அந்த அதிர்ஷ்டம் கிடைத்துவிட்டது..உயர்ந்த பரிசை மகாலட்சுமிக்கு கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்த ரவீந்தர்
தயாரிப்பாளர் ரவீந்தர் தன்னுடைய மனைவி மகாலட்சுமி குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: சின்னத்திரை நடிகை ஆன மகாலட்சுமியின் பிறந்தநாளுக்கு அவருடைய கணவர் எதிர்பாராத பரிசு கொடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பெரிய கேக் இல்லாமல் காஸ்ட்லியான கிப்ட் இல்லாமல் மல்லிகை பூவை கொடுத்து மகாலட்சுமியின் மனதை மயக்கிய ரவீந்தர் அதற்கு பெரிய விளக்கமும் கொடுத்திருக்கிறார்.
மகாலட்சுமி குறித்து ரவீந்தர் கூறிய பதிவிற்கு மகாலட்சுமி எதிர்பாராத விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பரபரப்பை ஏற்படுத்திய திருமணம்
தயாரிப்பாளர் ரவீந்தர் திருமணத்திற்கு பிறகு வந்த தன்னுடைய மனைவியின் முதல் பிறந்த நாளை மிகவும் எளிமையான முறையில் கொண்டாடி இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் ஹார்ட் டாப்பிக்காக இருந்த பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் திருமணம் தான் இவர்களின் திருமணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

காதல் திருமணம்
நட்புனா என்ன தெரியுமா, முருங்கக்காய் சிப்ஸ் போன்ற திரைப்படங்களை தயாரித்த ரவீந்தர் தயாரிப்பாளராக பலருக்கும் தெரிந்ததை விட இவரை பிக் பாஸ் பலருக்கும் தெரியும். அதுவும் வனிதா பங்கேற்ற பிக்பாஸ் 4கில் இவரது விமர்சனம் பெரும் பிரபலமானது. இப்படி ஒரு நிலையில் தான் சமீபத்தில் சின்னத்திரை நடிகையாக இருக்கும் மகாலட்சுமியை காதலித்து எளிமையான முறையில் திருமணம் செய்திருந்தார். ஏற்கனவே மகாலட்சுமிக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. அது விவாகரத்தில் முடிந்த நிலையில் ரவீந்தரை மகாலட்சுமியும் காதலித்து திருமணம் செய்த இவர்கள் இருவரை பற்றி சமூக வலைதளத்தில் அதிகமான உருவ கேலி பரவி வந்த நிலையிலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

பிறந்தநாள் வாழ்த்து செய்தி
இந்த நிலையில் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு வந்த மனைவியின் முதல் பிறந்த நாளில் ரவீந்தர் பதிவிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், பிறந்த நாள்... இன்று என் மகாலட்சுமிக்கு பிறந்தநாள்.. பிரம்மனின் மொத்த கற்பனையாக எனக்கு விற்பனையானவள் என் மகாலட்சுமி. வாழ்க்கையில் அது இஷ்டத்துக்கு ஒன்னு வந்தா தான் அது அதிர்ஷ்டம் என்று சொல்லுவாங்க. அந்த அதிர்ஷ்டம் தான் என் மகாலட்சுமி. ஒரு மனிதன் தான் பிறந்ததிலிருந்து எல்லா விசேஷ நாட்களையும் கொண்டாடுவான். ஆனா அவன் பிறந்ததை ஒரு விசேஷமாக கொண்டாடுவது அவன் குடும்பம் தான்.

கல்யாணம் பண்ணிக்க காரணம்
ஒரு காலகட்டத்துக்கு அப்புறம் அதை கொண்டாடுவது அவனால் உருவாக்கப்பட்ட குடும்பம். அப்படி உன்னால உருவாக்கப்பட்ட குடும்பத்தோட ஒரு ஆளாத்தான் நான் உன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறேன். நம்ம வாழ்க்கையில நாம நிறைய பேரை நேசிப்போம். அவர்கள் நேசிக்கணும்னு அவசியம் இல்லை. அவங்க நம்ம மேல மரியாதையாகவும், அன்பாகவும் இருப்பாங்க. ஆனா நாம பலபேரை நேசிக்க மறந்து இருப்போம். அவங்க நம்மள அளவுக்கு அதிகமாக நேசிக்கிறவங்களா? இருப்பாங்க. அப்படி ஒன்னு என் கண்ணுல தென்பட்டப்பதான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுச்சு.

மல்லிகைப்பூ சிரிக்குது
மகாலட்சுமி காலையிலிருந்து ஒரே யோசனை. உன் பிறந்தநாளுக்கு என்ன செய்கிறது என்று 12 மணிக்கு கேக் வெட்டுவது, ஸ்வீட் கொடுக்கிறது, முதியோர் இல்லம், அனாதை இல்லம்னு போய் சாப்பாடு போடுறது, பிடிச்ச கிப்ட் கொடுக்கிறது, இப்படி எல்லாமே எப்பவுமே உனக்கு எல்லாரும் பண்றது தான். ஆனா எனக்கு உன்ன பிடிக்கும். அதனால எனக்கு பிடிச்ச ஒன்றை உனக்கு கொடுக்கணும்னு தோணுச்சு. அப்படி ஒரு விஷயம் தான் இந்த மல்லிகைப்பூ. நாம நம்ம தேவைக்கு எதை வேணாலும் பாதிக்க முடியும் என்கிற போது இந்த பூவை உனக்கு கொடுக்கிறதுக்கு ஒரு காரணம் தான். இந்த பூவிற்கு நிகர் ஏதுமில்லை. என் மகாலட்சுமியின் நிகரும் யாருமில்லை. என்னை பொறுத்தவரை இந்த பூ மிகப்பெரிய ஒரு கிப்ட். உனக்கு நான் கொண்டு இன்னைக்கு கொடுக்கிறது. மத்த பொருளை நான் வாங்கிக் கொடுக்கிறதுல இருக்கிற அன்பை விட அன்பே உருவான இந்த பூவில் அதிகமாக இருக்கு .So my humble gift வாங்கிக்கோ. இதுக்கப்புறம் உனக்கு பிடிச்ச எந்த பொருளையும் காசு கொடுத்து நீ வாங்கிக்கலாம். ஆனா இந்த பூ என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு பொண்ணுக்கு நான் வாங்கி கொடுக்குற கிப்ட். அது உனக்குத்தான் என்று உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications