ஷிவானி விட்டுச் சென்ற சிம்மாசனம்.. இட்டு நிரப்புவாரா சாந்தினி!
சென்னை: ஜீ தமிழில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இரட்டை ரோஜா சீரியலில் ஷிவானி நாராயணன் அந்த சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். தற்போது அவர் அந்த சீரியலில் இருந்து விலகுவதால் அவருக்கு பதில் சாந்தினி தமிழரசன் களம் இறங்குகிறார்.
Recommended Video
சாந்தினி சென்னையில் பிறந்து சென்னையிலேயே விஷுவல் கம்யூனிகேஷன் பட்டமும் பெற்றிருக்கிறார். 17 வயதில் மிஸ் சென்னை 2007 போட்டியில் பங்கு பெற்றிருக்கிறார்.
அதன்பிறகு ஒரு தமிழ் சேனல் ரியாலிட்டி ஷோவில் தோன்றியிருக்கிறார். அப்போதுதான் கே பாக்யராஜ் பார்த்து விட்டு தன்னுடைய அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.

சாந்தனுவுடன் சித்து பிளஸ்டூ
ஆடிஷனில் கலந்துகொண்டு செலக்ட் ஆனதால் அவரது புது படத்துக்கு கையெழுத்தும் போட்டு இருக்கிறார். அந்த படத்தில் பாக்கியராஜின் மகன் சாந்தனு உடன் இவர் நடித்த படம்தான் சித்து பிளஸ் 2. முதல் படத்தில் இவரது வெற்றியை தொடர்ந்து பல படங்களிலும் இவருக்கு வாய்ப்பு வந்தது அதில் நடித்துக் கொண்டு தனது கல்வியையும் தொடர்ந்து இருக்கிறார்

படங்கள் ஓடவில்லை
நான் ராஜாவாகப் போகிறேன் ,வில்லம்பு, கண்ணுல காச காட்டப்பா, பில்லா பாண்டி ,பலூன், மன்னார் வகையறா, எட்டுதிக்கும் பற என பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர். தனக்கு ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான் அவருக்கு விஜய் டிவியிலிருந்து தாழம்பூ என்னும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது.

தாழம்பூ அறிமுகம்
வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரையிலும் கலக்கவும் முடிவெடுத்து தாழம்பூ என்னும் சீரியலில் ரேவதி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இது இவருக்கு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி அதை தொடர்ந்து அதில் சிறப்பாக நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் இவருக்கு ஜீ தமிழில் இருந்து இரட்டை ரோஜா சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது இந்த சீரியலில் இதற்கு முன்பு ஷிவானி நடித்திருந்தார்.

டபுள் ஆக்ட் நடிப்பில்
இவர் தற்போது இதில் இருந்து விலகுவதால் அவர் நடித்த இரட்டை வேடத்தில் இவர் நடிக்ககிறார். இந்த சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் கதாநாயகி மாறி இருப்பது சிறு குழப்பத்தை ஏற்படுத்தினாலும் கதையின் தாக்கம் காரணமாக ரசிகர்கள் சாந்தினியை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறோம் என தயாரிப்பாளர் தரப்பு கூறுகிறது. பல ரசிகர்கள் இதைப்பற்றி இணையதளத்தில் கமெண்ட்களை குவித்து வருகிறார்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications