அய்யனார் துணை: சேரனுக்கு நடக்கும் அவசர கல்யாணம்.. நிலா சொன்ன ஐடியாவால் அதிர்ச்சியில் கார்த்திகா.. தரமான சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் அனைவரும் எதிர்பார்த்தபடி சேரன் மற்றும் கார்த்திகா கல்யாணம் எளிமையாக நடக்கிறது. ஆனால் இனி தான் பிரச்சனையே வரப்போகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல் டிஆர்பியில் டாப் இடத்தில் இருந்து வருகிறது. அதிலும் கடந்த வாரத்தில் இந்த சீரியலில் பல எதிர்பாராத சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த சீரியலில் கடந்த வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை கூட ஸ்பெஷல் காட்சிகள் ஒளிபரப்பானது. அதுவும் நல்ல டிஆர்பி பெற்றிருக்கிறது. கிராமப்புற மக்கள் மற்றும் நகரப்புற மக்களின் வரவேற்பை இந்த சீரியல் பெற்று வருகிறது.

இந்த சீரியலில் சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என நான்கு அண்ணன் தம்பிகள் இருக்கிறார்கள். இவர்களின் தந்தை குடித்துவிட்டு ஊதாரியாக இருக்கிறார். ஆனால் மூத்த அண்ணன் குடும்பத்தை கட்டி காத்து வருகிறார். அதேபோல இந்த வீட்டில் பெண்களே தாங்காத வீடு என்று ஊர் காரர்கள் எல்லோருமே இவர்களை ஒரு மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் தான் சோழன் ஒரு வீட்டிற்கு கார் ஓட்டுவதற்காக சென்றிருந்தார். அங்கு முதலாளி பொண்ணு நிலாவை காதலித்து இருந்தார்.
ஆனால் அவருக்கு ஏற்கனவே எங்கேஜ்மென்ட் நடந்துவிட்டது என்பதால் காதலை சொல்லாமல் இருந்தார். அந்த நேரத்தில் நிலாவிற்கு அந்த திருமணத்தில் சம்மதம் இல்லை என்பதை தெரிந்து கொண்டதும் சோழன் சந்தோசத்தில் இருந்தார். அப்போது நிலா தனக்கு உதவி செய்யும்படி சோழனிடம் கேட்க, கடைசியில் எதிர்பார்க்காத சூழ்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் சோழன் தன்னுடைய அண்ணன் தம்பிகளிடம் நிலா தன்னை ஆசைப்பட்டு கல்யாணம் செய்ததாக முதலில் ஏமாற்றுகிறார்.
ஆனால் சில நாட்களுக்கு பிறகு இருவரும் கட்டாயத்தால் திருமணம் செய்து கொண்ட உண்மைகளும் தெரிய வருகிறது. ஆனாலும் நிலாவுக்கு தன்னுடைய பெற்றோர் மற்றும் அண்ணன் தொந்தரவு அதிகமாக இருப்பதால் வீட்டை விட்டு வெளியே போக முடியாமல் சோழன் வீட்டிலேயே இருக்கிறார். அதேபோல அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் கல்யாணத்தையும் பண்ணி வைக்க வேண்டும் என்று நிலா நினைத்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் தான் வீட்டின் மூத்த அண்ணன் சேரன் அவருடைய அத்தை மகள் கார்த்திகாவை காதலித்துக் கொண்டிருக்கிறார்.
இவர்கள் இருவருக்கும் கோவிலில் வைத்து திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று நிலா முயற்சி செய்தார். ஆனால் கார்த்திகா குடும்பத்திற்கு இந்த விஷயம் தெரிந்து கார்த்திகாவை அனுப்பாமல் அடைத்து வைத்து விட்டனர். இப்போது கார்த்திகாவுக்கு அவசரமாக வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்கப் போகின்றனர். ஆனால் திருமணத்திற்கு முதல் நாள் இரவு கார்த்திகா சேரனை தேடி வீட்டிற்கு வந்திருக்கிறார்.
அதோடு நான் இனி அந்த வீட்டிற்கு போக மாட்டேன் என்று கார்த்திகா சொல்லி இருப்பதால் இந்த வீட்டில் வைத்து திருமணத்தை நடத்திவிடலாம் என்று நிலா சொல்கிறார். சேரனை அதற்காக கிளம்பி வர சொல்கிறார். ஏற்கனவே நிலா மற்றும் சோழன் ஜோடி மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்து இருக்கின்றனர். அதை தொடர்ந்து சேரன் மற்றும் கார்த்திகா இருவருக்கும் திருமணம் நடந்து விட்டால் இந்த ஜோடிக்கும் நிறைய ரசிகர்கள் உருவாகி விட்டனர். ஆனாலும் திருமணத்திற்கு பிறகு கார்த்திகா குடும்பத்தால் சேரன் குடும்பத்திற்கு என்னவெல்லாம் பிரச்சனை வரப்போகிறது என்று பார்க்கலாம்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications