ஈசிஆரில் யார்னு பாருங்க..சென்னை ரிசார்ட்டில்? அதுவிடுங்க ரூ.7 கோடியில் வந்த டூரிஸ்ட் ஃபேமிலி அசத்தல்
சென்னை: அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கி, சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் "டூரிஸ்ட் ஃபேமிலி"... இந்த படம் வெளியான நாளிலிருந்தே பல்வேறு சாதனைகளைப் படைத்து கொண்டிருக்கிறது.. இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து சொல்லப்பட்டிருந்ததால், இந்த படம் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் இந்த படம் வசூலிலும் சாதனை படைத்து கொண்டிருக்கிறது. நடப்பாண்டில் இதுவரை வெளியான படங்களின் வசூல் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சமீபத்தில் Media circle என்ற யூடியூப் சேனலுக்கு தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், அரசியல் காரணங்களுக்காகவே, சில ஹீரோக்களின் வெளியாகும் படங்கள் வீழ்த்தப்படுகின்றன என்ற விமர்சனத்தை பலமாக மறுத்தார்..

அப்போது அவர் சொல்லும்போது, "நல்ல சினிமாவை தந்துட்டு, அது ஓடாமல் போனால் இப்படியெல்லாம் விமர்சனம் வைக்கலாம். ஆனால், தக் லைஃப், இந்தியன் 2, கங்குவா, மாதிரியான படங்களை தந்துவிட்டு, அரசியல் காரணங்களுக்காக ஓடாமல் செய்துட்டாங்க என சொல்வது சரி கிடையாது.
400 இன்புளூயன்சர்கள்
தக் லைஃப் பட ரிலீசுக்கு முன்பு, 400 இன்புளூயன்சர்களை அழைத்து, ஈசிஆர் ரிசார்ட்டில் தங்க வைத்து, மதுபானம் உள்ளிட்ட பார்ட்டி தரப்பட்டுள்ளது.. கமல், சிம்பு கலந்து கொண்ட பிரத்யேக நிகழ்ச்சியும் தக் லைஃப்க்காக நடத்தப்பட்டது. அப்படியானால், 400 பேரும், நிச்சயம் படத்தை புரமோட் செய்ய பணம் வாங்கியிருப்பார்கள்.. இதுபோன்ற இன்புளூயன்சர்களுக்கு பணத்தை தருவது யார்? இதே தயாரிப்பாளர்கள்தானே பணத்தையும் தந்து ஊக்கப்படுத்துறாங்க?
ஈசிஆர் ரிசார்ட்டில் தங்கவைத்து, கவனித்து அனுப்பப்பட்ட அந்த 400 பேருமே நிச்சயம் தக் லைஃப் பற்றி பாசிட்டிவ் விமர்சனத்தைதானே செய்திருக்க முடியும்? அப்படி பாசிட்டிவ்வாக பேசும்போது, அந்த படம் எப்படி தோல்வியடையும்?
ஈசிஆர் ரிசார்ட்
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை எடுத்து கொண்டால், மார்க்கெட்டில் இல்லாதவர்களை வைத்து, வெறும் 4 கோடியில் படத்தை எடுத்துள்ளனர்..
அந்த படத்துக்கு எத்தனை பேருக்கு பணம் தந்து, இன்புளூயன்சர்களை பயன்படுத்தினார்கள்? அந்த படம் நல்லா ஓடுச்சா இல்லையா? பாசிட்டிவ் விமர்சனங்களை அனைவருமே தந்தார்களா இல்லையா? படம் கோடிக்கணக்கில் வசூல் செய்கிறதா இல்லையா? யாருக்காவது காசு தந்து புரமோட் செய்தார்களா? சரியான படத்தை தராமல், தவறான ரிவ்யூ செய்து தோற்கடித்து விடுவார்கள் என்று சொல்வதில் என்ன நியாயம்?
கதை எங்கே
1000 கோடி எடுக்கணும்னு ஆசைப்படறாங்க, அதுக்கேத்த கதை வேணும்தானே? 500 கோடியில் தக் லைஃப் படத்தை எடுத்துவிட்டு தம்மாத்துண்டு கதையை காணோம்.. ஆனால், வெறும் 4 கோடியில் எடுத்த டூரிஸ்ட் ஃபேமிலி 75 கோடி ரூபாய் வசூலிக்கிறது.. இது 1000 கோடி வசூலித்ததற்கு சமமாகும்" என்று காட்டமாக பேசியிருந்தார்.
அந்தவகையில், சோஷியல் மீடியா மட்டுமல்ல, பொதுமக்களின் ஆதரவையும் சேர்த்து பெற்ற படமாக டூரிஸ்ட் ஃபேமிலி அமைந்துள்ளது.. கடந்த மே மாதம் வெளியான இப்படம் தற்போதுவரை மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது..
டூரிஸ்ட் ஃபேமிலி
இந்த நிலையில், இந்த வருடம் அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது.. அதில், விக்கி கவுஷால் நடித்த ச்சாவா முதலிடத்தில் உள்ளது. வெறும் 90 கோடி ரூபாயில் உருவான இந்த படம், 800 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் ஈட்டியுள்ளது. அதேபோல பிரதீப் ரங்கநாதன் நடித்திருந்த டிராகன் படம் 300 சதவிகித லாபத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
மேலும், வெறும் 7 கோடி ரூபாயில் உருவான 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம், சுமார் 90 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் குவித்து நடப்பாண்டில் அதிக லாபம் ஈட்டித் தந்த இந்தியப் படமாக சாதித்துள்ளது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. அதாவது, தயாரிப்புச் செலவைவிட 1200 சதவிகித லாபத்தை இந்த படம் ஈட்டியிருக்கிறதாம். இதுதான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications