆனால், அனைவரின் எதிர்பார்ப்பையும் முறியடித்து, ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியிருக்கிறது - டஃப் போட்டியாளராக எதிர்பார்க்கப்பட்ட துஷார் திடீரென வெளியேற்றப்படுகிறார். வாக்குகளின் அடிப்படையில் துஷார் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தலைவர் பதவி பறிப்பு
துஷார், உள்ளே இருக்கும் போட்டியாளர்களிடம் சரியான தலைவராக நடந்து கொள்ளவில்லை என்று, அவருடைய தலைவர் பதவி பாதியிலேயே பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே அவர் மீதான மக்களின் பார்வையை குறைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பிக் பாஸ் 9 இதுவரை நடந்தது
பிக் பாஸ் 9 சீசனில் இதுவரை நடந்த சம்பவங்கள், மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டுள்ளன. துஷார் வெளியேறுவதற்கு முன்பு, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன் ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகியுள்ளனர். தலைவராக துஷார் சரியாக செயல்படாததால், அவரிடமிருந்துத் தலைமை பொறுப்பு பறிக்கப்பட்டது.
போட்டியாளர்களின் கலவரம்
சமீபத்தில் நடந்த சண்டை சச்சரவுகள் மற்றும் ஒருவரையொருவர் மட்டம் தட்டும் செயல்கள், விஐபி விருந்தினர்களாக வந்த தீபக், பிரியங்கா போன்றோரையேக் கண்ணீர் விட வைத்தது. விஐபிக்கள் உள்ளே வந்தும், உள்ளிருக்கும் போட்டியாளர்களின் போக்கு மாறாததால், பிக் பாஸே மனமுடைந்து அவர்களிடத்தில் மன்னிப்புக் கேட்டது இந்த சீசனின் ஹைலைட்டாக, அதிகம்ப் பேசப்படும்ச் சம்பவமாக உள்ளது.
கெமி வெளியேற்றம்
தோல் சம்பந்தமான பிரச்சனையால், போட்டியாளர் கெமி மருத்துவச் சிகிச்சைக்காக வெளியே அழைத்து செல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. வாக்குகள் அடிப்படையில் துஷார் வெளியேறியிருந்தாலும், இந்த முடிவு சமூக வலைதளங்களில் மிகப் பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications