பாபி சிம்ஹாவுக்கு நடந்த அநியாயம்! மனைவி நடிகை ரேஷ்மி சொன்ன வார்த்தையால் குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகர்களில் ஒருவரான பாபி சிம்ஹா மற்றும் அவரது மனைவி ரேஷ்மி ஆகியோரின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து, ரேஷ்மி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. இவர்களுக்குள் நடந்த சுவாரஸ்யமான சண்டை குறித்து ரேஷ்மி பேசியது, ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாபி சிம்ஹா - ரேஷ்மியின் காதல் பயணம்
நடிகர் பாபி சிம்ஹா, வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். குறிப்பாக, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் நடித்த 'ஜிகர்தண்டா'திரைப்படம், அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.

பாபி சிம்ஹா, 2016-ஆம் ஆண்டு தன்னுடன் 'உறுமீன்' திரைப்படத்தில் நடித்த நடிகை ரேஷ்மியை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ரேஷ்மி, தனது கல்லூரி காலத்தில் கிடைத்த ஆடிஷன் மூலம், 'இனிது இனிது' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். இந்த தடவை திரைப்படம் அந்த நேரத்தில் கல்லூரி பள்ளி மாணவர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட திரைப்படம் பலருடைய கனவு கன்னியாக ரேஷ்மி அந்த நேரத்தில் வலம் வந்தார்.
பாபி சிம்ஹா திருமண வாழ்க்கை
இந்தப் படத்திற்குப் பிறகு சில படங்களில் நடித்த அவர், திருமணத்திற்குப் பின்னர் நடிப்பதிலிருந்து விலகியிருந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் அடியெடுத்து வைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பாபி சிம்ஹா - ரேஷ்மி தம்பதியருக்கு, முத்ரா என்ற மகளும், அர்ஜூன் என்ற மகனும் உள்ளனர்.

விரல் நகங்கள் தான் ஆயுதம்
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ரேஷ்மி, தனக்கும் பாபி சிம்ஹாவுக்கும் இடையே நடக்கும் சண்டைகள் குறித்துப் பேசியுள்ளார். "எனக்கும் என் கணவருக்கும் நிறைய சண்டைகள் நடக்கும். அப்போது என் விரல் நகங்கள் தான் என் ஆயுதம்," என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
"அப்படி ஒருமுறை எங்கள் சண்டையில், அவரது மூக்கில் நான் கீறிவிட்டேன். பாபி சிம்ஹா அந்த காயத்துடன் ஒரு படத்தில் நடித்தார். அதை மறைக்க படக்குழுவினர் பெரிய பாடுபட்டனர். இன்னொரு படத்தில், நான் ஏற்படுத்திய அந்தக் காயத்தை அவரது கதாபாத்திரத்துக்கான அடையாளமாகவே மாற்றிக்கொண்டார்," என்று ரேஷ்மி கூறியது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாபி சிம்ஹா சகோதரியின் பாராட்டு
பாபி சிம்ஹாவின் சகோதரி ரேஷ்மா பசுபுலேட்டி, 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். அவரும் பலமுறை தனது சகோதரர் குறித்துப் பெருமையாகப் பேசியுள்ளார். "பாபி சிம்ஹா, எனக்கு ஒரு சகோதரனைவிட ஒரு தந்தையாகவே இருந்தார். என் திருமண வாழ்க்கைக்கு அவர் நிறைய உதவிகளைச் செய்தார்," என்று ஒரு பேட்டியில் ரேஷ்மா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.
பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மி இருவரும் தங்கள் தொழில் வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பரஸ்பர அன்பும், ஆதரவும் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு பாபி சிம்ஹா தன்னுடைய மனைவியை பிரிய போகிறார் என்று சில வதந்திகள் பரவி வந்தது. அதற்கும் சமீபத்தில் ரேஷ்மி மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதோடு படங்களில் வில்லனாக மிரட்டி கொண்டிருக்கும் பாபி சிம்ஹா தன்னுடைய மனைவியிடம் படும் நிலைமை பரிதாபம் தான் என்று சிலர் கிண்டலாக கமெண்ட் கொடுத்து இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
