ஆக்ரோஷமான பார்வதி vs. 'கிழித்து' தொங்கவிட்ட வைல்டு கார்டுகள்! காலையில் நடந்த சம்பவம்! பிக் பாஸ் 9 சண்டை களம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தற்போது நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், நிகழ்ச்சிக்குள் எந்தவித சுவாரஸ்யமானப் போட்டியும் இல்லாமல் சண்டை சச்சரவுகளும், விமர்சனங்களும்தான் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில், வீட்டிற்குள் நுழைந்துள்ள 4 புதிய வைல்டு கார்டு போட்டியாளர்களின் ஆட்டம், ரசிகர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

பார்வதியின் இரட்டை வேடம்
பிக் பாஸ் வீட்டுக்குள் சண்டை போடுவதற்கு பார்வதியைத் தேடவே வேண்டாம். வீட்டிற்குள் ஆக்ரோஷமாகச் சண்டை போட்டாலும், வார இறுதியில் விஜய் சேதுபதியின் முன் இவர் காட்டும் 'பாப்பா முகம்'தான் ரசிகர்களைக் கடுப்பேற்றும் ஒரு விஷயம். விஜய் சேதுபதி என்ன குறை சொன்னாலும், 'ஐயோ' என்று முகத்தை அங்கும் இங்குமாகச் சுருக்கிக் கொண்டு, தான் நிரபராதி என்று காட்டிக்கொள்ளும் பார்வதியின் இரட்டை வேடம் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை.
பார்வதி பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே இருந்தபோது, பெண்களுக்காகவும், யாருக்கு எந்தப் பிரச்சனை என்றாலும் குரல் கொடுத்தார். ஆனால், வீட்டிற்குள் இவரால்தான் எல்லாருக்கும் பிரச்சனை வருகிறது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
வைல்டு கார்டுகளின் அதிரடிப் பஞ்ச்
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதமாகியும், போட்டியாளர்கள் மீதான ரசிகர்களின் அதிருப்தியும், கோபமும் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், பிரஜன், சாண்ட்ரா, அமித் மற்றும் திவ்யா கணேஷ் என்ற 4 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே சென்று, ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் அதிகமான சண்டை சச்சரவுகளும், முகம் சுளிக்கும் கன்டென்ட்களும் மட்டும்தான் இருக்கிறது என்ற விஷயத்தை இந்த 4 போட்டியாளர்களும் உள்ளே சென்று, வெளிப்படையாகப் பேசியது ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
கடுமையான விமர்சனம்
நேற்று வீட்டிற்குள் சென்ற சாண்ட்ராவும், பிரஜனும் உள்ளே இருப்பவர்களிடம் கொஞ்சம் கடுமையாகத்தான் நடந்துகொண்டார்கள். ஆனால், அதைத்தான் மக்கள் எதிர்பார்த்தார்கள் என்பதால், அவர்களுக்குப் பாராட்டுக்கள் குவிந்தன.
இன்று வெளியான ப்ரோமோ
வைல்டு கார்டு போட்டியாளர்கள் தங்களை முகத்துக்கு நேராக அசிங்கப்படுத்தி விட்டார்களே என்று ஆதங்கத்துடன் இருக்கும் பார்வதியைச் சீண்டிவிட்டது. இன்று (நவம்பர் 3) வெளியான முதல் ப்ரோமோவில், பார்வதியின் ஆட்டம் வெறித்தனமாக இருக்கிறது. நேற்று வைல்டு கார்டாக வந்த சாண்ட்ரா, பிரஜன், அமித் மற்றும் திவ்யா கணேஷ் நான்கு பேரையும், பார்வதி 'கிழி கிழின்னு கிழித்திருக்கிறார்'.

ரசிகர்கள் விமர்சனம்
இந்த ப்ரோமோவைப் பார்த்த ரசிகர்கள், "இந்த பார்வதி மட்டும் திருந்தவே மாட்டாங்க; அவங்களுக்கு நல்லது சொன்னா கூடக் கேட்க மாட்டேங்கிறாங்க" என்று கமெண்ட் போட்டு வருகின்றனர். சண்டைகள் மட்டுமே நிறைந்த இந்தச் சீசனுக்கு, புதிய போட்டியாளர்களின் வருகை ஒரு ட்விஸ்ட் கொடுத்துள்ளது. வைல்டு கார்டுகளின் சிறப்பான ஆட்டம், இந்தச் சண்டைகளை ஆரோக்கியமானப் போட்டியாக மாற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications