CWCயில் இருந்து தாமு விலகுகிறேன் என்று சொல்லிட்டு விலகாத காரணம் இதுதான்! வெங்கடேஷ் பட் ஓப்பன் அப்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு தன்னோடு தாமுவும் நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன் என்று சொல்லிட்டு விலகாதது எதற்காக என்பது பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அந்த வகையில் வெங்கடேஷ் பட் நான்கு சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். ஆனால் ஐந்தாவது சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பே தான் அதிலிருந்து விலகப் போகிறேன் என்னோடு செஃப் தாமுவும் வந்துவிடுவார் என்று ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து அடுத்த நாளே செஃப் தாமுவும் ஆமாம் நானும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் இருந்து விலகப் போகிறேன் என்று சொல்லியிருந்தார்.

Chef Venkatesh Bhatt about The reason why dhamu did not quit the show Cook with comali

பிறகு அந்த வீடியோவை டெலிட் செய்து விட்டார். அதைத்தொடர்ந்து வெங்கடேஷ் பட் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் நண்பனின் வாக்கு மாறினாலும் நட்பு மாறாது என்று பதிவு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் எதற்காக தாமு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தன்னோடு விலகி வெளியே வருகிறேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் விலகாமல் அந்த நிகழ்ச்சியில் தொடர்கிறார் என்பது குறித்து பேட்டி ஒன்றில் வெங்கடேஷ் பட் பேசுகையில், ஆரம்பத்தில் விஜய் டிவியில் நானும் தாமுவும் இணைந்து கிட்சன் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தோம்.

அந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதில் மீடியா மேஷன் நிறுவனம் என்னை அணுகி நீங்கள் தான் இந்த நிகழ்ச்சியிலிலும் நடுவராக இருக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். அதோடு உங்களுக்கு துணையாக ஒரு பெண் தொகுப்பாளர் மற்றும் ஆண் தொகுப்பாளர் இருப்பார்கள் என்று சொல்லியிருந்தார்கள். விஜய் டிவியில் தரப்பிலிருந்து ஒரு நடுவருக்கு மட்டும்தான் பணம் கொடுக்க முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் நான் எனக்கு செஃப் தாமு வேண்டும் ஒருவராக இருந்து கொண்டு என்னால் என்டர்டைன்மென்ட் செய்ய முடியாது என்று சொன்னேன். பிறகு மீடியா மெஷன் நிறுவனம் விஜய் டிவியில் பேச்சுவார்த்தை நடத்தி தாமுவை குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கொண்டு வந்திருந்தனர். நான்கு சீசன்களாக நல்லா தான் போய்க்கொண்டிருந்தது. ஐந்தாவது சீசனில் மீடியா மெஷன் நிறுவனம் விஜய் டிவியில் இருந்து விலகும் போது நானும் அவர்களோடு வந்துவிடலாம் என்று முடிவு எடுத்தேன்.

அப்போது தாமுவும் நானும் உன்னோடு வந்துவிடுகிறேன் நாம மீடியா மேஷன் எங்கு இருக்கிறதோ அங்கேயே போய்விடலாம் என்று சொல்லி இருந்தார். ஆனால் பிறகு விஜய் டிவி என்னிடம் பேச்சு வார்த்தை நடத்தியது போல தாமுவிடமும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அதில் அவருக்கு உடன்படிக்கை ஏற்பட்டு இருக்கிறது. அதனால் அவர் விஜய் டிவியில் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.

ஏற்கனவே அவர் வெளியிட்ட வீடியோவும் டெலிட் செய்து விட்டார். எனக்கு அது சரிப்பட்டு வரல. நான் சன் டிவியில் புது நிகழ்ச்சிக்கு வந்து விட்டேன். அவர் அங்கேயே தங்கி விட்டார். நான் எப்போதும் சொல்வது போல தான் இப்போதும் சொல்கிறேன். நண்பனின் வாக்கு மாறலாம் ஆனால் நட்பு எப்போதும் மாறாது. எனக்கு அவர் எப்போதும் அதே நட்போடு தான் இருக்கிறார். ஆனால் நான் அந்த சம்பவத்திற்கு பிறகு இன்னும் தாமுவோடு பேசவில்லை. அதற்கான சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை அதனால் பேசவில்லை அவ்வளவுதான்... என்று அந்த பேட்டியில் வெங்கடேஷ் பட் கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+