முதல் வாரமே முகமூடி அரசியலா? விஜய் சேதுபதியிடம் சிக்கிய ஆதிரை! ஆட்டிட்யூட்க்குக் கிடைத்த 'நோஸ்கட்'!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி ஒரு வாரம் ஆவதற்குள்ளேயே பஞ்சாயத்து தொடங்கிவிட்டது! இன்று சனிக்கிழமை என்பதால், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இந்த வாரம் என்ன பேசப் போகிறார், யாரைத் திருத்தப் போகிறார் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை வீணாக்காமல், முதல் வாரமே ஒரு 'திமிரு பார்ட்டி'யைக் கையில் பிடிச்சிருக்காரு விஜய் சேதுபதி!

ஆரம்பத்தில் நல்லவர்
இந்த சீசன் ஆரம்பித்தபோது, போட்டியாளர் ஆதிரை நிறைய பேரின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். அவர் சரியாய் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் முகத்துக்கு நேராகக் கேட்டுப் பாராட்டுகளை அள்ளினார். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக அவருடைய 'ஆட்டிட்யூட்' தான் பார்ப்பவர்களைக் கோபப்படுத்தியது!
குறிப்பாக, தலைவர் பதவிக்கான டாஸ்க் நடந்தபோது, ஆதிரை ஒரு முகமூடியைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், "என்னால இதெல்லாம் அதிகமான நேரம் போட்டுக்கிட்டு இருக்க முடியாது"ன்னு சொல்லி, அதைத் திமிராகக் கழட்டி வைத்தார். பிக் பாஸ் வீட்டுல டாஸ்க்கை மதிக்காமல் போன அந்த நடவடிக்கை, ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. 'இந்த ஆட்டிட்யூட்க்கு ஒரு சரியான பதிலடி கொடுக்கணும்'னு ரசிகர்கள் எதிர்பார்த்துட்டு இருந்தாங்க!
விஜய் சேதுபதியின் சவுக்கடி
ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக, இன்றைய முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி நேரடியாக ஆட்டத்தைத் தொடங்கிவிட்டார்!. ப்ரோமோவின் ஆரம்பத்தில், உள்ளிருக்கும் போட்டியாளர்கள் எல்லோரையும், "உங்க பெயரைச் சொல்லுங்க" என்று எழுந்து நின்று அறிமுகப்படுத்தச் சொல்கிறார்.
முதல் நான்கு போட்டியாளர்கள் எழுந்து நின்று தங்கள் பெயரைச் சொல்கிறார்கள். ஐந்தாவதாக இருக்கும் ஆதிரை, எழுந்து நிற்காமல் கையை மட்டும் தூக்கி, "ஆதிரை" என்று ஒரே வார்த்தையில் சொல்கிறார்!. இதைப் பார்த்த விஜய் சேதுபதி, சும்மா விடுவாரா? உடனடியாக, ஆதிரையைக் குறிவைத்து ஒரு கேள்வியைக் கேட்டார், "இது என்ன? உங்களுக்கு முன்பு இருக்குற நான்கு பேரும் எழுந்து நின்று பெயர் சொல்கிறார்கள். உங்களால் எழுந்துக்க முடியலையா?"
இதற்கு ஆதிரை, "ஓகே" என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்ல, விஜய் சேதுபதி செம காண்டாகிவிட்டார்!."ஓகே என்றால் என்ன அர்த்தம்? நமக்கு முன்பு ஒரு விஷயம் நடக்கிறது என்றால், அது வேறு; நான் வேறு என்று எடுத்துக்கொள்ளக் கூடாது!" என்று சொல்லி, ஆதிரையின் திமிரான ஆட்டிட்யூட்டுக்கு முதல் 'நோஸ்கட்'டைச் சரியாகக் கொடுத்திருக்கிறார்!
பிக் பாஸ் வீட்டுல பாரபட்சம் இல்லை
கடந்த சீசன்களில் இருந்தே, விஜய் சேதுபதியின் ஸ்டைல் இதுதான்! எந்தப் போட்டியாளராக இருந்தாலும், பாரபட்சம் இல்லாமல், முகத்துக்கு நேராக, நிறை குறைகளை சொல்லித் திருத்துவதில் அவருக்கு நிகர் அவரேதான்! இந்த சீசனிலும், முதல் வாரமே ஆதிரையின் ஆட்டிட்யூட்டைக் கேள்வி கேட்டு, "இங்கே நான் ஆட்டிட்யூட்க்கு எல்லாம் இடம் கொடுக்க மாட்டேன்" என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
ஒருவேளை, ஆதிரை "தான் மட்டும் ஸ்பெஷல்"னு நினைச்சிட்டு இருந்தாரா என்னவோ, ஆனா 'மக்கள் செல்வன்' கையில சிக்கினா, அதெல்லாம் எடுபடாது! கன்டென்ட் கொடுத்தாலும் சரி, திமிரு காட்டினாலும் சரி, விஜய் சேதுபதியோட பஞ்சாயத்துல இருந்து யாராலயும் தப்பிக்க முடியாதுன்னு மறுபடியும் நிரூபணமாகியிருக்கு! இனி ஆதிரை டாஸ்க்கை மதித்து, மத்தவங்களைப் போல விளையாடப் போகிறாரா? இல்லையா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்!
விஜய் சேதுபதியின் இந்த முதல் வாரப் பஞ்சாயத்து, ஆதிரையின் ஆட்டிட்யூட்டை மாற்றுமா? அல்லது இன்னும் அதிகமாக வீம்பு காட்டுவாரா?












Click it and Unblock the Notifications