Bigg Boss:பிக் பாஸில் பார்வதி பற்றி எஃப்ஜே பேசியதை போட்டு கொடுத்த சான்ரா! விஜய் சேதுபதி நறுக்குன்னு கேட்ட கேள்வி!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரமும் சனிக்கிழமை எபிசோடு தீயாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதாவது போன வாரத்தில் பிரஜன், சான்ரா மற்றும் திவ்யா கணேஷை கிழித்தெடுத்த விஜய் சேதுபதியிடம் எஃப்ஜே வசமா மாட்டி இருக்கிறார். இன்றைய எபிசோடில் நடக்கப்போகுதுன்னு பார்ப்போமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனிக்கிழமை எபிசோடின் ப்ரோமோ எப்போதுமே மதியத்துக்கு மேலே தான் வரும். அதேபோல இன்று வெளியான முதல் ப்ரோமோவிலேயே விஜய் சேதுபதி எஃப்ஜேவை டார்கெட் செய்து பேசி இருந்தார். அதாவது இந்த வாரம் முழுக்க வீட்டு தலைவரை காணவில்லை அவர் எங்க போனார்? என்று தேடிப் பார்ப்போமா என்பது போல பேச்சை தொடங்கியிருந்தார்.

இரண்டாவது ப்ரோமோவிலும் பார்வதி கை வலிக்குதுன்னு சொன்ன நேரத்தில் கூட அவருக்கு உதவின்னு யாரையும் அனுப்பலையே ஏன்னு விஜய் சேதுபதி கேட்க அதற்கு வழக்கம் போல எப்ஜே சமாளித்து இருந்தார். அதை தொடர்ந்து ஸ்கூல் டாஸ்கில் வசந்தி மற்றும் தர்மலிங்கம் இருவருக்கும் இடையே கனெக்சன் என்பது போல ஸ்கூல் ஸ்டுடென்ட்ஸ் ஒரு லெட்டர் எழுதிக் கொடுத்திருந்தாங்க.
அந்த நேரத்தில் பார்வதி கூட அவ்வளவு அழுதுட்டு இருந்தாங்க... அப்போ ஏன் நீங்க பேசல என்று விஜய் சேது பேசிக் கேட்க, அதற்கு எப்ஃஜே பார்வதி சில நேரம் கேரக்டரா இருக்காங்க.. சிலநேரம் நிஜ கேரக்டர்ல இருக்காங்க, அதனால அந்த இடத்துல நான் பேசணுமா இல்லையாங்கிற ஒரு குழப்பம் இருந்தது அதனாலதான் நான் பேசவில்லை சமாளிக்கிறார்.
அதற்கு விடாத விஜய் சேதுபதி அப்போ பிக் பாஸ் உங்களுக்கு அதை செய்ங்க இத செய்யுங்கன்னு இன்செக்ஷன் சொல்லிக்கிட்டே இருக்கணுமா? என்னங்க சொல்லுறீங்க என்று மடக்கி இருக்கிறார். அதை தொடர்ந்து இப்போது மூன்றாவதாக வெளியான ப்ரோமோவில் எப்ஃஜே ஏதோ பேச அதனால் கோபமான விஜய் சேதுபதி நீங்க உங்க பிரண்ட்ஸ் கூட பேசும்போது இப்படி பேசிக்கோங்க, என்கிட்ட எப்படி பேசாதீங்க. உங்களால பார்வதி கையில் அடிபட்டு இருக்கிறது என்னால சமைக்க முடியாதுன்னு சொன்ன போது கூட எதுவும் செய்ய முடியல.
அங்க சண்டை போட்டுட்டு இருக்காங்க அப்பவும் எதுவும் செய்ய முடியல. கேட்டா நான் கன்ப்யூஷன் ஆயிட்டேன்னு சொல்லிட்டு இருக்கீங்க என்று திட்டிவிட்டு, சான்ராவிடம் சான்றா உங்ககிட்ட எப்ஜே என்ன சொன்னாரு? என்று கேட்க, உடனே எழுந்த சான்ரா, பார்வதிக்கு லேசா தான் அடிபட்டு இருக்கு அவங்க நடிக்கிறாங்க அதனாலதான் நான் அவங்களே ஃபுல்லா சமைக்கட்டும் என்று விட்டு இருக்கிறேனு சொன்னாரு சார் என்று சான்ரா போட்டு கொடுக்கிற்ரா.
இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வதி அழுது கொண்டிருக்கிறார். இந்த ப்ரோமோ தான் இப்போ இணையத்தில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. உண்மையில் இந்த வாரம் பார்வதியின் விளையாட்டு கொஞ்சம் மாற்றம் அடைந்து இருந்தது. ஸ்கூல் டாஸ்க்கில் தனக்கு எவ்வளவோ அவமானம் நடந்தாலும் அதையெல்லாம் தாங்கிக்கொண்டு தனக்கு கொடுத்த கேரக்டராக இருக்க வேண்டும் என்று பார்வதி எவ்வளவோ முயற்சி செய்தார்.
ஆனால் ஆரம்பத்தில் அவர் செய்த வில்லத்தனத்திற்கு எல்லாம் சேர்த்து போனவாரம் போட்டியாளர்கள் பார்வதியையே டார்கெட் செய்து அடித்தார்கள். அதனாலேயே இப்போ அவருக்கு ரசிகர்கள் மத்தியிலும் ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆனாலும் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் மக்களே.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications