தீராத காதல் தொடரும்.. கணவரோடு மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்த “கயல்“ சைத்ரா.. குவியுது வாழ்த்து
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் சைத்ரா ரெட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை சைத்ரா ரெட்டி சீரியலில் மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் நடிகர் அஜித்தோடு வலிமை திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் இவர் தமிழ் சீரியலில் அறிமுகமானது விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் தான்.

இந்த சீரியலில் ஆரம்பத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வந்தார். அவர் திரைப்பட வாய்ப்பிற்காக சீரியலில் இருந்து விலகியதும் அவருக்கு பதிலாக பிரியா கேரக்டரில் சைத்ரா ரெட்டி நடித்து வந்தார். ஆனால் தனக்கு கதாநாயகியாக நடிப்பதை விடவும் வில்லியாக நடிக்க தான் பிடிக்கும், வில்லியாக நடித்தால்தான் தன்னுடைய திறமையை காட்ட முடியும் என்று பேட்டிகளில் சொல்லிக் கொண்டிருந்தார்.
அதுபோலவே கல்யாணம் முதல் காதல் வரை சீரியலுக்கு அடுத்ததாக ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்று சீரியலில் வில்லியாகவே களமிறங்கி விட்டார். அழகான வில்லி என்று இவரை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். என்னதான் இவர் சீரியலில் வில்லத்தனம் செய்து கொண்டிருந்தாலும் இவரை பலரும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பாராட்டி ஹார்ட்டின் பறக்க விட்டுக் கொண்டிருந்தனர்.

காரணம் இன்ஸ்டா பக்கங்களில் இவர் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி ரசிகர்களை மிரள வைத்துக் கொண்டு இருந்தார். அதிலும் இவர் மட்டும் தனியாக புகைப்படங்களை எடுக்காமல் இவருடைய தோழிகளான ஷபானா, நட்சத்திரா, ரேஷ்மா போன்றோர் வந்து போட்டோக்களை எடுத்து பகிர அது லைக்குகளை குவித்து வந்தது. யாரடி நீ மோகினி சீரியல் முடிவுக்கு வந்ததும் அந்த நேரத்தில் சன் டிவியில் கயல் சீரியலில் கதாநாயகியாக என்ட்ரியானார்.

சீரியல் தொடங்கி சில வருடங்களை கடந்து விட்ட நிலையில் இப்போது இவர் கயல் சைத்ரா என்றுதான் ரசிகர்கள் மனதில் பதிந்திருக்கிறார். இந்த நிலையில் இவருக்கு சில வருடங்களுக்கு முன்பே திருமணம் முடிவடைந்துவிட்டது. தற்போது தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்.
அதோடு தனக்கு திருமணம் முடிந்து நான்கு வருடம் ஆகிவிட்டது என்று தன்னுடைய கணவருக்கு திருமண நாள் வாழ்த்துக்களையும் பகிர்ந்து இருக்கிறார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் சைத்ரா மற்றும் அவருடைய கணவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications