Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸில் நடந்த அடிதடி.. அதிரடியாக வெளியேற்றப்பட்ட பார்வதி! இது அன்ஃபேர்! திட்டும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. "எதிர்பாராததை எதிர்பாருங்கள்" என்ற டேக் லைனை இந்த சீசன் முழுக்க சொல்வது போல, ஆரம்ப நாளிலிருந்தே இந்த சீசன் சண்டை, சர்ச்சை, குழப்பம் என்ற மூன்றைத் தவிர வேறு எதையும் பெரிதாக கொடுக்கவில்லை என்றே ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

இன்னும் சில வாரங்களில் நிகழ்ச்சி முடிவுக்கு வரப்போகிறது என்றாலும், டைட்டில் யார் ஜெயிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பை விட, "இது என்ன விளையாட்டா, இல்லை சண்டை ரியாலிட்டி ஷோவா?" என்ற கேள்விதான் அதிகமாக எழுந்து வருகிறது.

Bigg Boss Bigg Boss tamil vijay tv

இந்த நிலையில் தற்போது Ticket to Finale (டிக்கெட் டூ பினாலே) டாஸ்க் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த முதல் டாஸ்கில் சுபிக்ஷா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டாவது டாஸ்க் தான், பிக் பாஸ் சீசன் 9-க்கே இன்னொரு சர்ச்சையை சேர்த்துவிட்டது. அந்த டாஸ்கில் பார்வதி - கம்ருதீன் இருவருக்கும் இடையே அடிதடி வரை சென்ற சம்பவம் நடந்துள்ளது.

டாஸ்க் நடந்து கொண்டிருந்த போது, பார்வதி கம்ருதீனை தொட்டு பேச, உடனே கம்ருதீன் கடும் கோபத்துடன் "நீ எப்படி என்ன தொடலாம்?" என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலாக பார்வதி, "நீ மட்டும் என்ன தொடலையா? என்னை எப்படி எல்லாம் தொட்ட" என்று டபுள் மீனிங் பேசும் வகையில் பதில் கொடுக்க, அங்கே இருந்த சூழ்நிலை இன்னும் பதற்றமாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கம்ருதீன், அருகில் இருந்த ஒரு டப்பாவை எடுத்து அடித்து உடைப்பதும், சேரை போட்டு உடைப்பதும் நடந்துள்ளது.

டாஸ்க் என்ற பெயரில் நடந்த இந்த சம்பவம், பலருக்கும் "இது விளையாட்டா, இல்லை சீரியல் சண்டையா?" என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. இவ்வளவு நடந்த பிறகும், கம்ருதீனை அந்த டாஸ்கிலேயே தொடர வைத்தது தான் தற்போது பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், முந்தைய சீசன்களை எடுத்துக் காட்டி கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக, முந்தைய சீசனில் முத்துக்குமார் ஒரு டாஸ்கில் எதிர் பக்கத்தில் இருந்த சாச்சனாக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக விளையாடாமல் இருந்தார். அதற்கே "விளையாடவில்லை" என்ற காரணம் சொல்லி, அந்த வாரமே தலைவர் பதவியே கிடையாது என்றும், டிஸ்குவாலிபிகேஷன் வரை நடவடிக்கை எடுத்தார்கள். அப்போது விளையாடாமல் இருந்ததே பெரிய குற்றமாகப் பேசப்பட்டது.

ஆனால் இப்போது அதைவிட பல மடங்கு பெரிய விஷயமாக, டாஸ்க் நடுவே அடிதடி, பொருட்கள் உடைப்பு நடந்தும், பிக் பாஸ் தரப்பில் எந்த தலையீடும் இல்லாமல் மௌனம் காக்கப்படுவது ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. "இப்போ விதிமுறைகள் எல்லாம் சீசனுக்கு சீசன் மாறுதா?", "யார் என்ன செய்தாலும் ஓகேன்னு விட்டுடுவீங்களா?" என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகிறது.

இந்நிலையில், இன்று நடந்த அதே டாஸ்கில் பார்வதி தோல்வி அடைந்து வெளியே வந்துள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள், இது டாஸ்க் இல்லை, அன்ஃபேர் டாஸ்க், முடிவு முன்பே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் போல இருக்கு என்று கமெண்ட் செய்து வருகின்றனர். பிக் பாஸ் வீடே இப்போது ஒரு விளையாட்டு மைதானத்தை விட, சண்டை அரங்கமாக மாறிவிட்டது என்றும், சில போட்டியாளர்களின் செயல்பாடுகள் முகம் சுளிக்க வைக்கிறது என்றும் ரசிகர்கள் வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

மொத்தத்தில், பிக் பாஸ் சீசன் 9 என்பது டைட்டில் ரேஸை விட, "இன்னைக்கு யார் யாரோட சண்டை?" என்ற தினசரி எதிர்பார்ப்பாகவே மாறியுள்ளது. விளையாட்டு, ஸ்ட்ராட்டஜி, புத்திசாலித்தனம் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், சத்தம், கோபம், சர்ச்சை தான் இன்னொரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் இதை எப்போது ஒரு ரியாலிட்டி ஷோவாக மாற்றப் போகிறார், இல்லையென்றால் இதுவே சீசன் 9-ன் அடையாளமா என்ற கேள்வியுடன் தான் ரசிகர்கள் இந்த சீசனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+