சும்மா நச்சுன்னு.... கமெண்ட் சொன்ன ஆரி... எல்லாத்துலயும் தனக்கென்று.. தனி ஸ்டைல்... தான்
சென்னை: சேரனின் திரைப்படத்தை பற்றி வெளியிட்ட ஆரியின் கருத்துக்கு சேரன் நன்றி கூறியுள்ளார்.
ஆரியின் மனதை கவர்ந்த திரைப்படத்தின் கருத்துகள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
மாற்றி மாற்றி நன்றி மழைகளை பொழிவதால் சமூக வலைத்தளத்தில் கொஞ்சம் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளதாம்.

ஆரியின் கருத்து
"ஆனந்தம் விளையாடும் வீடு" படத்தை பற்றி மூன்றே வார்த்தையில் ஆரி அவர்கள் கூறிய கருத்தை பார்த்து.... இவ்வளவு பெரிய படத்தோட கான்செப்ட.. அசால்டா... மூணு வார்த்தைல.. சொல்லிட்டீங்களே தலைவா என்று ஆரியை பாராட்டி வருகின்றனர். தங்கள் படத்திற்கு பாசிட்டிவ் கருத்து தெரிவித்ததற்காக ஆனந்தம் விளையாடும் வீடு படக்குழுவினரும் அவருக்கு நன்றி சொல்லி வருகின்றனர்.

டைட்டில் வின்னர்
பிக் பாஸ் சீசனில் இதுவரை வந்த சீசன்களில் ஆரம்பத்திலிருந்தே இவர்தான் வெற்றியாளர் என்று பெரும்பாலானோரால் சரியாக கணிக்கப்பட்டு வந்த போட்டியாளர் ஆரி.அவரும் மக்களின் கணிப்பை பொய்யாகாமல் டைட்டிலை வின் பண்ணினார். ஜல்லிக்கட்டு மற்றும் தமிழ் கலாச்சாரம் சார்ந்த போராட்டங்களில் பங்குபெற்ற போராளியாகவும் தமிழ் பற்றாளர் ஆகவும் அறியப்பட்ட ஆரி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தபொழுது தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஏனென்றால் இப்படித்தான் ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் வீரத்தமிழச்சி என்று பெயர் பெற்ற ஜூலி பிக்பாஸ் வீட்டில் தன் பெயரை தானே நாரடித்துக் கொண்டார்.

புது தத்துவம்
ஜூலியை போன்று தனது பெயரை கெடுத்துக் கொள்ளாமல்.'என் வழி.. தனி வழி... அதுவும் நேர்வழி....' என்று ஆரம்பத்திலிருந்தே நன்றாகவும் சிறப்பாகவும் விளையாடி மக்களின் பேராதரவுடன் டைட்டில் பட்டத்தை கைப்பற்றினார். "தவறு செய்யாமல் இருப்பதைவிட.. தவறு செய்வதை தட்டிக் கேட்காமல் இருப்பது தான் பெரிய தவறு.." என்று தனது பெர்பாமன்ஸ் மூலம் காட்டினார். பிக்பாஸ் க்கு பிறகு இவருக்கு மிகப் பெரிய ரசிகர் வட்டமே உருவாகியது. கமலஹசன் கூட ஆரி க்கு தன்னுடைய கட்சியில் மிகப்பெரிய பொறுப்பு தருவதாக அழைத்ததாகவும்,ஆனால் ஆரி அதை மறுத்து விட்டதாகவும் அந்த நேரத்தில் ஒரு வதந்தி கூட கிளம்பியது.

குற்றம் பார்க்கின் ...சுற்றம் இல்லை
பிக்பாஸ் வெற்றிக்கு பிறகு பல படங்களில் கமிட் ஆகியிருக்கும் ஆரியின் படங்களுள் ஒன்றான பகவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரீசன்ட் ஆக ஆனந்தம் விளையாடும் படத்தை பார்த்துவிட்டு பத்திரிக்கையாளர்களிடம் கருத்து கூறிய ஆரி.. கௌதம் கார்த்திக், சேரன் உட்பட அனைவரும் சிறப்பாக நடித்து இருப்பதாகவும், "குற்றம் பார்க்கின்.., சுற்றம் இல்லை.." என்ற கருத்தைத்தான் படத்தின் கருத்தாக இருப்பதாகவும் கூறினார். ஆரியின் படத்தை பற்றிய இந்த கமெண்டுகளை பார்த்த ஆரி ரசிகர்கள், படத்தைப் பற்றி சும்மா நச்சென்று மூன்று வார்த்தையில் பட குழுவினரை விட தெளிவாக சொல்லிவிட்டதாக பாராட்டி வருகின்றனர்.இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சேரன் அவர்களுக்கு ஆரி தான் முதலில் உடற்பயிற்சி ட்ரெயினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications