Bigg Boss: பிக் பாஸ்க்கு குரல் கொடுத்தவரே இப்போ போட்டியாளர்! தமிழ் 9வது சீசனில் சர்ப்ரைஸ்! யார் தெரியுதா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பத்தில் கொஞ்சம் சண்டை, சச்சரவுகள் என சலிப்பூட்டுவதாக இருந்தாலும், இப்போது வைல்டு கார்டு என்ட்ரிகளாலும், ஸ்பெஷல் டாஸ்க்குகளாலும் நிகழ்ச்சி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த வாரம், ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்னவென்றால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் உயிர்நாடியான அந்தக் கம்பீரக் குரலைக் கொடுத்தவரே இப்போது போட்டியாளராக உள்ளே வந்திருப்பதுதான்!

வைரலாகும் பிக் பாஸ் குரல் ரகசியம்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய அம்சம் என்றால், அதன் பின்னணியில் ஒலிக்கும் அந்த கம்பீரமான குரல் தான். தமிழ் பிக் பாஸ் குரல் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், நெட்டிசன்கள் பல யூகங்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், தற்போது புதிதாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்திருக்கும் ஒரு நபர், கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சிக்குக் குரல் கொடுத்தவர் என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் பெரிய சர்ப்ரைஸாக பார்க்கப்படுகிறது.
யார் அந்த பிக் பாஸ் போட்டியாளர்
அந்த நபர் வேறு யாரும் இல்லை - அவர்தான் நடிகர் அமித் பார்கவ். அமித் பார்கவ், கன்னடப் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குக் குரல் கொடுத்தவர் என்பதை பல பேட்டிகளில் அவரேத் தெரிவித்துள்ளார். இவர் தமிழ் ரசிகர்களுக்குச் சிறந்த சீரியல் நடிகராகப் பரிச்சயமானவர். குறிப்பாக, விஜய் டிவியின் 'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற தொடரில் நடிகை பிரியா பவானி சங்கருடன் ஜோடியாக நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றார். இதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் அவர் பிரபலமானார்.
தற்போதைய நிலை
பின்னர் பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்த இவர், தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ல் வைல்டு கார்டு போட்டியாளராக களமிறங்கியுள்ளார். பிக் பாஸ் சீசன் 9 ஆரம்பத்தில் 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன் உள்ளிட்டோர் ஏற்கனவே எலிமினேட் ஆனார்கள். இந்த சீசனில் கொஞ்சம் சுவாரசியம் குறைந்ததால், இப்போது அதைக் கூட்ட பிக் பாஸ் சில புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
வைல்டு கார்டு என்ட்ரி
கடந்த வாரம் பிரஜன், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் மற்றும் அமித் பார்கவ் என நான்கு வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டுக்குள் நுழைந்தனர். இவர்களின் வருகை வீட்டுச் சூழலைக் கிளப்பியுள்ளது. இந்த வாரம் "ஹோட்டல் டாஸ்க்" எனும் ஸ்பெஷல் போட்டியும் நடைபெற்று வருகிறது. முந்தைய சீசன்களை போலவே இல்லாமல், இந்த முறை பழைய சீசன்களில் பங்கேற்ற தீபக், பிரியங்கா மற்றும் மஞ்சரி ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்துள்ளனர். இது நிகழ்ச்சியை சூடுபிடிக்க வைத்துள்ளது.

ரசிகர்களின் கேள்வி
'பிக் பாஸ்' குரலாக இருந்தவர், இப்போது போட்டியாளராக உள்ளே வந்திருப்பது, ரசிகர்களை பெரிய அளவில் யோசிக்க வைத்துள்ளது. "பிக் பாஸ் குரலாக இருந்த அமித், இப்போது போட்டியாளராக எவ்வளவு நாள் தாக்குப்பிடிப்பார்?" என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். உள்ளே நடக்கும் சண்டை, சச்சரவுகளில் இந்தக் 'கம்பீரக் குரலுக்கு' சொந்தக்காரர் எப்படி செயல்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.
அமித் பார்கவ் தனது சினிமா அனுபவத்தையும், பிக் பாஸ் பின்னணிக் குரல் அனுபவத்தையும் பயன்படுத்தி, இந்த வீட்டுக்குள் எப்படி செயல்படப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications