பிக்பாஸ் அல்டிமேட்: ரவுண்டு கட்டி பதில் சொல்லும் அபிராமி... ஒரு வார்த்தைக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது நடக்கும் டாஸ்க் நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மாற்றி மாற்றி கேள்வி கேட்கிறோம் என்று கலவரத்தை வளர்த்து வருகிறார்கள்.

ஒருவேளை அதுவாக இருக்குமோ
கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது பிரச்சனைகளும், பஞ்சமில்லாமல் வெடிக்க தொடங்கியிருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கிய மூன்று நாட்களில் இவ்வளவு கலவரமா?? என்று பார்க்கும் ரசிகர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு இருந்தாலும், இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது என்று சிலர் ஆதரவு கொடுத்து வருகின்றனர். டாஸ்க் நேரத்தில் இவர்கள் அடித்துக் கொள்வதும் மீதமிருக்கும் நேரத்தில் இவர்கள் பேசிக்கொள்வதும் பார்க்கும்போது இது எல்லாமே ஸ்கிரிப்ட் தானா என்று எண்ணத் தோன்றுகிறது என்று பலரும் கூறி வருகிறார்கள்.

இதுதான் பழிவாங்கும் படலமா
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி தற்போது மூன்றாவது நாளில் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் லேட்டஸ்டாக உள்ளே டாஸ்க் விளையாடி வருகின்றனர். அதில் போட்டியாளர்கள் இரண்டு அணியாக பிரிந்து ஒரு அணியினர் செய்தியாளர் ஆகவும், மற்றொரு அணியினர் பிக்பாஸ் பிரபலங்களாகவும் கலந்து கொண்டுள்ளனர். அதில் இதுவரைக்கும் தங்கள் மனதில் வைத்திருக்கும் குமுறல்களை எல்லாம் கேள்விகளாக செய்தியாளர்கள் தரப்பிலிருந்து கேட்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நேற்று பிக்பாஸ் பிரபலங்கள் ஆக இருந்த போட்டியாளர்களை செய்தியாளர்கள் வறுத்தெடுத்து விட்டனர். இன்று அங்கு கேள்வி கேட்டவர்களை பழிவாங்கும் படலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பாலாவின் அதிரடி கேள்வி
இன்று முதல் ப்ரோமோவில் தாடி பாலாஜி பிக்பாஸ் பிரபலமாக அமர்ந்திருக்கும் போது அவரிடம் பாலாஜி முருகதாஸ் இந்த பிக்பாஸ் வீட்டுக்குள்ளே நீங்க மட்டும்தான் ஒரே காமெடியன் என்று சொன்னாங்க.. ஆனா உங்க கூட இத்தனை பேரை வச்சிருக்கீங்களே என்ன விஷயம் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அடுத்ததாக லாஸ்ட் டைம் உங்க வைஃப் கூட வந்தீங்க இந்த முறை இவங்க கூட வந்து இருக்கீங்க உங்களுக்கு தனியா வர்ற பழக்கம் கிடையாதா?? என்று கேள்வி கேட்டிருக்கிறார். இதற்கு தாடி பாலாஜி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டு இருக்கிறார்.

ரசிகர்களின் கருத்து
பாலா தன்னைப்பற்றி தாடி பாலாஜி இடம் பேசியதை கேட்டதும் அபிராமி வழக்கம்போல இது ஒரு ஸ்கிரிப்ட், வளர்ச்சியில்லாத பேச்சாக இருக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது வனிதா பாலாவிற்கு ஆதரவாக பேசியிருக்கிறார். உடனே நேத்து நீங்க எல்லாம் ரொம்ப கரெக்டா இருந்தீங்களா?? என்று அபிராமி அனைவருடைய வாயையும் அடைத்து இருக்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்ததும் ரசிகர்கள் ஒருசிலர் அபிராமிக்கு சப்போர்ட் கொடுத்து வருகின்றனர். இன்னும் ஒருசிலர் அபிராமியின் பேச்சு இரிட்டேட் செய்வதாக இருக்கிறது என்று கூறிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications