இவங்க மூணும் குரங்குங்க.. பங்கமாக கலாய்த்த விசித்திரா.. நான் தப்பு பண்ணிட்டேன்! ரச்சிதா திடீர் போஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்த பிறகும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்குள் இருக்கும் கருத்து மோதல்கள் இன்னும் முடிவடையவில்லை. இணையத்தில் இப்போது விசித்திரா மூன்று குரங்கு பொம்மைகளின் புகைப்படங்களை வெளியிட்டு கொடுத்த கேப்ஷன் தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. போதாக்குறைக்கு சீரியல் நடிகை ஆன ரச்சிதாவும் தன்னுடைய பங்குக்கு தான் தப்பு பண்ணிவிட்டேன் என்று ஒரு பதிவை போட ரசிகர்களின் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சிலர் பேட்டி கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் விஷ்ணு, தினேஷ், மணி 3 பேரும் தொடர்ந்து ஒன்றாகவே எல்லா பேட்டிகளும் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது விசித்திரா குறித்து கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் சில கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் விசித்திரா இப்போது மூன்று குரங்குகளின் பொம்மைகளை புகைப்படங்களாக வெளியீட்டு கேப்ஷன் கொடுத்திருக்கிறாரா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. ஆனாலும் இந்த சீசன் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்குள் இருந்த வன்மம் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை. பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தான் இவர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் தங்களுடைய வன்மத்தைக் காக்கி கொண்டிருந்தார்கள். அடிக்கடி சண்டை சச்சரவுகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் வெளியே வந்த பிறகும் இவர்கள் மாறிவிடுவார்கள் என்று நினைத்த ரசிகர்களுக்கு இப்போது ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு போட்டியாளர்கள் கொடுக்கும் பேட்டிகளில் தங்களுக்கு எதிராக இருந்த போட்டியாளர்கள் குறித்து சில கருத்துக்களையும் தெரிவித்து வருவதை பார்க்க முடியும்.
அந்த வகையில் சமீபத்தில் விஷ்ணு, மணி, தினேஷ் கலந்து கொண்டிருக்கும் போது விசித்திரா குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விசித்ரா பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது எனக்கு இந்த நிகழ்ச்சியை விளையாடவே தெரியல. பிக் பாஸ் கேம் புரியவே இல்லை என்றெல்லாம் பேசிக்கொண்டு இருந்தார். ஆனால் வெளியே வந்து பார்த்தால் தான் தெரிகிறது அவர் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து இருக்கிறார்.

ஆனால் உள்ளே எங்களிடம் ஏமாற்றிக் கொண்டு இருந்திருக்கிறார் என்று கூறியிருந்தனர். இந்த நிலையில் விசித்திரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதுதான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது அந்த பதிவில் மூன்று குரங்கு பொம்மை புகைப்படத்தை பதிவிட்டு இந்த மூன்று குரங்குகளும் அமேசான் காட்டில் இருக்கிறது என்று கேள்விப்பட்டேன் நீங்க பார்த்து இருக்கீங்களா? என்று நக்களாக கேள்வி கேட்டிருக்கிறார்.
இது குறித்து ரசிகர்கள் இது விஷ்ணு மணி தினேஷை கலாய்க்கிற மாதிரி இருக்கிறதே என்று பலர் கேள்விக்கு எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் ரச்சிதா மகாலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய வீடியோ ஒன்றை பதிவிட்டு அதற்கு கீழே சில கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதில் எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுடைய குறைகளை தவிர்த்து உங்களை காதலியுங்கள் என்று அதில் கூறி இருக்கிறார்.
அதோடு நாம் தப்பே செய்திருந்தாலும் நம்மை காதலிப்பதில் தப்பே இல்லை. நான் நிறைய தப்பு செய்துவிட்டேன் என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் ரச்சிதா தினேஷ் குறித்துதான் இப்படி ஒரு கேப்ஷன் கொடுத்திருக்கிறாரா என்றும் பலர் கேள்வி எழுப்பிவிட்டு வருகிறார்கள். அதுபோல தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரச்சிதாவை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டார். ஆனால் ரச்சிதா மட்டும் சமூக வலைத்தளத்தில் தினேஷை தாக்கி அடிக்கடி பதிவு வெளியிட்டு வருகிறாரே என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications