சாருஹாசனுக்கு விபத்தில் நினைவு போயிடுச்சி.. ஆனால் சுஹாசினி செய்தது! கமல்ஹாசன் அண்ணி எமோஷனல்
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய மனைவியோடு கலந்து கொண்டிருக்கிறார். அப்போது சாருஹாசனின் மனைவி கோமளவள்ளி, சாருஹாசனுக்கு சில வருடங்களுக்கு முன்பு பாரிஸில் நடந்த ஆக்சிடென்ட் குறித்து உருக்கமாக பேசி இருந்தார். ஆனால் அந்த நேரத்தில் சுஹாசினி செய்த உதவி எங்களால் மறக்கவே முடியாது என்பது பற்றியும் அதில் வெளிப்படையாக சாருஹாசன் மனைவி பேசியிருக்கிறார்.
அந்த வகையில் சாருஹாசன், சந்திரஹாசன், கமல்ஹாசன் மூவரும் அண்ணன் தம்பிகள் தான். மூவருமே சினிமாவில் தங்களுடைய பல திறமைகளை காட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியில் சாருஹாசன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர். அந்த பேட்டியில் தங்களுடைய திருமணம் எப்படி நடந்தது என்பது பற்றி சாருஹாசன் பேசியிருந்தார்.

அதில் நாங்கள் கமல்ஹாசனுக்காக தான் எங்களுடைய திருமணத்தை செய்து கொண்டோம் என்று அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் ஒரு வயதில் நாங்கள் எங்களுடைய குழந்தைகளுக்கு அம்மாவும் அப்பாவாக இருந்தோம் ஆனால் எதிர்பார்க்காத நேரத்தில் எங்களுடைய கஷ்டத்தின் போது எங்களுடைய குடும்பத்தினர்கள் தான் எங்களுக்கு பல உதவிகள் செய்தார்கள் என்று கோமளவள்ளி உருக்கமாக பேசியிருக்கிறார்.
அதிலும் சுஹாசினி தங்களுக்காக செய்த செயலை மறக்கவே முடியாது என்று அதில் அவர் கூறியிருக்கிறார். அந்த வகையில் கோமளவள்ளி பேசுகையில், ஒருமுறை சாருஹாசன் பாரிஸில் இருந்தார். நான் என்னுடைய மகளோடு அமெரிக்காவிலிருந்தேன். அப்போது சாருஹாசனுக்கு திடீரென்று ஒரு விபத்து ஏற்பட்டு ஒரு உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து விட்டார். முதுகில் பலத்த அடிபட்டுவிட்டது.
அந்த நேரத்தில் அவர் சுயநினைவு இல்லாமல் இருந்தார். அப்போது அங்கு சுஹாசினி இருந்தாள்... சுஹாசினி தான் சாருஹாசனை முழுமையாக பார்த்துக் கொண்டார். ஏற்கனவே குழந்தையாக இருக்கும்போது இருந்து சுஹாசினிக்கு எங்கள் மீது கொள்ளை பிரியம். ரொம்பவும் பாசமாக நடந்து கொள்வார். அதுபோல எங்களுக்கு மகனாக மணிரத்தினமும் வந்து சேர்ந்தார்.
ஆனால் சாருஹாசனுக்கு விபத்து ஏற்பட்ட போது அந்த நேரத்தில் சுஹாசினி மட்டும் என்னுடைய கணவருக்கு உதவிகள் செய்யவில்லை என்றால் எங்கள் நிலைமை அவ்வளவுதான். காரணம் நான் அமெரிக்காவில் இருந்தேன் என்னுடைய மகள் டாக்டராக அமெரிக்காவில் இருந்தாலும் பாரிஸில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அந்த நேரத்தில் சுஹாசினியே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டார்.

பிறகு பாரிசில் இருந்து விமானத்தில் சாருஹாசனை சென்னைக்கு கூட்டிட்டு வந்தபோது அவரை ஸ்ட்ரக்சரில் தான் தள்ளிக் கொண்டு வந்தார். அதற்குப் பிறகு தான் சாருஹாசன் மெல்ல மெல்ல உடல்நிலை சரியாகி இருந்தார். அதுபோல பாரிஸில் சாருஹாசன் மருத்துவமனையில் இருக்கும் போது அவருக்கு நினைவு இல்லாமல் இருந்தது.
அந்த நேரத்தில் தினமும் எனக்கு போன் பண்ணி சுஹாசினி அண்ணனுக்கு பிடித்த பாடல்கள் என்ன என்று என்னிடம் கேட்பார். அதை நான் சொன்னதும் சாருஹாசன் பக்கத்தில் இருந்து அந்த பாடலை சுஹாசினி பாடிக்கொண்டே இருந்தார். அதற்கு பிறகு தான் அவர் சுயநினைவுக்கு வந்திருந்தார் என்று உருக்கமாக சாருஹாசன் மனைவி கோமளவள்ளி பேசி இருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications