இன்ஸ்ட்டா பிரபலம் நாகலட்சுமி மரணம் பலருக்கு பாடம்.. சீரியல் நடிகை ரிஹானா ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நங்கநல்லூரில் நடந்த நாகலட்சுமி கொலை சம்பவம், சாதாரண குற்றச் செய்தி மாதிரி கடந்து போய்விடக்கூடிய விஷயம் இல்ல. கஷ்டப்பட்டு வளர்ந்து வந்த ஒரு பெண் தன்னுடைய கணவராலேயே கொலை செய்யப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து நடிகை ரிஹானா உருக்கமாக பேசியிருக்கிறார்.

Chennai Crime Nagalakshmi Rihana Women Safety

இன்ஸ்டா பிரபலம் நாகலட்சுமி

நாகலட்சுமி யார் என்றால், ஒரு சாதாரண வீட்டு பொண்ணு மட்டும் சொல்ல முடியாது. ரொம்ப கஷ்டப்பட்டு, தன்னாலே ஒரு வாழ்க்கையை கட்டி எழுப்பியவர். "ரெடி டு வேர் சேலை"ன்னு ஒரு ஐடியாவை எடுத்துக்கிட்டு, அதையே பெரிய பிசினஸா மாற்றி, நிறைய பேருக்கு வேலை கொடுத்தவர். கடைக்கே வந்த வாடிக்கையாளர்களோட நன்றாக பேசுவார், குறைந்த விலைக்கு நல்ல சேலை கொடுப்பார் - இதெல்லாம் தான் அவரை பிரபலமாக்கியது.

ஆனா அந்த வெற்றி வாழ்க்கைக்குள்ளேயே ஒரு பெரிய பிரச்சனை ஓடிக்கிட்டே இருந்துச்சு. குடும்பத்துக்குள்ள ஏற்பட்ட கருத்து வேறுபாடு, கணவர்-மனைவி இடையிலான தகராறு - இது நாளுக்கு நாள் அதிகமா போய்ட்டு, கடைசியில் இப்படியொரு கொடூரமான முடிவுக்கு வந்திருச்சு. வெளியுலகத்துக்கு தெரியாத பிரச்சனைகள் வீட்டுக்குள்ள எவ்வளவு ஆழமா இருக்கும் என்பதுக்கே இது ஒரு உதாரணம்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு நடிகை ரிஹானா பேசின வீடியோ தான் வைரலாகி வருகிறது. அவங்க சொன்ன ஒரு விஷயம் ரொம்ப பேரை யோசிக்க வச்சிருக்கு. "ஒரு பெண் இவ்வளவு வளர்ந்திருக்கிறார் என்றால், அதுக்குப் பின்னால் எவ்வளவு கஷ்டம் இருக்கும் என்று யோசிக்கணும்"

பெண்களின் கஷ்டம்

சென்னைக்கு வெளியூர்ல இருந்து வர்ற பெண்கள், தனியா வாழ்ந்து வேலை பாக்குறது எவ்வளவு கஷ்டம், அதுவும் பத்து நிமிடத்தில் சேலை கட்டுவது போல ஈசியாக ரெடி மேட் புடவை, அதிலும் விதவிதமான மாடல்கள் எல்லாமே அவராக யோசித்து உருவாக்கியது. அவருக்கென ஒரு அடையாளத்தையே இந்த தொழிலில் அவர் ஏற்படுத்தி வைத்திருந்தார். ஆனால் அந்த அளவுக்கு கஷ்டப்பட்டு வந்த ஒரு வாழ்க்கை, ஒரே நாள்ல இப்படி முடிஞ்சுடுச்சு என்பதுதான் எல்லாரையும் கலங்க வைக்குது.

நடிகை ரிஹானா வீடியோ

அதோட, நாகலட்சுமி வாழ்க்கையில் நடந்தது போல தன்னோட குடும்பத்துல நடந்த ஒரு சம்பவத்தையும் பகிர்ந்திருக்கிறார். அதாவது தன்னுடைய சொந்த தம்பி குடும்பத்திலும் இதே போலத்தான் கணவன் மனைவி பிரச்சனையால் தற்கொலை ஏற்பட்டதாகவும் இதுபோல பல குடும்பத்தில் கணவன் மனைவி பிரச்சினையால் குழந்தைகள் பெற்றோர்களை இழக்கிறார்கள், இது எவ்வளவு பெரிய வேதனை?

அந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்கள் இனி உள்ள வாழ்க்கையை எவ்வளவு கஷ்டத்தோடு கடந்து வருவார்கள். அதனால் இனியாவது இதுபோல ஒரு சம்பவம் யாரும் யோசிக்கக்கூட செய்யக்கூடாது. ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் அவரை விட்டு விலகி விடுவது தான் சரி. அதை விட்டுவிட்டு அடுத்தவருடைய வாழ்க்கையையும் முடித்து, நம்முடைய வாழ்க்கையையும் அழிப்பது எந்த வகையில் நியாயம் என்று ரிஹானா கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தனிமை வாழ்க்கை

மேலும் ரிஹானா பேசும்போது, கணவன் அல்லது மனைவி இருவரும் ஒருவருடைய வாழ்க்கைக்கு துணையாக இருப்பார்கள் என்று பார்த்தால் ஒருவர் நான் முன்னேறவில்லை என்றால் நீயும் முன்னேறக்கூடாது, நீ நல்லாவே இருக்க கூடாது என்று நினைக்கிறவங்களாக இருந்தால் அந்த வாழ்க்கை என்ன ஆகும்? இது போன்ற வாழ்க்கையை பார்க்கும் போது இப்ப இருக்கிற லிவ்விங் ரிலேஷன்ஷிப் எவ்வளவோ பெட்டர் என்று தோன்றுகிறது.

பிடித்தால் வாழ வேண்டும் பிடிக்கவில்லை என்றால் விலகிப் போய் விட வேண்டும். அதுதான் இனி சரியாக வருமோ என்று கூட நினைக்க வைக்கிறது. வாழ்க்கைக்கு துணையாக வருவார்கள் என்று நினைத்து... இப்படி வாழ்க்கையை இழப்பதற்கு தனியாகவே வாழ்ந்துவிடலாம் என ரிஹானா ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+